ஆப்கனில் தமிழர் கடத்தல்: சோகத்தில் மூழ்கிய பிரம்மகுண்டம் கிராமம்
விழுப்புரம், டிச. 25: ஆப்கானிஸ்தானில், தமிழக வாலிபர் சைமன் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இதனால் இவரது சொந்த ஊரான பிரம்மகுண்டம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டத்தைச் சேர்ந்தவர் சைமன் (எ) வாசு (31). இவர் கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு சமையல் வேலைக்குச் சென்றார். இவரை இவரது அண்ணன் சுப்பிரமணியன் அங்கு அழைத்துச் சென்றார்.
இவர் அக். 13-ம் தேதி ஹேரத் மாவட்டத்தில் பக்ராம் விமானதளத்தில் தங்கியிருந்த சர்வதேச பாதுகாப்பு படையினருக்கு உணவு கொடுக்கச் சென்றார்.
அப்போது சைமனை தலிபான்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். அவருடன் சென்ற மேலும் இருவர் கடத்தப்பட்டனர்.
சைமனுக்கு கடந்த 98-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு வசந்தி என்ற மனைவியும், நிர்மலா, அஜீத் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். சைமன் கடத்தப்பட்ட தகவல் அறிந்த பிரம்மகுண்டம் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
சைமனின் மனைவி வசந்தி மனமுடைந்து காணப்பட்டார். சைமனை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சைமன் கடந்த 2000-ம் ஆண்டு மஸ்கட் சென்று அங்கு 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். கடந்த ஜனவரி மாதம்தான் அவர் ஆப்கானிஸ்தான் சென்றார். சைமன் கடத்தப்பட்டதால் வெளியூர் வேலைக்குச் சென்றுள்ள இளைஞர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்