அபுதாபியில் இலவச பேருந்து சேவை
அபுதாபியில் போக்குவரத்துத்துறை சார்பில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதமாக இச்சேவை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்துக் கட்டணம் மார்ச் 2009 முதல் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. அதுவரை பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தினமும் இப்பேருந்து சேவையின் காரணமாக சுமார் 50,000 பேர் பயன்பெற்று வருகின்றனர்.
படிப்படியாக அதிக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சேவையின் காரணமாக குறைவான ஊதியம் பெறும் அனைவருக்கும் பெரும் பயன் அளித்து வருவதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்