நெல்லிக்காய் சொதி
தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கிராம்பு - 2, பட்டை - 1, இஞ்சித் துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை : நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்கி, நான்கு துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவி, மிக்ஸியில் அரைத்து, முதல் பால், இரண்டாம் பாலை எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, நெல்லிக்காயையும் சேர்த்து வதக்கவும். பின், அத்துடன் இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். நெல்லிக்காய் வெந்ததும், முதல் பாலை விட்டுக் கொதி வந்ததும் இறக்கி விடவும். பரிமாறினால், அசத்தலாக இருக்கும்.
நெல்லிக்காய் ஜாமூன்
தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் - 1/4 கிலோ, சர்க்கரை - அரைகிலோ, சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்.
செய்முறை : முதலில் நல்ல நெல்லிக்காய்களாகத் தேர்வுசெய்து, கழுவிய பிறகு ஒரு சுத்தமான ஊசியால் நெல்லிக்காய் முழுவதும் குத்தவும். சமையல் சோடாவைத் தண்ணீரில் கலந்து அதில் நெல்லிக்காய்களைப் போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவி விட்டு, வேறு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நெல்லிக்காய்கள் `மெத்'தென்று ஆகும் வரை வேக வைக்கவும்! குங்குமப்பூவை இளம் சூடான நீரில் ஊற வைத்துக் கரைக்கவும். ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, தேவையான அளவு நீர் விட்டு, பாகுகாய்ச்சவும். பின்பு வேக வைத்த நெல்லிக்காய்களை பாகில் போட்டு, குறைந்த தணலில் சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.
நெல்லிக்காய் ரவா அடை
தேவையான பொருட்கள் : வெள்ளை ரவை - 2 கப், கடலைப்பருப்பு, உளுந்து, துவரம்பருப்பு - தலா அரைகப், பெரிய நெல்லிக்காய் -அரைகப், பச்சைமிளகாய் - 6, கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு, நெய் - 1 டேபிள் ஸ்புன், பெருங்காயம் -சிறிதளவு, உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப, தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்.
செய்முறை : பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ரவையில் தேங்காய்ப் பாலை ஊற்றிப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். நெல்லிக்காயைக் கழுவி, துருவி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மல்லி இலைகளைப் பொடியாக நறுக்கவும். அரைத்த பருப்புடன் ரவை, துருவிய நெல்லிக்காய், பச்சைமிளகாய், மல்லி சேர்த்து கலக்கவும். பெருங்காயம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கெட்டியாக இட்லி மாவு பதத்தில் கரைத்து, சூடான தவாவில் சிறு சிறு அடைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வேக விட்டு எடுக்கவும்.
அம்லா பைங்கன் பர்தா
தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 1/4 கிலோ, பெரிய நெல்லிக்காய் - 10, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், ஜீரகம் - சிறிதளவு, பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, வெங்காயம் - 1, தக்காளி - 1, உப்பு - சுவைக்கேற்ப, தனியா தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்.
செய்முறை : கத்தரிக்காயை அடுப்பில் நன்றாகச் சுட்டு, தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்து எடுத்து, கொட்டை நீக்கி, மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு, மசித்த நெல்லிக்காயைச் சேர்த்து உப்பு, தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். சிறிதளவு நீர் விட்டுக் கொதித்து வற்றியதும், கத்தரிக்காய் துண்டுகள், கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
- தஸ்மிலா,கீழக்கரை.
திங்கள், 1 செப்டம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Blog Archive
-
▼
2008
(362)
-
▼
September
(67)
- THE ESSENCE OF RAMADAN
- S M SALAHUDDIN Managing Director of ETA-Ascon Grou...
- நெல்லிக்காய் ரெஸிபிகள் செய்து அசத்துங்களேன்!.
- ஓட்டல் மேனேஜ்மெண்ட்
- காய்கறிகளில் என்ன இருக்கிறது...?
- கீரை சாப்பிடுப்பா...
- ரிட்டன் விசா11
- ரிட்டன் விசா 12
- ENGLISH ISLAMIC WEBSITES
- islamic index
- ரிட்டன் விசா13
- எமது இரத்தம்...உயிர்...உடல்...உடமை உமக்கே சொந்தம்...
- துபாயில் தினமலரை தடைசெய்ய!
- India English Newspapers
- Tamil Newspapers
- Urdu Newspapers
- Newspapers from Indian State ( Tamil Nadu )
- Newspapers from Indian State ( Delhi )
- Newspapers from Indian State ( Andhra Pradesh )
- Newspapers from Indian State ( Chandigarh )
- Newspapers from Indian State ( Goa )
- Newspapers from Indian State ( Jammu Kashmir )
- Newspapers from Indian State ( Jammu Kashmir )
- Newspapers from Indian State ( Kerala )
- Newspapers from Indian State ( Orissa )
- Newspapers from Indian State ( Rajasthan )
- Newspapers from Indian State ( Uttar Pradesh )
- Newspapers from Indian State ( Assam )
- Newspapers from Indian State ( Chhattisgarh )
- Newspapers from Indian State ( Gujarat )
- Newspapers from Indian State ( Jharkhand )
- Newspapers from Indian State ( Madhya Pradesh )
- Newspapers from Indian State ( West Bengal )
- Newspapers from Indian State ( Bihar )
- Newspapers from Indian State ( Haryana )
- Newspapers from Indian State ( Karnataka )
- Newspapers from Indian State ( Karnataka )
- Newspapers from Indian State ( Maharashtra )
- Hindi Unicode Keyboard - हिंदी कीबोर्ड
- ஆன்லைனில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்
- Tamil Nadu: Important offices in the Districts
- tamil nadu Government Undertakings and Autonomous ...
