புதன், 31 டிசம்பர், 2008

இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து மதுரையில் PFI ஆர்ப்பாட்டம்


கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவில் அங்கம் வகிக்கும் மனித நீதீ பாசறையின் மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம் தலைமை தாங்க மனித நீதீ பாசறையின் மாநில செயற்குழுஉறுப்பினர் A. முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட தலைவர்A.காலித் முஹம்மது, மாவட்ட செயலாளர்S.Pமுஹம்மது நஸ்ருதீன், மத்திய பகுதி தலைவர் M.ஹீரா ஜான் கிழக்கு பகுதி தலைவர் M.லத்தீப் சாஹிப், மேற்கு பகுதிதலைவர் M.அபுதாஹிர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இதில் திரளாக கலந்துகொண்டனர்.

காஷ்மீர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்!

காலத்தின் கண்ணாடியாக காஷ்மீர் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இன்றைய அரசியல் வானில் மிகக் குறுகிய காலத்தில் புகழ் பெற்ற முஃப்தி முஹம்மது சயீதின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் அவர்களுடன் ஆட்சி அதிகா ரத்தை கூட்டாக பரிமாறிக் கொண்ட குலாம் நபி ஆஸாத்தை முதல்வராக்கிய காங்கிரஸும் முன்பு அடைந்த வெற்றியை அடைய முடியவில்லை.. ஆனால் சில காலம் அரசியல் தோல்விகளை அனுபவித்த காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவின் மகன் ஃபரூக் அப்துல்லா அவரது மகன் உமர் அப்துல்லா என அப்துல்லாக்களின் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 28 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத் திருக்கிறது. தேசியக் கட்சியாகவும் மதசார்பற்ற கட்சியாகவும் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்திருக்கிறது. உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்? என தோப்புக் கரணம் போட வேண்டிய நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியும், காங்கிரசும் சரிவை சந்தித்திருக்கிறது.


ஆனால் கடந்த காலங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட தேசிய மாநாடு கட்சி வெற்றியைக் குவித்திருக்கிறது.


காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக்கட்சி செய்த தவறுகளின் இடைவெளியில் பாஜக லாபம் அடைந்தது.


மக்களைப் பிளவு படுத்தியதில் பாஜக தனது நிலையில் முன்னேற்த்தைக் கண்டது.


அமர்நாத் விவகாரத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தி தூபம் போட்டு பாஜக அரசியல் லாபம்அடைந்தது.


மக்களைப் பிளவுபடுத்தும் விபரீதத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததின் விளைவு காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.


பாஜகவை தீண்டத்தகாத சக்தியாகக் கருதி அதனைவிட்டு விலகியதால் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி முதல்நிலை சக்தியாக உயர்ந் திருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து உமர் அப்துல்லா இளம் முதல் வராக பதவியேற்க உள்ளார். அவரை வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம். கடந்த கால படிப்பினைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாததின் விளைவு இன்று ஜம்மு காஷ்மீர் மக்களைப் பிளவு படுத்தும் பிரிவினைவாத சக்தியான பாஜக வலுப் பெற்றிருக்கிறது. பாஜகவின் வெற்றி அம்மாநிலத்தில் தனிப்பட்ட முறையில் காங்கிரஸுக்கும் பொதுவாக ஒன்றுபட்ட இந்தியாவுக்கும் கிடைத்த தோல்வி யாகவே கருதப்படுகிறது.


காஷ்மீரில் பிரிவினைவாதம் தலை தூக்கும் போது ஜம்முவில் அதன் எதிரொலி பாஜக ஊட்டும் மதவாதமாக அது திசை திருப்பப்படும். பாஜகவுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படு கிறதோ அப்போதெல்லாம் குண்டுகள் வெடிக்கின்றன என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறினார்.
அதைப் போன்றே பாஜக எங்கே செல்வாக்கு பெறுகிறதோ அந்தப் பிராந்தியம் பின்னடைவை சந்திக்கப் போகிறது என்பதே கடந்த கால உண்மை. அது நிஜமாகி விடக்கூடாது என்பதே நமது பிரார்த்தனை.


மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவரான ஹேமந்த் கர்கரேயின் படுகொலைக்குப் பிறகு மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என நாட்டு மக்கள் அனைவரும் கவலையடைந்தனர். அவர்களது கவலையை நிஜமாக்கும் விதத்தில் ஒரு விரும்பத் தகாத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.


மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலை வராக நியமிக்கப்பட்ட ரகுவன்ஷி குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் புரோஹித்துக்கு நெருக்கமானவராக இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த திடுக்கிடும் தகவல்களை மேற்கொள் காட்டி ரகுவன்ஷியை தீவிர வாதத் தடுப்புப் படைத் தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கர்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பகுதியை வகித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு (மாலேகான் குண்டு வெடிப்பு தீவிரவாதி) வர வேண்டும் என கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்த தாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி, ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.


ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கர்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு வகித்தார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷி தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர் கையாண்ட அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டடாளி என்பதும் தீவிரவாதி புரோஹிதின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.


மகராஷ்ட்ர அரசு உடனடியாக தீவிர வாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக செயல்படும் தீவிரவாதி களின் நண்பரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மின் (வெட்டுத்)துறை


இந்த ஆனந்தின் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர என்ற பெஉமையான பட்டத்தை தட்டி சென்றவர் நமது மின்துறை அமைச்சர்தான். திரு. ஆற்காட்டார். முழுக்காரணமும் அவர்தனோ இல்லையோ தமிழகம் கண்ட மின்வெட்டு அவர் தலையில் தான் விடிந்தது. கிராமம் தொடக்கி சிறுநகரம் பெருநகரம் என 4 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரம்வரை இருளிலும் இருந்தன.
தொழில்துறை கடுமையான பிரச்சனைகளை சந்தித்தது. வாரத்தில் பலநாட்கள் அவை மூடப்பட்டன. இந்த மின் வெட்டு நாடளுமற்ற தேர்தலில் எதிரோலிக்களால்.

பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்!

உலகின் ஒரே வந்தேறி ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் வன்கொடுமைகள் எல்லை மீறியது. டிசம்பர் 27, 2008ல் இஸ்ரேலின் வான்படை தாக்குதலில் அந்த ஒரே நாளில் மட்டும் 205 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது. 60 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க குழந்தையான இஸ்ரேல் என்ற அந்த முறையற்ற குழந்தை ஜனித் தது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் விரட்டப்பட்ட அவர்களிடம் எந்த பகைமையும் காட்டாது சமாதானத் துடன் வாழ்ந்து வந்த ஒரு தூய சமூகத் தினரை வதைத்து அவர்களது நிலப் பரப்பை முற்றிலும் அபகரித்து தாங்கள் ஒரு இழிமக்கள் கூட்டம்தான் என்பதை நிரூபித்தார்கள். எவ்வித உரிமைகளும் வழங்காது மேற்குலகின் வக்கிரப் புத்தி யுடன் கூடிய நிதி மற்றும் ராணுவ உதவியுடன் அப்பாவிகளை வதைத்தனர்.

இப்பூமி கிரகத்தின் முதல் பயங்கர வாத நாடு இஸ்ரேல். மோசமான பயங்கர வாதிகள் யூதர்கள் என்ற இழிபெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. முஸ்லிம்களின் மூன்றாம் புனிதத்தலம் அமைந்துள்ள தியாக பூமியாம் பாலஸ் தீனத்தை முழுமையாக மீட்கும் நாள் எந்நாளோ என உலக முஸ்லிம்களும் நீதி விரும்பும் அனைத்து மக்களும் ஏங்கித் தவித்தனர். உரிமை வேண்டி போராடிய இயக்கங்களுடன் இரக்கமற்ற முறையில் போர் தொடுத்தனர் யூத கோழைகள். போரின் கொடுமைக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடும் அப்பாவி மக்களைக் கூட யூதவெறிக் கூட்டம் விட்டு வைத்ததில்லை. அகதி முகாம் களைக் கூட, அதிலுள்ள குழந்தைக் கொழுந்துகளைக் கூட கொத்துக் குண்டுகளால் குதறிய கொடுமை இந்த உலகமே கனவிலும் நினைத்துப் பார்க் காதது. ஆம்புலன்ஸ்களைக் கூட குண்டு களால் துளைத்தது. இத்தனைக் கொடு மைகள் இழைத்த இஸ்ரேலைத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் பிற ஐரோப் பிய நாடுகளும், ஏன் மன்மோகனின் அமெரிக்க காதல் அரசும் தலைமேல் தூக்கிப் பிடித்து வருகின்றன. கொண் டாடி, கூத்தாடி வருகின்றன.

