Breaking News
recent

பாலஸ்தீனத்தின் மீது 3 வது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை

பாலஸ்தீனத்தின் மீது 3 வது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை

டிச. 30
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் நேற்று 3 வது நாளாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இது வரை இந்த தாக்குதல்களில் பலியாணோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன சுயாட்சி பகுதிக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு பேச்சுவாத்தை மூலம் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலை 26 ம் தேதிக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் கெடு விதித்து இருந்தது.ஙூஙூ இந்த கெடு முடிந்ததை அடுத்து கடந்த 27, 28, ஆகியதேதிகளில் பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் கடுமையான குண்டு வீச்சுசை நடத்தியது. நேற்று 3 வது நாளாகவும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

ஒரு புறம் ராணுவ டாங்கிகளும் இன்னொரு புறம் விமானப்படை விமானப்படை விமானங்களும் நடத்திய இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. இதே போல தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் தனது ராணுவ தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதே போல பாலஸ்தீனமும் தனது சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, மருத்து பொருட்கள் தாராளமாக கிடைக்க இஸ்ரேல் வழி விட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கூ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1967 ம் ஆண்டுக்கு பிறகு இஸ்ரேல் ராணுவம் இப்படி ஒரு பெரிய தாக்குதலை நடத்தி 300 க்கும் மேற்பட்டோரை கொன்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

2 கருத்துகள்:

  1. ///பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, மருத்து பொருட்கள் தாராளமாக கிடைக்க இஸ்ரேல் வழி விட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கூ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1967 ம் ஆண்டுக்கு பிறகு இஸ்ரேல் ராணுவம் இப்படி ஒரு பெரிய தாக்குதலை நடத்தி 300 க்கும் மேற்பட்டோரை கொன்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.//

    இலங்கை என்ற நாடு இருப்பது ஏன் பான் கீ மூனுக்கு மறந்துவிட்டது ?

    பதிலளிநீக்கு
  2. அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் அத்துமீறல்களை கண்டிக்கும் திறானி அற்ற நிலை நமது உலக நாடுகள் இருப்பது வேதனை அளிக்கிறது. பழைய இந்தியாவாக இருந்து இருந்தால் இன்நேரம் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கும் .நமது பிரதமர் உலக கொலைகாரன் புஷ்யை காதலிக்கிறார் என்ன செய்வது . வலைகுடா நாடுகள் தங்களது வர்த்தகத்தை ,பணத்தை அமெரிக்காவில் இருந்து திருப்பி எடுக்கவேண்டும் அப்போதுதான் அமெரிக்கா அடிபனியும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.