
சொமாலியாவில் திருமண பந்தத்துக்கு வெளியில் உறவு வைத்திருந்ததாக இஸ்லாமிய ஷரியா சட்ட நீதிமன்றத்தினால் பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அயிஷா இப்ராஹிம் துஹுலோ, சாகும் வரையில் கல்லெறிந்து மரண தண்டனையை நிறைவேற்றினர்.
"திருமண பந்தத்துக்கு வெளியில் தொடர்பு வைத்திருந்ததாக" இப்பெண்மணி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்
என்று அந்த வட்டாரத்தின் இஸ்லாமியத் தலைவர் ஒருவர் விபரம் தெரிவித்தார்.
"குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்"
என்று அந்தப் பெண்ணிடம் பல முறை கேட்கப்பட்டிருந்தது.
""ஆனால் அந்தப் பெண்ணோ தான் ஷரியா சட்டத்தையே விரும்புவதாகவும், தனது குற்றத்துக்காக தான் தண்டிக்கப்படத்தான் வேண்டும்""
என்று கூறியதாகவும் இஸ்லாமியப் பிரமுகர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்