இத்தகைய இக்கட்டான நிலையிலும் பாலஸ்தீன மக்களின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆத ரவு வேண்டி நின்றனர். யாசர் அராஃபத் போன்ற வர்களுக்கு தார்மீக ரீதி யிலான ஆதரவினை வழங்கிய இந்தியா போன்ற நாடுகள் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு அணியில் இணைந்து விட்ட நிலையில் பாலஸ் தீன மக்களின் உரிமைப் போருக்கான சர்வதேச ஆதரவு என்பது அரசாங் கங்களின் மட்டத்தில் அறவே இல்லை என்ற நிலையில் உலகெங்கும் உள்ள வெகு ஜன மக்களின் ஆதரவு என்ற உயிர்க் காற்றை மட்டுமே பெற்று பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகம் உலகெங்கும் ஒரு ஏக்கப் பிரச்சாரமாக வெளிப்பட்டி ருக்கிறது.

இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற விடுதலைப் போராளி களின் இயக்கம் தேர்தல் பாதைக்கு திரும்புவதாக அறிவித்தது. முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள் குதித்து பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இஸ்மாயில் ஹனியா, பாலஸ்தீனத்தின் பிரதமரானார்.
போராளி அமைப்பு, தேர்தல் பாதைக்கு பிரவேசம் செய்து பெருவாரியான வெற் றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டவோ, வரவேற்கவோ பரந்த மனம் இல்லாத போலி ஜனநாயக தத்துவ வாதிகளான மேற்குலக அரசுகள் ஹமாஸை அங்கீகரிக்க மறுத்தன. சிறப் பான முறையில் ஆட்சி செய்த ஹமாஸ் அரசை செயல்பட விடாமல் முடக்கும் சதிச்செயலை ஃபத்தாஹ் அமைப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி அமெரிக் காவும் இஸ்ரேலும் செய்தன. பாலஸ்தீன அதிபர் என்று அழைக்கப்படும் மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கோண்டி என்ற கண்டலீசா ரைஸுடனும் அதிக மாக உறவு பாராட்டத் தொடங்கினார். பாலஸ்தீனத்தின் நிதி ஆதாரம் முடக்கப் பட்டது. அரசு அதிகாரிகளுக்குக் கூட மாதாந்திர ஊதியம் வழங்க முடியா அவலத்தை ஹமாஸ் தலைமையிலான அரசு சந்தித்தது. பிற்போக்கு ஆக்கிர மிப்பு சக்திகளின் தீய நோக்கத்தை முறியடிக்கும் விதமாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஒரு சமாதான முன்முயற்சியை மேற்கொண்டார். அதனடிப்படையில் சொந்த சகோதரர் களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையை ஒழித்துக்கட்ட வேண்டும் என விரும்பினார்.ஃபத்தாஹ்வின் அப்பாஸும், ஹமாஸின் தலைவர் ஹாலித் மிஷாலும், இஸ்மாயில் ஹனியா வும் சவூதி அரேபியாவுக்கு வரவழைக் கப்பட்டனர். உணர்ச்சிமிகு சந்திப்பில் எங்கள் மூத்த சகோதரரின் (மன்னர் அப்துல்லாஹ்வின்) கட்டளைக்கு கீழ்ப் படிவோம், சமாதானத்தைப் பேணுவோம் சகோதரச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உள்ளம் உருக உறுதிமொழி மேற்கொண்டனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத் தின்படி ஹமாஸுடன் பத்தாஹ் கூட்டு அமைச்சரவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. சவூதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு இரு பிரிவு தலைவர் களும் போய் சேர்ந்த சில நாட்களில் பிளவும் பிணக்கும் தோன்றின. இது எதிரிகளுக்கு கொண்டாட்டத்தைக் கொடுத்தது. மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவின் அடியொற்றி நடந்தார். ஹமாஸ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஹமாஸின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைகள் போடும் விதமாக பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்கா தனது வக்கிரப் புத்தியைக் காட்டியது. பொருளாதாரத் தடையால் உயிர் காக்கும் மருந்துகள், எரிபொருள், உணவு, மின்சாரம் என அனைத்தையும் இழந்து பெரும் துயரத்தைச் சந்தித்தனர் காஸா பகுதி மக்கள். நிவாரணப் பொருட்களை சுமந்துகொண்டு சர்வதேச உதவிக் குழுக்கள் படகுகளில் வந்த போது அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் அனுமதி மறுத்தது. பொறுமை இழந்த ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடை யிலான சமாதானப் பேச்சுவார்த்தையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எகிப்து முன்னெடுத்தது. இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஹமாஸுக்கும் இஸ்ரேலுக் கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாதம் 19ஆம் தேதி ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் தொட ருமா? என கேள்விகள் எழுந்தபோது போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட மாட்டாது; போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என அறிவித்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி இஸ்ரேல், எல்லைகளை மூடியது. சொல்லொணாத் துயரங்களை விளைவித்தது. 15 லட்சம் மக்கள் இன்று காஸாவில் வாழ்வாதார உதவிகள் ஏதுமின்றி வாடி வருகிறார்கள். உணவு, உயிர்காக்கும் மருந்துகள் ஏதுமின்றி தவிக்கும் நிலையில் ஹமாஸ் மற்றுமொரு இண்டிஃபாதாவை (மக்கள் போர்) அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கிய முதல் நாள் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியா னார்கள். இரண்டாவது நாள், மூன்றா வது நாள் என தொடர்ந்து தனது வன்தாக்குதலை இஸ்ரேலை தொடர்கிறது.
இதுகுறித்து காஸா பகுதியின் சமாதான ஆர்வலரும், புகைப்பட செய்தியாளருமான சாமெஹ் ஏ. ஹபீப் குறிப்பிடும் பொழுது “சனிக்கிழமை காலை 11 மணிக்கு எப்.16 வகையைச் சேர்ந்த குண்டுவீசும் 60 விமானங்கள் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந் தன. நூறு காவல் நிலையங்கள் மற்றும் காஸா பகுதியிலுள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின. முதல் குண்டு வீச்சில் 160 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர் களில் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கட்டடங்களின் இடிபாடுகளுக்கிடையில் ஏராளமான உடல்கள் சிக்கிக் கொண்டுள்ளன. அல்ஜவாஸத் காவல் நிலையத்தில் மட்டும் 70 இளம் காவல்துறை அதிகாரி கள் பலியானார்கள்.
ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக பலியானார்கள். பலியான வர்களில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். ஏராளமான பெண்களும் பலியாகி உள்ளனர்.
காஸாவின் காவல்துறை இயக்குநர் தவ்ஃபீக் அல்ஜாபர் இந்த வன்தாக்குதலில் பலியாகி விட்டார். படுகாயம் அடைந்தவர் களில் மூவர் ஒரே படுக்கையில் கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய பரிதாப நிலை. எழுபதுக்கும் மேற்பட்டோர் எகிப்தின் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.மான் செய்தி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் நாசர் அல் லஹாம் தெரிவிக்கும் போது முதல் நாள் தாக்குதலில் 60 போர் விமானங்கள் கண்மூடித்தனமாக தாக்கு தலை நடத்தின.காஸாவின் அனைத்துப் பகுதிகளும் குறிவைத்து தாக்கப்பட்டன. மாநகரங்கள், பெருநகரங்கள், குக்கிராமங்கள் என எதனையும் விட்டுவைக்கவில்லை.

