Breaking News
recent

புகழைத் தேடி அலையாதீர்!

நீ மிகவும் நல்லவன், உன்னைப் போல் விரைந்து பணியாற்றுபவனை பார்க்கவே முடியாது,'' என்று உங்கள் நண்பரின் பணிகளைப் பாராட்டுங்கள். உடனே அவர் மனம் குளிர்வார். அன்றைய பணிகளை இன்னும் வேகமாக முடிப்பார். ஏனெனில், புகழ்ச்சியான வார்த்தைகளை எல்லோருமே விரும்புகிறார்கள். ஒரு சிலர் புகழ்ச்சியை காசு கொடுத்து வாங்குகிறார்கள். தங்கள் செலவில் தங்களுக்கே பாராட்டு விழா நடத்துவது, போஸ்டர் அடிப்பது என புகழ்ந்து கொள்கிறார்கள்.

ஆனால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் புகழ்ச்சியை விரும்புவதில்லை. தற்புகழ்ச்சி கூடாது என்பதை சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஒருமுறை அவர்கள் எடுத்துரைத்தார்கள். முஆதுப்னு அப்ரா அவர்களின் மகள் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைக்க அண்ணலார் வந்தார்கள். திருமண நிகழ்ச்சிக்கு வந்த நாயகம் அவர்களைப் பார்த்து மகிழ்ந்த குழந்தைகள், இஸ்லாமைக் காக்கும் போரான பத்ருப் போர்க்களத்தில் இறந்து போன வீரர்களைப் பற்றிய இரங்கல் பாடல்களைப் படித்தார்கள்.

நாயகம் அவர்கள் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடல்கள் முடிந்ததும், ""நாளை நடக்கப்போவதை அறிந்த திருநபி அவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்,'' என்று பொருள்படும் வகையிலான ஒரு பாடலை ஆரம்பித்தனர். உடனே அண்ணலார், அவர்களிடம், ""குழந்தைகளே! இந்தப் பாடல் வேண்டாம். நீங்கள் முதலில் பாடிய பத்ரு ஷஹீதுகள் பற்றிய பாடல்களையே பாடுங்கள்,'' என்றார்கள்.

இப்படி தன்னைப் புகழ்ந்து பாட அனுமதிக்காத பெருந்தகையாளர் அண்ணலார் அவர்கள். அவர்களது வழி நடந்து, புகழைத் தேடி அலைவதை இனியேனும் தவிர்க்க வேண்டும்.

லால்பேட்டை . காம்

லால்பேட்டை . காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.