- tamil nadu Government Heads of Departments
- tamil nadu Government Secretariat
- tamilnadu Employment Online Portal
- India Universities / Educational Institutions
- இந்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி அமைப்பு
- Rajya Sabha Members HomePage
- Indian Media Units இந்திய அரசின் வெளியீட்டுத்துறைய...
- parliamentmuseum இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகம்...
- ABOUT INDIAN PARLIAMENT
- தினமலர்:நீதிமன்றத்திலும் வெற்றிக்கிட்ட தூஆச்செய்வோ...
- அல்லாஹ் போதுமானவன்!சிறுகதை-டாக்டர் ஹிமானா செய்யத்...
- நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் இணைந்து நடத்தும்-நா...
- தபால் வழி இஸ்லாமியப் படிப்பு
- குழந்தைகளும் தொலைக்காட்சியும்
- டாக்டர் ஹிமானா செய்யித் அவர்களின் இஸ்லாமிய இலக்கிய...
- ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்!
- தினமலர் வெளியிட்டாளர் கைது...!
- தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்http: //www.text...
- மக்கள் முன்னேற்றக் கழகத் தின் துவக்க விழா எப்போது?...
- ரிட்டன் விசா 14
- என்று தீரும் இந்த கொடுமை?
- சென்னையில் உடல் ஊணமுற்றோருக்கான இலவச நிக்காஹ் முக...
- அழைக்கிறோம்...வாருங்கள்...!
- இஃப்தார் நிகழ்ச்சியின் வீடியோத்தொகுப்பு!
- பெருநாள் வாழ்த்துக்கள்...!ஆனால்...?
-
▼
September
(67)
-
►
2011
(257)
-
►
December
(10)
- CM.தாஜுதீன் மகன் திருமணம்: செக்கடிப்பள்ளியில் நடைப...
- "இஸ்லாமிய இலக்கியக் காவலர்' மு.செய்யது முஹம்மது ஹச...
- சிறுபான்மையினருக்கு உள் இட ஒதுக்கீடு!
- சுப்பிரமணிய சாமிக்கு கைது வாரண்டு!
- குடும்ப அட்டைகள் கால அவகாசம் மேலும் ஒரு ஆண்டுக்கு ...
- மீன் எண்ணெய் ரத்த புற்று நோயை கட்டுப்படுத்தும்: ஆய...
- அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு!
- ஷம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன செய்யும்?
- அதிரையில் எலி காய்ச்சல்!
-
►
December
(10)
-
►
2012
(41)
-
►
April
(10)
- சித்தீக் பள்ளிவாசலில் நடப்பது என்ன? கள ஆய்வு!
- துலுக்கா(தக்வா)பள்ளியில் ஒட்டப்பட்டு, கிழித்தெரியப...
- சித்தீக் பள்ளிவாசல் நிலம் மோசடியா? கள ஆய்வு 2
- பிபிசி ஊடகவியல் கல்லூரி
- வேண்டாத குப்பைகளை விலக்குவோம்
- பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களுக்கு தீவைப்பு(பட...
- முஸ்லிம்களுக்கு காத்திருக்கும் ஆபத்துகள்?
- சாதிவாரி கணக்கெடுப்பு: முஸ்லிம்களின் கவனத்திற்கு.....
- AFFA வின் அதிரை கால்பந்து இன்று இறுதி ஆட்டம்!
- அதிரை வருகிறார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்!
-
►
May
(24)
- சமூக உருவாக்கத்தின் அடிப்படைகளை ஊடகங்களே தீர்மானிக...
- 26-ம் ஆண்டில் மணிச்சுடர் நாளிதழ்!
- அதிரையில் முஸ்லிம்லீக் தலைவர்!
- ஜேர்மனியில் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகவே புதிய கட்...
- ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்பட...
- முஸ்லிம் லீக் தலைவர் பேசியது தவறா? சலசலப்பில் அதிர...
- யுனெஸ்கோ பிராந்திய ஆலோசகராக அசன் முகமது ஜின்னா நிய...
- முஸ்லிம்களுக்கான தனி ஊடகம்!
- +2 results 2012
- கப்ருகளில் ஸியாரத்
- தமுமுக தொண்டர் மீது கொலைவெறித்தாக்குதல்;பள்ளிவாசலை...
- இஸ்லாம் கூறும் தவ்ஹீத் - யூஸுப் அல் கர்ளாவியின் கு...
- கொலைவெறியாட்டம் நடந்த போது... காணொளி பேட்டி
- எகிப்து தேர்தல்: இஹ்வானுல் முஸ்லிமீனின் முர்ஸி தொட...
- கந்தூரி ஊர்வலம் - தடைவிதிக்க கோரிக்கை...
- டெங்கு காய்ச்சல்: தகவலும் எச்சரிக்கையும்!
- பட்டுக்கோட்டையில் நடந்த சமூக பொருளாதார கல்வி விழிப...
- நான் புரிந்துக்கொண்ட நபிகள் - A. Marx உரை!
- கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?
- தமிழக முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய இலங்கை அர...
- BSNL சார்பில் கையடக்க கணினி அறிமுகம்: விலை ரூ.3495...
- Free VIsa 2 U.K.,U.S.A.& AUSTRALIA
- துபாய் பயணிகளை பரிதவிக்கச் செய்யும் ஏர் இந்தியா எக...
- MoonTv Live
-
►
April
(10)
0 மனம் திறந்து:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்