காஸா, ரஃபா, கான்யூனிஸ், நுசிரியாத் மஹாஜி, பைத்லஹியா, ஜபலிய்யா, பைத் ஹானூன், அல்ஷாதி, ரஃபா பகுதியில் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகள் கூட இந்தக் கொடியவர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. நடைபெற்ற அக்கிரமம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் பள்ளிவிட்டு மதிய உணவுக்காக திரும்பிக் கொண் டிருக்கும் போது இந்தக் கொடுமைகள் நடந்து குழந்தைகள் குதறப்பட்டி ருக்கிறார்கள். பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப் பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித் திருக்கிறது. காஸாவில் உள்ள 20 சதுர கிலோ மீட்டர் பகுதியை ராணுவ பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச் சர் எஹுத் பராக் அறிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் வான்தாக்குதலில் காஸாவின் உள்துறை அமைச்சக அலுவலகம் மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இரண்டும் தாக்கப் பட்டிருப்பதாக கடைசிக்கட்ட தகவலை பி.பி.சி. தெரிவிக்கிறது. இஸ்ரேலின் இந்த ஈனத்தனமான செயலை எதிர்த்து மூன்றாவது புரட்சிக்கு தயாராகுவோம் என ஹமாஸ் இயக்கத் தலைவர் காலித் மிஷால் தெரிவித்திருக்கிறார். இந்த நிமிடம் வரை அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகள், அழித்தொழிப்பு வேலைகள் தொடர்கின்றன.

ஹனியாவின் கதி?

சர்வதேச போர் விதிமுறைகளை மீறி அப்பாவிகளைக் கொல்வது மட்டுமின்றி மக்கள் தலைவர்களையும் கொலை செய்ய முயன்று வருவதை உலகமே கண்டிக்கிறது. பல்கலைக் கழகங்களின் மீது தாக்குதல் நடத்திய தோடு காஸாவின் காவல்துறை தலைவர் தௌஃபிக் ஜாஃபரையும் படுகொலை செய்த இஸ்ரேல் இன வெறி படை பாலஸ்தீன மக்களின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்யவும் கெட்ட எண்ணத் தோடு முயற்சி செய்தது. ஹனியா அலுவலகம் மீது இஸ்ரேலிய வான் படை வெறித்தனமாக குண்டுகளை வீசியது. ஹனியா அப்போது அங்கு இல்லாததால் அவர் உயிர் பிழைத்தார். யாசர் அராஃபத் அலுவலகத்தின் மீதும் இதுபோன்ற தாக்குதலை தான் இன வெறி இஸ்ரேலிய அரசு தொடுத்தது. மின்சாரத்தைத் துண்டித்தது. மெழுகுவர்த்தி ஒளியில் அந்தப் பெருந்தகை தனது அன்றாடப் பணி களை செய்ய வேண்டியதாயிற்று. இஸ்ரேலின் ஈனச் செயல்களுக்கு முடிவு எப்போது?

எதற்கும் தயார்! ஹிஸ்புல்லாக்கள அறிவிப்பு!!

“லெபனானுடனான போரில் ஹிஸ்புல்லாக்களால் முறியடிக்கப்பட்ட இஸ்ரேல் தற்போது பாலஸ்தீன மக்களின் மீது காஸா பகுதியில் அரச வன் முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாலஸ்தீனர்களுடனான கடும் தாக்கு தலை முறியடிக்க அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம். பாலஸ்தீன தெருக்களில் கண்டன கோஷங்கள் எழுப்புவதை விட அந்நாடுகளின் அரசுகள் இஸ்ரேலை வன்மையாகக் கண்டித்து தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினால் அதன் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். இன்று எகிப்தின் தெருக்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் தகவல்கள் வெளிவந்திருக் கின்றன. அவர்கள் அவ்வாறு ஆர்ப் பாட்டம் செய்வதை விட காஸா எல்லை களைத் தகர்த்துவிட்டு பாலஸ்தீனத்திற் குள்ளே நுழையுங்கள். ஆயிரக்கணக் கானோரை, பல்லாயிரக்கணக்கா னோரை, பல லட்சக்கணக்கானோரை ஒரே அடியாகக் கொல்ல அவர்களுக்கு துணிவிருக்கிறதா பார்ப்போம். உங்கள் நாட்டின் எல்லைகளை உங்கள் இதயங்களால் முட்டி மோதி உடையுங் கள் எகிப்திய சகோதரர்களே!’’ என ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ் அறைகூவல் விடுத்தி ருக்கிறார்.

லெபனானின் பகுதிகளை யூத விரோதிகள் தாக்குதல் நடத்தினால், மரண அடி நிச்சயம் என்ற ஹிஸ்புல் லாஹ் தலைவர், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் அரசுகளை இஸ் ரேலை எதிர்த்துப் போராட நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அபூசாலிஹ்
tmmk.in

அபுதாபியில் இல‌வ‌ச‌ பேருந்து சேவை

அபுதாபியில் இல‌வ‌ச‌ பேருந்து சேவை

அபுதாபியில் போக்குவ‌ர‌த்துத்துறை சார்பில் பொதும‌க்க‌ளுக்கு இல‌வ‌ச‌ பேருந்து சேவை அளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. க‌டந்த‌ ஆறு மாத‌மாக‌ இச்சேவை பொதும‌க்க‌ளுக்கு அளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

பேருந்துக் க‌ட்ட‌ண‌ம் மார்ச் 2009 முத‌ல் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட‌ இருக்கிற‌து. அதுவ‌ரை பேருந்தில் ப‌ய‌ண‌ம் செய்ய‌ க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டிய‌தில்லை. தின‌மும் இப்பேருந்து சேவையின் கார‌ண‌மாக‌ சுமார் 50,000 பேர் ப‌ய‌ன்பெற்று வ‌ருகின்ற‌ன‌ர்.

ப‌டிப்ப‌டியாக‌ அதிக‌ பேருந்துக‌ள் இய‌க்க‌ப்படும் என‌ போக்குவ‌ர‌த்துத் துறை அதிகாரிக‌ள் தெரிவித்த‌ன‌ர். இச்சேவையின் கார‌ண‌மாக‌ குறைவான‌ ஊதிய‌ம் பெறும் அனைவ‌ருக்கும் பெரும் ப‌ய‌ன் அளித்து வ‌ருவ‌தாக‌ க‌ருத்து தெரிவிக்கப்ப‌ட்ட‌து.

செவ்வாய், 30 டிசம்பர், 2008

மாயமான புது பெ திருச்சி கோர்ட்டில் ஆஜர் - யாரும் கடத்தவில்லை என்று பரபர பு தகவல்

மாயமான புது பெ திருச்சி கோர்ட்டில் ஆஜர் - யாரும் கடத்தவில்லை என்று பரபர பு தகவல்

திருச்சி, டிச.30-

திருச்சியில் மாயமான புது பெ கோர்ட்டில் நேற்று ஆஜரானார். அ போது என்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்தார்.


திருச்சி தில்லைநகர் ரகுமானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஷர அலி. இவரது மகள் கயாத்துனிசா. அஷர அலி துபாயில் வேலை பார்த்து வருகிறார். அஷர அலியின் மனைவி ரெஜினா இறந்து விட்டார். இதனால் கயாத்துனிசா, ரெஜினாவின் தங்கை கைஜுனிசா (சித்தி) பொறு பில் தில்லைநகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு கயாத்துனிசாவுக்கும், குத்பிஷாநகரைச்சேர்ந்த நசிருதீனு க்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான 3 மாதத்தில் நசிருதீன் துபாய் சென்றார். கயாத்துனிசா தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

மாயம்

இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி கயாத்துனிசா கணவர் வீட்டில் இருந்து தில்லைநகரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் மாயமாகி விட்டார். இது குறித்து அவரது சித்தி கைஜுனிசா தில்லைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

இந்த நிலையில் நேற்று திருச்சி கோர்ட்டில் மாயமான புது பெ கயாத்துனிசா ஆஜரானார்.

