Breaking News
recent

மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

மரியம்குமாரன்


தீஸ்தா செட்டில்வாட். இவர் பெயரில் தீ இருக்கிறது. அண்மையில் இவரது சென்னை வருகையில் பரபரப்பு பற்றிக் கொண்டது.


மதச்சார்பற்றோர் மாமன் றம் சென்னையில் 11.12.2008 அன்று “மதச்சார்பற்ற ஜன நாயக இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்’’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கை நடத்தியது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்ற வந்திருந்தார் மனித உரிமைப் போராளியும், சங்பரிவாரத்தின் சிம்ம சொப் பனமும், கம்யூனலிசம் காம் பேட் இதழின் ஆசிரியரு மான திருமதி தீஸ்தா செட்டில்வாட்.


மதவாத பாசிசத்திற்கெதிரான மனித உரிமைப் போராளியான தீஸ்தாவை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றது குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகள்.


நரேந்திர மோடி அரசாங்கமும், குஜராத் நீதிமன்ற மும், கூட்டு முயற்சி எடுத்து படுகொலை வழக்குகளை குழிதோண்டி புதைத்தபோது, துடிதுடித்தெழுந்து வழக்குகளைத் தோண்டி எடுத்து, உச்சநீதிமன்றத் திற்குக் கொண்டு வந்தவர் இந்த வீராங்கணைதான்.


14 பேரை உயிரோடு எரித்த பெஸ்ட் பேக்கரி வழக்கில், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்தது குஜராத் நீதிமன்றம். முக்கிய சாட்சி ஜஹிரா ஷேக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்து இதை சாதித்தது மோடி கும்பல்.


இவ்வழக்கை கையிலெடுத்த தீஸ்தா, ஜஹிரா ஷேக்கினை பத்திரிக்கையாளர்களை சந்திக்க வைத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, குற்றவாளி களை மீண்டும் சிக்க வைத்தார்.


பிறகு, ஜஹிரா ஷேக் பணத்திற்காக விலைபோய், தீஸ்தாவின் முதுகில் குத்தியபோது அந்த துரோகங் களையும் எதிர்கொண்டு தனது நேர்மையை நிலைநாட்டி னார். இதனால் தேசிய ஏடுகளில் தீஸ்தா தினமும் ஒரு செய்தியானார்.


அத்தகையவரின் வருகை, மனித உரிமைப் போராளிகளுக்கு ஆனந்தத்தையும், சங்பரிவாரத்திற்கு ஆத்திரத்தையும், அலை களாய் எழ வைத்ததில் ஆச்சர்யமில்லை.


முதலில் இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில்தான் நடத்தப்பட இருந்தது.


தீஸ்தாவின் உயிரைக் குடித்துவிட காந்தியடி களைக் கொன்றவர்களின் கூட்டம் குறியோடும், வெறி யோடும் இருக்கிறது என்பதால், சமூக அக்கறைமிகுந்த பல சான்றோர்களின் அறிவுறுத்தல்படி இந்நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள “உயர்மறை மாவட்ட மறைப்பணி மையம்’’ (ஞயளவடிசயட ஊநவேசந) வளாகத்தில் உள்ள அரங்கில் நடத்தப்பட்டது.


அதிகப் பிரபலமில்லாத இந்த இடம், இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மிகப்பிரபலமாக விசாரிக்கப்பட்டது-மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனத்தலை வரும், சன்.டிவியின் அரசியல் விமர்சகருமான திரு. வீரபாண்டியனுக்கு ஏராளமான மிரட்டல்கள். நிகழ்ச்சி யின் தொடர்பாளர் தேவநேயனுக்கு மிரட்டல், குறுஞ் செய்திகள். இத்தகவல்கள் கிடைத்ததும் தமுமுக எச்சரிக்கையடைந்தது.


மதவெறியர்கள் தகாத செயல்களில் இறங்கினால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு வியூகம் வகுக்கப் பட்டது. காவல்துறை முழு வீச்சில் பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்க தினத்தன்று தமுமுக தொண்டரணியினர் தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலத்துணைச் செயலாளர் பேரா. ஜெ. ஹாஜா கனி, மாநிலத் தொண்ட ரணிச் செயலாளர் ரஃபீக், காஞ்சி மாவட்டச் செயலாளர் யாக்கூப் மற்றும் நிர்வாகிகள், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மேற்பார் வையில் மதியம் முதலே அரங்கத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைத்தனர். அனைத்து வாகனங்களும் தீவிர சோத னைக்குப் பிறகே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. அசைவுகள் அனைத் தும் பல்வேறு வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்டன.


