Breaking News
recent

ரிட்டன் விசா 10

(சரியாக எழு மணி பதினெட்டு நிமிசத்தில் ஜமால் கண்விழித்திப் பார்த்தான்.எதிரே கபூர்).ஜமால் எப்படிப்பா இருக்குது? லேசா மயக்கமா ஈக்குது.காலுதான் வலிக்குது.
இரு! நர்ஸ கூபிட்டுக்கிட்டு வறேன்.(கபூர் எழுந்து போகிறான்.கொஞ்ச நேரத்துல நர்ஸ் வந்துட்டா). சார் இப்ப எப்படி இருக்கு? ஒடம்புல என்கனாச்சும் வலியிருக்குதா?ஆமா சிஸ்டர் மயக்கமா இருக்குது லேச கால்ல வலி. கொஞ்ச நேரத்துக்கு அப்படித்தான் இருக்கும்.போக,போக சரியாயிடும்- நர்ஸ். டாக்டர் எட்டு மணிக்கு வருவாறு அவர்ட சொல்லுங்க.பசியா இருந்தா பிரட்டும்,பாலும் சாப்புடலாம் . சார்! பணத்த கட்டிடிங்கனா டாக்டர் செக்கப் செஞ்சதுக்குப்பொறவு ஆயாட்ட சொல்லி ரூமுக்கு மாறிடலாம். சரி நா போய் அத முடிச்சிட்டு வறேன். மச்சான் ஊட்ல உம்மா,சரிபா வுக்கெல்லாம் தெரியுமா? எப்படி நீங்க வந்திங்க யாருகூட வந்தா?- ஜமால்.
அப்பாஸ் வந்துட்டு ஊருக்கு போய்யிருக்கான். நான் ரூமுக்கு பணத்த கட்டிட்டு அப்புறமா விபரமா சொல்லுறேன் - கபூர்.
எட்டுமணி டாக்டர் இன்னும் வரல.சரியா எட்டு நுப்பதுக்கு நர்சிடம் ஜமால் கேட்டான் .ஏன் இன்னும் டாக்டர் வரல?தெரியல சார்.(இதுதான் இந்தியா இவ்வறாக மனதுக்குள் நினைத்துக்கொண்ட கபூர்) நர்ஸ் ஏதேனும் ரீசன் டாகடர் வராததுக்கு உங்கள்ட்ட கூட சொல்லமாட்டங்களா? ஆக்டிங் டாக்டர் கூடவா இல்லை? ஹா.ஹா.ஹா- நர்ஸ்.
ஏன் சிரிக்கிறீங்க சிஸ்டர்?-ஜமால். உங்க பிரதர் ரைட்??அவரு எங்கிருந்து வரார்.இது அமெரிக்கா இல்லை டாக்டர் வரலேன்னா.ஆக்டிங் டாக்டர் வந்துப்பாக்க.அப்ப நோயாளிங்களொட நிலமை? (கபூர் கேட்க).
இது இந்தியா சார் இங்க எல்லாமெ இப்படிதான் இருக்கும். எந்த மந்திரமும் செஞ்சி மாத்த முடியாது.அது தானா மக்களொட மனசுல தோனனும். படிச்ச நம்மலே மாறல சமூக மாறனும்னா முதல நாம மாறனும்- நர்ஸ்.
நல்லா சொன்னிங்க சிஸ்டர்.ஆமா நீங்க எந்த ஊரு,உங்க பேரு என்னா?-ஜமால்.
நா ஒரத்தனாடு.என் பேரு சித்ரா சார். நல்லா விபரமா இருகீங்க நீங்களே டாக்டர் படிச்சிருக்கலாமுல!
ஆமா சார் அதுக்கு வசதியில்லாம போச்சு நா +2வில 92% மார்க் வாங்குனேன்.அதிலேயும் செயின்ஸ்ல 200க்கு198 மார்க் வாங்கினேன் .என்ன பிரயோஜனம் கடவுள் பிராப்தம் இல்லாமப்போச்சு .உங்களப்பாத்தா பாவமா இருக்குது-கபூர்.( நம்ம ஆளுங்க மத்தவங்கிட்ட பேசும்போது ரொம்ப படிசவங்க மாதிரி காட்டிக்குவாங்க!வார்த்தையெல்லாம் நம்ம ஊரு பாச வராம பாத்துக்குறதுல கெட்டிக்காரங்க!அதத்தானே இப்ப கபூரும்,ஜமாலும் நர்ஸ்சிடம் பேசுவத பார்கிறோம்-ஆசிரியர்) டோக்.டோக்... டாக்டர் உள்ளே நுழைகிறார்.
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.