அ போது அவர் கோர்ட்டில் கூறியதாவது:-

என்னை யாரும் விற்கவும் இல்லை கடத்தவும் இல்லை. திருமணமான 3 மாதத்தில் எனது கணவர் என்னை அவரது வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார்.அங்கு வரதட்சணை பிரச்சினை இருந்தது. மற்றொரு இடத்தில் வேறுவிதமான தொந்தரவு இருந்தது. எனவே விமான
நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். தற்போது கணவர் வெளிநாட்டில் இரு பதால் எனக்கு ஆதரவு யாரும் இல்லை.

இவ்வாறு அவர் க ணீர் மல்க கூறினார்.

இதைத்தொடர்ந்து மேஜர் ஆன பெ கயாத்துனிசா என்பதால், அவரது விரு ப படி முடிவு எடுக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.அ போது தன்னை மகளிர் கா பகத்தில் தங்க அனுமதிக்க வே டும் என்று கோர்ட்டில் விரு பம் தெரிவித்தார். அதன் பேரில் கயாத்துனிசா திருச்சியில் உள்ள மகளிர் கா பகத்தில் தங்கி உள்ளார்.

குறிப்பு : எனினும் துபாயில் உள்ள பெண்ணின் தந்தை மற்றும் கணவர் அப்பெண் ஏதோ சிலரது அச்சுறுத்தலுக்கு பயந்து இவ்வாறு தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்திய சிறைகளில் உள்ள 66 பாகிஸ்தானியர்கள் விடுதலை

இந்திய சிறைகளில் உள்ள 66 பாகிஸ்தானியர்கள் விடுதலை


அமிர்தசரஸ், டிச.30-

பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய சிறைகளில் உள்ள 66 பாகிஸ்தானியர்களை மத்திய அரசு விடுதலை செய்துள்ளது. அமிர்தசரஸ் சிறையில் இருந்து மட்டும் 14 பேர் விடுதலையாகிறார்கள். டெல்லி சிறையில் இருந்து ஒருவரும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில சிறைகளில் இருந்து 51 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அவர்கள் அனைவரும் அட்டாரியில் இருந்து சாலை வழியாக பாகிஸ்தானுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளனர். விடுதலையாகும் 66 பேரில் இரண்டு பெண்களும் உண்டு. ஜுபைன் மற்றும் அவருடைய மகள் ரோசன் ஆகிய அந்த இருவருடைய பாஸ்போர்ட்டில் சில கிழிசல்கள் இருந்ததால் 4 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி ரசீது தயாரித்து மோசடி பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.பி. துரைக்கு 3 ஆண்டு ஜெயில்

போலி ரசீது தயாரித்து மோசடி பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.பி. துரைக்கு 3 ஆண்டு ஜெயில்
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சென்னை, டிச.30-

பாலிடெக்னிக் அங்கீகாரம் பெறுவதற்கு வங்கியில் பணம் செலுத்தியதாக போலி ரசீது தயாரித்து மோசடி செய்த வழக்கில் முன்னாள் எம்.பி. துரை, இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் லட்சுமி நரசிமëமன் உள்பட 4 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பாலிடெக்னிக்

வந்தவாசி நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தவர் எம்.துரை. இவர், வந்தவாசி சம்புவராயர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். எஸ்.மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கின்றனர். இந்த அறக்கட்டளை சார்பில் வந்தவாசி அருகேயுள்ள பிர்தூர் கிராமத்தில் பாலிடெக்னிக் தொடங்க திட்டமிட்டனர்.

அதற்கான தொழில்நுட்ப அங்கீகாரம் பெறுவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விண்ணப்பித்தனர். இந்த அங்கீகாரம் பெறுவதற்கு வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.25 லட்சம் செலுத்தி, அந்த ரசீதை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ.25 லட்சம் போலி ரசீது

இந்த ரசீதை போலியாக தயாரிக்க திட்டமிட்டனர். அதன்படி, இந்தியன் வங்கியில் ரூ.25 லட்சம் பணமோ அல்லது காசோலையோ செலுத்தாமல் நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பதாக 3-4-98 அன்று போலி ரசீது பெற்று ஏ.ஐ.சி.டி.இ-யின் சென்னை மண்டல அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. துரை சமர்ப்பித்தார்.

போலி ரசீது தயாரிப்பதற்கு இந்தியன் வங்கி வந்தவாசி கிளையின் முன்னாள் மேலாளர் ஆர்.லட்சுமிநரசிம்மன், மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதன்மூலம் ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் இந்தியன் வங்கியை இவர்கள் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். பணம் செலுத்தாமலே போலி ரசீது தயாரித்து மோசடி செய்தது பின்னர் தெரியவந்தது.

3 ஆண்டுகள் ஜெயில்

இதுகுறித்து, முன்னாள் எம்.பி., இந்தியன் வங்கி வந்தவாசி கிளையின் முன்னாள் மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மோசடி, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ.போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. 11-வது கூடுதல் கோர்ட்டு சிறப்பு நீதிபதி எஸ்.ரங்கராஜ× இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

``இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆவணங்கள் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு உள்ளன. இந்தியன் வங்கியின் வந்தவாசி கிளை முன்னாள் மேலாளர் லட்சுமி நரசிம்மனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. முன்னாள் எம்.பி.துரை, மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது'' என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

முன்னாள் எம்.பி.க்கு ஜாமீன்

அதைத் தொடர்ந்து முன்னாள் எம்.பி. துரை அபராதத் தொகை 30 ஆயிரத்தை சி.பி.ஐ. கோர்ட்டில் செலுத்தினார். பிறகு அவருக்கான சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளித்து நீதிபதி ரங்கராஜ× உத்தரவிட்டார்.

பெரியபட்டணத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

பெரியபட்டணத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

ராமநாதபுரம், டிச. 29: கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி சார்பில்
பெரியபட்டணத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரியபட்டணம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்குக் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் அலி தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் இ. கதிர்வேல் முன்னிலை வகித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களின் அவசியம் மற்றும் எதிர்காலத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம். ஆனந்த் நன்றி கூறினார். மற்றொரு திட்ட அலுவலர் ஜி. முகம்மது இபுராகிம் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

அல்லலுறும் அரசு ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள்

அல்லலுறும் அரசு ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள்

சென்னை, டிச.29: சரியான வழிகாட்டுதல் கிடைக்காததால் அரசு ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் அல்லலுறும் அவலம் உள்ளது.

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் சென்னை அண்ணா நகரில் உள்ளது.

இந்தப் பயிற்சி மையம் தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் இந்த மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைப்படக்கூடிய விஷயம்.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது. தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றிபெறும் பெரும்பாலான மாணவர்களின் வெற்றியைத் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்த அரசு பயிற்சி மையத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்காததுதான்.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான கோணத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கேற்றாற்போல் மாணவர்களை இந்த நிறுவனத்தால் ஆயத்தப் படுத்த இயலவில்லை.

காரணம், கல்லூரியில் பணியாற்றும், பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே இங்கு பாடம் நடத்தப்படுகிறது. இவ்வாறு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இன்றைய தேர்வின் தன்மை குறித்து சரிவரத் தெரிவதில்லை. அவர்கள் கல்லூரிகளில் நடத்துவதைப்போல பாடம் நடத்துகின்றனர்.

இந்த அடிப்படையிலான கற்பித்தல் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான கற்பித்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதனால் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைப்பதென்பது கேள்விக்குறியாகிறது. இந்த ஆபத்தான போக்கை நிர்வாகம் தவிர்க்க வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் போதிய அனுபவமிக்கவர்களைக் கொண்டு பாடம் எடுக்க வேண்டும்.

தவிர, இன்றைய காலக்கட்டத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வினாக்கள் எந்த வகையில் கேட்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்து அதற்கு தகுந்தாற்போல் மாணவர்களை தயார் செய்ய உயர் அதிகாரிகளும், கல்வி நிபுணர்களும் அடங்கிய குழு ஒன்றை கூட மாநில அரசு அமைக்கலாம். அவ்வாறு அமைத்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட மத்திய உயர் பதவிகளுக்கு தமிழகத்தில் இருந்து இன்னும் அதிகமான மாணவர்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது.

இந்த அரசு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட நூலக வசதி இல்லை என்பது மாணவர்களின் ஆதங்கமாக உள்ளது.