6.30 மணியளவில் கருத்தரங்கம் தொடங்கியது. அதற்கு முன்னரே முக்கியப் பிரமுகர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. இரண்டாவது மாடியில் அரங்கம் இருந்த தால் படிகளில் கூட மக்கள் திரள் நின்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில், மும்பை பயங்கரவாதத்திற்குப் பலியான ஹேமந்த் கர்கரே உள் ளிட்ட காவல் துறை அதிகாரி கள் மற்றும் வீரர்கள், அப் பாவி பொது மக்கள் ஆகி யோருக்கு ஒரு மணித்துளி மௌன அஞ் சலி செலுத்தப் பட்டது.


மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனத் தலைவர் திரு. வீரபாண்டியன் தலைமையுரை ஆற்றினார்.


“காந்திப் படுகொலை, தேசப்பிரி வினை ஆகியவற்றிற்குப் பின்னால் இருக் கும் மதவெறிச் சதிகளை மிகத்துல்லிய மாகப் பட்டியலிட்ட வீரபாண்டியன், இன்று வரைத் தொடர்ந்து வரும் மத வெறி பயங்கர வாதங்களையும் அதை ஒழித்துக் கட்ட தேச மக்கள் ஓரணி திரள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.


தீஸ்தா செட்டில்வாட்டிற்குத் தமிழகத் தின் சார்பில் வரவேற்பும் கௌரவமும் செய்வதற்காக பொதுவுடைமை இயக்க முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணு அழைக்கப்பட்டிருந்தார்.


“தீஸ்தா செட்டில்வாட்டை கௌரவிக் கும் பணியைத் தந்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன், தேர்தல் நேரம் வந்தால் பல பத்திரிகைகள் முளைக்கும். அதன் மூலம் மக்களை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ள முயற்சிகள் நடக்கும். ஒருசார்பு செய்திகளே அவற்றில் இடம்பெறும். ஆனால், மக்களின் மீது அக்கறை கொண்டு மதவாதத்தை வேரறுப்பதற் காக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கம்யூனலிசம் காம்பேட் பத்திரிகையைத் தொடங்கினார் தீஸ்தா.


பயங்கரவாதச் செயல்கள் நடப்பதும், அவற்றைச் செய்த பழி முஸ்லிம்கள் மீதும் தொடர்ந்து கொண்டிருந்தபோது அதற்கு முடிவு கட்டியவர் தீஸ்தா’’ என்று நல்ல கண்ணு மனந்திறந்து பாராட்டினார்.


துவக்கவுரையாற்றிய தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தீஸ்தா செட்டில் வாட்டின் களப்பணி களை ரத்தின சுருக்கமாக எடுத்துரைத்தார்.


“தீஸ்தாவின் தந்தையார் பிரபல வழக்குரைஞர், அவரது வீட்டிலிருந்த விசாலமான நூலகத்தில், காந்தி, நேரு, போன்ற புகழ்பெற்றத் தலைவர்கள் எழுதிய நூல்கள் இருந்தன. அவற்றை இளம் வயதில் ஆர்வமாகப் படித்தார் தீஸ்தா. இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கர் எழுதிய நூல் ஒன்று கூட இல்லாததைக் கண்டு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தார்.


நாட்டின் வரலாற்று நூல்கள் ஒரு சார்பாகச் சொல்லப்பட்டிருப்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த தீஸ்தா, மதச்சார்பற்ற வரலாற்றை ஊன்றிப் படித்தார். பாபரி மஸ்ஜித் இடிப்பு என்ற பயங்கரவாதம் அவரை நேரடிக் களப்போராளியாக முழுவீச்சில் இறக்கியது.


அத்தகைய மனித உரிமைப் போரா ளியை தமிழ் மக்கள் சார்பாக வரவேற் கிறேன்’’ என்று பேரா. ஜவாஹிருல்லாஹ் முடித்தபோது அரங்கத்திற்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து,


தீஸ்தா செட்டில்வாட், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையினை நிகழ்த்தினார். தனது உரையில் தமுமுகவையும், அதன் தலைமையையும் மனந்திறந்து பாராட்டினார்.


கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத் தலைவர் சேவியர் அருள்ராஜ் தீஸ்தாவின் உரையை மொழிபெயர்த்தார்.


மனித உரிமை ஆர்வலர்கள், முன்னணி பத்திரிகையாளர்கள், பல்வேறு அமைப்பு களின் நிர்வாகிகள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், என பலதரப்பட்ட பிரபலங்களும் அரங்கிற்கு மதிப்பைக் கூட்டினர்.


உரையின் முடிவில் முக்கியமான கேள்விகளுக்கு தீஸ்தா பதிலளித்தார்.
நரேந்திர மோடியும் சென்னைக்கு வந்துபோனார். சென்னை மாநகரெங்கும் “மோடியே வெளியேறு’’ என தமிழ்மக் கள் வரவேற்புரை கொடுத்தனர்.


மோடியின் முகத்திரையைக் கிழித்த தீஸ்தாவுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு அவரை நெகிழ வைத்தது.


தமிழகத்தின் தனிச்சிறப்பு இந்நிகழ்ச்சியில் பிரதிபலித்தது.


www.tmmk.info

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.