""நூலகத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் உள்ளன. அவையும் பழைய புத்தகங்களாக உள்ளன. அவற்றில் எங்களுக்குத் தேவையான தகவல் கிடைக்காததால் நாங்கள் நகரில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு புத்தகங்களைத் தேடி அலைய வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரயமாவதோடு, சக்தியும் வீணாகிறது'' என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சரியான உணவு, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும் இந்த மையத்தில் பயிலும் மாணவர்கள் நீண்டகாலமாகவே புகார் எழுப்பி வருகின்றனர்.

""எங்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை. நாங்கள் உட்கார்ந்து படிக்கும் அளவுக்குச் சக்தி கிடைக்கக்கூடிய வகையிலாவது உணவை வழங்க வேண்டும்'' என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐபிஎஸ் பணிகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவை. அவற்றைப் பயிலும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் என்பது அவசியம். அப்போதுதான் அவர்களால் உரிய இலக்கை எட்டுவது சாத்தியமாகும். இல்லையேல் அவர்களது கனவு கடைசி வரை வெறும் கனவாகவே இருந்துவிடும். இனிமேலாவது இதை புரிந்து கொள்ளுமா பயிற்சி மைய நிர்வாகம்?

இஸ்ரேல் தூதகரம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்

இஸ்ரேல் தூதகரம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்

புதுதில்லி, டிச.30 காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில், ''இஸ்ரேல் மீதான தாக்குதலைக் இந்திய அரசு கண்டிக்கவில்லை. அரசு சார்ந்த தீவிரவாதத்தில் நம்பிக்கையுள்ள நாட்டுடன் தொடர்பு வைத்திருப்பது சர்வதேச அரங்கில் இந்திய நலனுக்கு எதிரான செயலாகும்'' என்றார்.

''இதனால் சுதந்திரமான நமது வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று மேற்காசிய நாடுகள் விரும்புகின்றன'' என்றும் பிருந்தா காரத் குறிப்பிட்டார்.

கீழ‌க்க‌ரை : க‌ட‌ற்க‌ரையில் நான்கு கிலோ மீட்ட‌ர் ந‌ட‌ந்து ப‌ள்ளிக்குச் செல்லும் ஏழை மாண‌வ‌ர்க‌ள்

கீழ‌க்க‌ரை : க‌ட‌ற்க‌ரையில் நான்கு கிலோ மீட்ட‌ர் ந‌ட‌ந்து ப‌ள்ளிக்குச் செல்லும் ஏழை மாண‌வ‌ர்க‌ள்

கீழ‌க்க‌ரையில் இருந்து நான்கு கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் உள்ள‌து ம‌ங்க‌ளேஸ்வ‌ரி ந‌க‌ர் ம‌ற்றும் பார‌தி ந‌க‌ர். இந்த‌ கிராம‌ங்க‌ள் க‌ட‌லோர‌ப் ப‌குதியாகும். இப்ப‌குதிக‌ளுக்குச் செல்லும் பாதைக‌ள் மிக‌வும் குறுகி இருப்ப‌தால் அர‌சுப் பேருந்துக‌ள் இங்கு வ‌ருவ‌தில்லை. மேலும் மினி ப‌ஸ் வ‌ருவ‌த‌ற்குரிய‌ வ‌ழியும் இல்லை. ஆட்டோ உள்ளிட்ட‌ வாக‌ன‌ங்க‌ளுக்கு ப‌ள்ளிக்கு குழ‌ந்தைக‌ளை அனுப்பும் நிலையில் இப்ப‌குதி பெற்றோர்க‌ளிட‌ம் பொருளாதார‌ வ‌ச‌தி இல்லை. என‌வே மாண‌வ‌ர்க‌ள் க‌ட‌ற்க‌ரை வ‌ழியே ப‌ள்ளிக்கு ந‌ட‌ந்து சென்று வ‌ரும் சூழ‌ல் இருந்து வ‌ருகிற‌து. இந்நிலையினைப் போக்க‌ அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

த‌க‌வ‌ல் : ஹ‌மிது யாசின்

தமிழ் நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானங்கள்!



தமிழ் நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானங்கள்!


கடந்த 27-12-08 அன்று காயல்பட்டணம் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு தீர்மானங்கள்:

1. மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை கிடப்பிற்கு போய்விடாமல் தொடர்ந்து விசாரணை நடத்திட வேண்டும். மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதில் உயிரிழந்தவர்களில் 44 பேர் முஸ்லிம்கள். எனவே தீவிரவாதத்திற்கு மதச் சாயம் பூசக் கூடாது.

2. நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்திட வேண்டும்.

3. திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க.விற்காக தேர்தல் பணியாற்றுவது

4. ஜமாஅத் மற்றும் பள்ளிகளில் தேவையற்ற குழப்பங்கள் முற்றும் வீண் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே வக்பு வாரிய தலைவர் பதவியிலிருந்து தற்போதைய தலைவரை மாற்றக் கோரி முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவது

5. ராமேசுவரம்-கன்னியாக் குமரி வரை போடப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையை காயல்பட்டணம் வழியாக போட தமிழக அரசை வற்புறுத்துவது.

இக் கூட்டத்தில் அப்துல்பாசித் வாணியம்பாடி எம்.எல்.ஏ.,கலிலுற்றஹ்மான்-அரவக்
குறிச்சி எம்.எல்.ஏ., பொருளாளர் வடக்குக்கோட்டையார், மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.ஏம்அபுபக்கர், கமுதி பஷர், நெல்லை மஜித்,அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை அப்துற் றஹ்மான்,பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, செயலாளர் ஏ.முஹம்மது தாஹா, அமெரிக்க காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் முஹமம்து நூர்தீன் உட்பட 483 பொதுக் குழு உறுப்பினர்கள் உட்பட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

http://www.kayalpatnam.in/index.php?option=com_content&view=article&id=419:2008-12-28-131951&catid=1:latest-news&Itemid=246

துபாயில் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 01.01.2009 வியாழக்கிழ‌மை காலை ப‌த்து ம‌ணிக்கு முஸ்ரிஃப் பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் அமீர‌க‌மெங்கும் உள்ள‌ இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். இந்நிக‌ழ்வின் போது க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ள் குறித்து விவாதிக்க‌ப்ப‌டும்.

இந்நிக‌ழ்வில் க‌ல‌ந்து கொள்ள‌ விரும்புவோர் த‌ங்க‌ள‌து வ‌ருகையை 050 745 0359 / 055 975 9919 ஆகிய‌ எண்க‌ளில் உறுதி செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Vasthu - வாஸ்து

வாஸ்தும் வாஸ்தவமும்


நிறைய பேர் இதில் திடீர் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.மலேசிய தமிழ் பத்திரிக்கைகளில் இப்போது வரும் விளம்பரங்களில் இப்போது இது போன்ற 'ஜல்லி'யடி விசயங்கள் அதிகம்.


இது முன்பு தமிழ் நாட்டு பத்திரிக்கை செய்தது[பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் நிறைந்த பத்தீரிக்கை,இவர்கள் எடுத்த படத்தில்தான் சில ஹிந்தி வார்த்தைகளை முஸ்லிம் பேசுவது போலவும், தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத உடை உடுத்தி 'இங்கே வர்ரான் , அங்கே போரான்" என்று சேட்டு ரேஞ்சுக்கு முஸ்லிம் தமிழ் பேசுவது போல் முஸ்லிம்களை அந்நியயபடுத்தியவர்கள்


இப்போது கொஞசம் டி வி சேனல் அதை ஆரம்பித்து இருக்கிறது
சிலருக்கு இருக்கும் பணத்தை பாதுகாக்க, சிலர் விரக்தியின் உச்ச கட்டத்தில் நாடும் வடிகால்
இவர்கள் வீட்டில் எப்போதும் பத்தி மணக்கும்,வாசலில் தண்ணீர் ஊற்று, மற்றும் "எந்திரம்" [இது தாமிரத்தகட்டில் கொஞ்சம் கோடு கொஞ்சம் எழுத்து என்று இருக்கும்]


நல்ல வேலை விவேக் இன்னும் பார்க்கவில்லை, பார்த்து இருந்த்தால்" அட பாவிங்களா..ஒரு மோட்டோர், ஒருவயர் கோட இல்லையே இதப்போய் எந்திரம்னு சொல்ரீங்களெடானு வசனம் பேசியிருப்பார்.


நிச்சயம் ஒரு தாடி வச்ச பரதேசி கோலத்தில் யாரவது ஒரு சாமியார் படம் இவர்கள் வீட்டு முன் வாசலில் தொங்கும். இந்த சாமியார்களின் உண்மையான சொத்து மதிப்பு CBI ஆசிரமத்தின் உள்ளே நுழையும் வரை தெரியாது


இது போன்ற நிறைய ஏமாற்று வேலைகளுக்கு மதத்தை ஒரு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.[இது எல்லா மதத்திலும் உண்டு] இதில் வருமான வரி இல்லாமல் ஒரு பெரிய தொகை நம் கண்ணுக்கு தெரியாமல் வியாபாரமாகிறது.


சமீபத்தில் பார்த்த கேள்வி பதில் எனக்கு ஒரு உண்மையை தெரிவித்தது..."பிள்ளைகள் நன்றாய் படிக்க என்ன வாஸ்த்து நல்லது?" பதில் ஏதோ எழுதி இருந்த்தது எனக்கு உதித்த பதில் " குறைந்த பட்சம் பிள்ளயை ஸ்கூலில் சேர்க்க வேண்டும்"


நன்றி: உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது,
மனம் மேலும் கீழும் புரளாது....பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


Zakir Hussain

அ.தி.மு.க வுக்கு அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

அ.தி.மு.க இருக்கும் வரை இந்துத்துவா அமைப்புகளும் பி.ஜே.பி.யும் தேவையில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் அருண்ஜேட்லி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார். அ.தி.மு.க.வோடு நல்லுறவு உண்டு. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டு டெல்லிக்கு அ.தி.மு.க. வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஒருமுறை வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசை அ.தி.மு.க. கவிழ்த்திருக்கிறது. ஆனால், அதனை சொந்த வீட்டுப் பிள்ளை செய்த சுட்டித்தனம் என்றே எடுத்துக் கொண்டது.

அ.தி.மு.க. மீது கொண்ட பாசம் எப்போதும் அதற்குப் பட்டுப் போனதில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பி.ஜே.பி. வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க. வாக்களித்தது.

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லைதான். அதனால் அந்தக் கட்சி இங்கே காலை ஊன்ற முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று இல்லை. அதன் உருவமும் சிதைந்துவிட்டது. கொள்கை கோட்பாடுகளும் பறந்து போய்விட்டன.

அண்மையில் ஒரிசாவில் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே ஒப்புக் கொண்டனர். பல தலைமுறைகளாக கிறிஸ்துவர்களாக இருக்கும் ஆதிவாசிகளை அந்த சாமியார் இந்துக்களாக ஞானஸ்நானம் செய்ய முயன்றார். சாமியாரின் கொலையை அ.தி.மு.க. தலைமை வன்மையாகக் கண்டித்தது. நியாயம்.

ஆனால், அதனைத் தொடர்ந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏசுவின் திருத்தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர் வனாந்தரங்களில் தொண்டு செய்ய வந்த சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் சிறுபான்மையின மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.

அதனை அ.தி.மு.க. இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கழகம் இருக்கும் வரை பி.ஜே.பி.யும் தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

ஏன்? குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்றைக்கும் அங்கே அந்தப் படுகொலைப் படலங்கள் தொடர்கின்றன.

நரேந்திர மோடியை உலகம் மனித இனப் படுகொலைக் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது. அதற்காக வாதாடியதில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால், அடுத்து அதே நரேந்திரமோடிக்கு முடிசூட்டு விழா நடந்தபோது அந்த வைபவத்தில் பங்குகொள்ள தனி விமானத்தில் ஆமதாபாத்திற்குப் பறந்து சென்றவர் செல்வி ஜெயலலிதா.
அதனை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. அதுதான் செல்வி ஜெயலலிதாவின் இயல்பு. அ.தி.மு.க.வின் இன்றைய நடைமுறைக் கோட்பாடு.

தன்னை இந்து சமயத்தின் ஏந்தல் என்பதனை செயல்படுத்திக் காட்டுவதற்கு அவர் என்றும் தயங்கியதில்லை.

மூன்று மாதங்களுக்கு முன்னால் அதே நரேந்திரமோடி சென்னை வந்தார். வேறு விழாவிற்கு வந்த அவரை தமது இல்லத்திற்கு அழைத்தார். 64 வகைப் பதார்த்தங்களுடன் விருந்து வைத்தார். தமிழகத்தின் விருந்தோம்பல் நரேந்திரமோடிக்குத் தெரியவேண்டாமா?

செல்வி ஜெயலலிதா தங்கள் அணிக்கு வந்துவிட்டால், அவரை தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்வோம் என்று ஒரு தலைவர் கூறினார். அதில் ஒரு திருத்தம். இவர்களுடைய உதவி கோரி செல்வி ஜெயலலிதா தூதுவிடவும் இல்லை. மனுப்போடவும் இல்லை.
இவர்கள்தான் அ.தி.மு.க. அரசியல் உறவு கோரி சுவர் ஏறிக் குதித்தார்கள். ஒட்டகத்தின் முதுகைச் சீர்செய்து மான்குட்டி ஆக்கிவிடும் அந்த தலைவரின் கரடி வித்தையைக் காண நாமும் தயாராக இருக்க வேண்டும்.

இவர்கள் குலுக்கப்போகும் கரங்கள் நஞ்சு நிறைந்த முட்புதர்கள் என்று இந்த வாரம் கிறிஸ்துவ மக்களின் குரலான `நம் வாழ்வும்', இளைய இஸ்லாமிய சமுதாயத்தின் சிந்தனையான `மக்கள் உரிமை'யும் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

சிறுபான்மையின மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை.
ஆனால், அசைபோட்டால் நமது இதயக் களஞ்சியத்திலிருந்து பசுமையான பல நினைவுகள் துள்ளிக்குதித்து வெளிவருகின்றன.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வெற்றிவீரராக அத்வானி பவனி வந்தார். பல மாநிலங்கள் அந்த பவனிக்குத் தடைவிதித்தன. ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் இங்கே வெற்றி உலா வந்தார்.

அடுத்து தேசிய ஒருமைப்பாட்டுக் கழகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார். சிறுபான்மையின மக்கள் கோரும் உரிமைகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்றார். அந்தக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டார். `பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவாக எங்களால் கூட இப்படி வலிமையாக வாதாட முடியாது' என்று, செல்வி ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டினார்.

பின்னர் ராமர் கோயிலை எங்கே கட்டுவது என்ற விவாதம் தொடங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம். எனவே அங்கே கட்டாமல் இத்தாலியிலா கட்ட முடியும் என்று செல்வி ஜெயலலிதா வினா எழுப்பினார். ஆயிரம் யானை பலம் பெற்றது போல் எழுந்த இந்துத்துவா சக்திகள் பூரித்துப் போயின.

இப்படி இந்து சமய சக்திகளுக்கு மட்டுமல்ல; பி.ஜே.பி.க்கும் அவர்தான் அரசியல் வழிகாட்டியாக வலம் வருகிறார்.

காலதேவனுக்கு நரைகள் பூத்திருக்கலாம். ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பெரும்பான்மை வாதங்கள் இளமையானவை. பசுமையானவை. இந்த வாதங்களை அவர் துணிச்சலோடுதான் முன்வைக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கும் மன உறுதியையும் பெற்றிருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் பெறும் வெற்றி இந்துத்துவா சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கூட கருதலாம்.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது. தங்கள் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யைவிட அந்த இயக்கம் அ.தி.மு.க.வை அதிகம் நேசிக்கிறது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் உலகம் பார்த்தது. அதிர்ந்து போனது.

அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாய் அரசு தயாராகி வருவதாகச் செய்திகள் வந்தன. வாஜ்பாய் கண்டித்தாலும் அத்வானி கண்டிக்கவில்லை.

`எந்தக் காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசைத் தொடாதே' என்று நாக்பூரிலிருந்து பகிரங்கமாக ஒரு குரல் எழுந்தது. அந்த எச்சரிக்கையை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான்.

ஆகவே, திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.விற்குக் குறுக்கே நிற்பதில்லை என்று பி.ஜே.பி. எடுத்துள்ள முடிவு அதன் கண்ணோட்டத்தில் சரியானதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி.க்கு வேலையில்லைதான்.

kumudam reporter

பாலஸ்தீனத்தின் மீது 3 வது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை

பாலஸ்தீனத்தின் மீது 3 வது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை

டிச. 30
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் நேற்று 3 வது நாளாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இது வரை இந்த தாக்குதல்களில் பலியாணோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன சுயாட்சி பகுதிக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு பேச்சுவாத்தை மூலம் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலை 26 ம் தேதிக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் கெடு விதித்து இருந்தது.ஙூஙூ இந்த கெடு முடிந்ததை அடுத்து கடந்த 27, 28, ஆகியதேதிகளில் பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் கடுமையான குண்டு வீச்சுசை நடத்தியது. நேற்று 3 வது நாளாகவும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

ஒரு புறம் ராணுவ டாங்கிகளும் இன்னொரு புறம் விமானப்படை விமானப்படை விமானங்களும் நடத்திய இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. இதே போல தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் தனது ராணுவ தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதே போல பாலஸ்தீனமும் தனது சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, மருத்து பொருட்கள் தாராளமாக கிடைக்க இஸ்ரேல் வழி விட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கூ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1967 ம் ஆண்டுக்கு பிறகு இஸ்ரேல் ராணுவம் இப்படி ஒரு பெரிய தாக்குதலை நடத்தி 300 க்கும் மேற்பட்டோரை கொன்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

ஜன.8 - சென்னை புத்தக கண்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 32வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 8ஆம் தேதி தொடங்குகிறது. கண்காட்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தொடங்கி வைக்கிறார்.

பூந்தமல்லி சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் கண்காட்சி நடைபெறுகிறது. 18ஆம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், 600 அரங்குகள் இடம்பெறுகின்றன.


இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி புத்தகங்கள் மட்டுமின்றி ஆடியோ, வீடியோ குறுந்தகடுகளும் விற்கப்பட உள்ளன.

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். - புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).

கீழக்கரை திருமண நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் பங்கேற்பு

கீழக்கரை திருமண நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் பங்கேற்பு


கீழக்கரை, டிச. 28: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சனிக்கிழமை நடந்த திருமண விழாவில் இலங்கையை சேர்ந்த அனைத்து நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டார்.

இலங்கை அனைத்து நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே கட்சியை சேர்ந்த மட்டக்களப்பு அமைப்பாளர் ரவூப்.ஏ. மஜீத், தமிழக முன்னாள் காவல் துறைத் தலைவர் வால்டர் தேவாரம் மற்றும் இலங்கையை சேர்ந்த பலர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கீழக்கரைக்கும்-இலங்கைக்கும் தொழில் ரீதியான உறவு அதிகமாக இருக்கிறது. எனது நண்பர் சம்சுதீன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து இந்தியா வந்துள்ளேன் என்று இலங்கை அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பேசினார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம்


திருவாடானை, டிச. 28: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), தேவேந்திர குல மள்ளர் உறவின்முறை சங்கம் ஆகியவை சார்பில், டி.என்.பி.எஸ்.சி. முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கான வழிகாட்டல் முகாம் தொண்டியில் நடைபெற்றது.

தொண்டி பேரூராட்சி வணிக வாளகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. தலைவர் எம்.சாதிக் பாட்ஷா, தொண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் த.மு.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் பாதுஷா, சிப்ரி, நவர், ஆசிக், அகமது பாய்ஸ், தேவேந்திர குல மள்ளர் சங்கத் தலைவர் பீட்டர், நேரு, ஜெயக்குமார் ராஜா, தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆசிரியர்கள் முருகேசன், மாலா, ஜான் பிரிட்டோ, சேவியர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அபிராமம் பள்ளியில் என்.என்.எஸ். முகாம்

அபிராமம் பள்ளியில் என்.என்.எஸ். முகாம்

கமுதி, டிச. 28: கமுதி அருகே காடநகரியில் முஸ்லிம் மேனிலைப்பள்ளி என்.என்.எஸ். மாணவர்கள் 10 நாள் சேவை முகாம் புதன் கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது.

துவக்க விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் தலைமையும், பள்ளிக் கல்விக் குழு உறுப்பினர் வி.எம். முகம்மது முத்து அபுபக்கர், மாவட்ட என்.என்.எஸ். திட்ட அலுவலர் ஏ.செய்யது ஒலி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

தலைமை ஆசிரியர் எஸ்.பஷீர் அகம்மது வரவேற்றார்.

பள்ளித் தாளாளர் ஏ.எம்.முகம்மது இதிரீஸ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உதவித் தலைமை ஆசிரியர்கள் எம். முகம்மது சம்சுதீன், ஏ.கே. சாகுல் கமீது, ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் காடநகரி கணேச மூர்த்தி, அச்சங்குளம் ஜே.கிறிஸ்டோபர், திடட அலுவலர் கே.ஆர்.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் பேசினர்.

உதவி திட்ட அலுவலர் அ. கண்ணதாசன் நன்றி கூறினார்.

திங்கள், 29 டிசம்பர், 2008

திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்

திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்
முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேச்சு

திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம். காதர் முகைதீன் எம்.பி. கூறினார்.

பொதுக்கூட்டம்

இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தென் மண்டல மாநாடு மற்றும் முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்.டி.வெள்ளை தம்பி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.அப்துல்கனி, செய்யது, மொகுதும் கான்சாகிப், வாவுஅப்துல் கப்பார், எஸ்.ஏ.முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச்செயலாளர் அபூசாலிஹ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் கே.எம்.காதர் முகைதீன் எம்.பி. பேசியதாவது:-

தென்மண்டல மாநாடு

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டை தொடர்ந்து தென் மண்டல மாநாடு வருகிற 24-ந் தேதி ராமநாதபுரத்திலும், வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி மத்திய மண்டல மாநாடு தஞ்சையிலும், வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி வட மண்டல மாநாடு வேலூரிலும் நடக்கிறது.

இஸ்லாத்தின் சிறப்பு அம்சமான மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு வருகிற ஜனவரி 31-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது.

திருமங்கலம் இடைத்தேர்தல்

திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நமது கட்சியும் கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக உழைத்து வருகிறது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் தான் சமூக நல்லிணக்கம் உறுதிபடும். சமூக நீதி வலிமை பெறும். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் செம்மையாக செயல்படுத்த முடியும்.

சமுதாய மேம்பாட்டு திட்டம்

இந்திய அரசின் சிறுபான்மை சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த எந்த பகுதியும் சேர்க்கப்படவில்லை. நான் பிரதமரிடம் பேசி தமிழகத்தில் உள்ள சில நகரங்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்று முதல் முதலாக மேலப்பாளையம் பகுதியை சிறுபான்மை பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வேறு பல பகுதிகளையும் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளேன்.

இவ்வாறு மாநில முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் முகைதீன் எம்.பி. கூறினார்.

முன்னதாக அவர் சீதக்காதி நகரில் காயல்பட்டினம் முஸ்லிம் லீக் கிளை அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

யார்-யார்?

கட்சியின் மாநில பொருளாளர் செய்யது அகமது, தொண்டரணி அமைப்பாளர் கே.எம்.நிஜாம், கமுதி பஷீர், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம். அபுபக்கர், கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே.முகமது சுலைமான், மாவட்ட செயலாளர்கள் வாவு நாசர், மன்னர் பாதுல் அஸ்ஹப் உள்பட பலர் பேசினர்.

நிறைவில் நகர செயலாளர் பி.எம்.எஸ். சதக்கதுல்லாஹ் நன்றி கூறினார்.

அமீரத்தில் ஈத் மிலன் ( பெருநாள் சந்திப்பு )


முஸ்லீம் என்றாலே தீவிரவாதியா? டைரக்டர் அமீர் பேட்டி!

`யோகி' திரைப் படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார் அமீர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஆவேசமாய் பேசி, சிறை சென்று வந்ததால் சற்று தாமதமாகிறது படம்.

ஈழத்தமிழர் பிரச்னை குறித்தும் மும்பைத் தாக்குதல்கள் பற்றியும் பேசுகிறார், மீண்டும்.

`யோகி' எந்தளவிற்கு வந்திருக்கிறார்?

"இன்னும் பதினைந்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கிறது.இதுவரை எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். அமீர் ஏன் நடிக்க வந்தான் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஒரு கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் தான் நடிக்கிறான் அல்லது அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார் என்ற உண்மையான காரணம் இருக்கவேண்டும். இது கூட இல்லையென்றால் வேற என்ன?''

ஈழத்தமிழர் பிரச்னையில் குரல் கொடுத்து சிறை சென்றீர்-களே. அங்கு உங்களுக்குக் கிடைத்த சிறை அனுபவங்கள் எந்த உணர்வைக் கொடுத்தி-ருக்கிறது?

"திட்டமிட்டுத் திருடியவன், ப்ளான் பண்ணி சாதுர்யமாக கொலை செய்தவன், மிகவும் பெர்ஃபெக்ட்டாக என்னென்ன வழிகளில் சமூகத்தை ஏமாற்றலாம் எனத் தெரிந்த, படித்த கிரிமினல்கள் பலர் வெளியேதான் இருக்கிறார்-கள். அதே மாதிரி அங்கே உள்ளே இருப்பவர்-களில் பலர் கோபத்தில் கொலை செய்தவர்கள், அவசரப் பட்டுத் திருடியவர்கள், ஆத்திரத்தில் தப்பு செய்து வந்தவர்கள், கிராமங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக ஏதாவது தப்பு செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள் அதிகம். `ஒரு நிமிஷம் கோபப்-பட்டேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஒண்ணுமில்ல. பதினைஞ்சு வருஷம் போச்சு. இளமையைத் தொலைச்-சாச்சு. இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியல' என்று மெஜாரிட்டியான பேர் சொல்லும்போது பரிதாபமாக இருக்கிறது. சிறையில் உள்ள பலர் மனரீதியாகப் பக்குவமடைந்து இருக்கிறார்கள். இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் திருந்தி வாழ்வோம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னும் நிறைய சங்கதிகள் சிறையில் இருக்கிறது. அவற்றையெல்-லாம் படமெடுக்க ஆசை இருக்கிறது.''

மிக விரைவில் தமிழர்களின் மன தைப் பிரதிபலிக்கும் விதத்-தில் ஈழப் படம் ஒன்றை இயக்க-விருப்பதாக வரும் செய்திகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?

"ஈழம் சார்ந்த கதை ஒன்று மட்டும்தான் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால், இல்லை, நிறைய கதைகள் என்னிடம் உள்ளன என்பதுதான் என் பதில். இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. இதேபோல் உண்மையான ஈழப் பிரச்-னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''

ஈழத்தமிழர்களின் படுகொலை-களுக்கு எதிராக குரல் கொடுத்-தீர்கள். அதற்காக சிறை சென்றீர்-கள். ஆனால் சிறையிலிருந்து வந்தபிறகு அந்தப் பிரச்னை குறித்துப் பேசவில்லை. என்ன காரணம்?

"பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்-கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.''.

- இரா. ரவிஷங்கர்

kumudam

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

குவைத்தில் சமூக நீதி கருத்தரங்கம்

இறைவனின் திருப்பெயரால்...

சமூக நீதி கருத்தரங்கம்

குவைத் தமிழ் தோழமை அமைப்புக்களின் ஆதரவுடன் !
குவைத் தமிழர்கள் விழிப்புணர்வின் ஒரு மைல் கல்லாக !!
ஃபாஸிஸ, பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க !!!
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒற்றுமைக்காக !!!!
­­­
நாள்: ஜனவரி 1, 2009 நேரம்: மாலை 5:15
இடம்: ஜம்இய்யது இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்

தலைமை: தொழிலதிபர் A.சுலைமான் பாட்ஷா
(உரிமையாளர், லக்கி ப்ரிண்டர்ஸ், குவைத்)

சிறப்புரையாளர்கள்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
தலைப்பு: சமைப்போம் சகோதரத்துவம் வாரீர் வாரீர் !!

சகோ.M.தமீமுன் அன்ஸாரி M.B.A.
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
தலைப்பு: தீவிரவாதமும் பயங்கரவாதமும் - நிழலும் நிஜமும்

நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), குவைத்
23925612 / 99619827 / 66412875 / 97358846 / 22470159

அறிவமுதம் பருக தமிழர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
குறிப்பு: For Women Special Place ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலிஃபா, மஹ்பூலா மற்றும் சிட்டி பகுதிகளிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

துபாயில் இஸ்லாமிய‌ ஒலி ஒளி தொகுப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் இஸ்லாமிய‌ ஒலி ஒளி தொகுப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் முஸ்லிம் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் அல் கூஸ் கிளையின் சார்பில் அல்ஹ‌ம்துலில்லாஹ் இஸ்லாமிய‌ சிற‌ப்பு ஒலி ஒளி தொகுப்பு நிக‌ழ்ச்சி 28.12.2008 ஞாயிற்றுக்கிழ‌மை காலை அல் கூஸ் தொழிலாள‌ர் முகாமில் ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியில் அமீர‌க‌ முஸ்லிம் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ துணைத்த‌லைவ‌ர் ஹுசைன் பாஷா இறைவ‌னின் ப‌டைப்புக‌ள் குறித்து ஒலி ஒளிக்காட்சிக‌ளுட‌ன் விள‌க்கிக் கூறினார்.

இத்தொகுப்பு த‌ஞ்சை ஜ‌லாலுத்தீன் அவ‌ர்க‌ளால் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிக‌ழ்ச்சியில் தொழிலாள‌ர்க‌ள் ப‌ல‌ர் ஆர்வ‌த்துட‌ன் ப‌ங்கேற்று ப‌ய‌ன்பெற்ற‌ன‌ர்.

சௌதியில் இறந்த கணவரின் உடலை இந்தியா கொண்டு வர மனைவி கோரிக்கை

சௌதியில் இறந்த கணவரின் உடலை இந்தியா கொண்டு வர மனைவி கோரிக்கை

குன்னூர், டிச.27: சௌதி அரேபியாவில் இறந்தவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

குன்னூர் வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் மரியா ஜோஸ்பின், இவரது கணவர் ஜீன் மாரி மைக்கேல். செüதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நாய் மற்றும் விலங்குகளின் பயிற்சியாளராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் டிச.18-ம் தேதி செüதி கம்பெனியில் இருந்து மரியா ஜோஸ்பினுக்கு வந்த தொலைபேசியில் ஜீன் மாரி அறையில் இறந்து கிடப்பதாகவும் அவரது சடலத்தை எடுத்துச் செல்லத் தேவையான தஸ்தாவேஜுகளை அனுப்பித் தரும்படியும் தகவல் வந்துள்ளது.

இந்த தகவலை அவரது நண்பர் ரவிச்சந்திரன் உதவியுடன் உறுதி செய்துக்கொண்டு அதற்கான ஆவணங்களை செüதி கம்பெனிக்கு அனுப்பி 10 நாட்களாகியும் இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

எனவே இதுகுறித்து மத்திய அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு பேக்ஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மரியா தெரிவித்தார், எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தனது கணவரின் சடலத்தை இந்தியா கொண்டுவர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

நாக‌ர்கோவிலில் இஸ்லாமிக் சேன‌ல் சார்பில் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி

நாக‌ர்கோவிலில் இஸ்லாமிக் சேன‌ல் சார்பில் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி

நாக‌ர்கோவிலில் இஸ்லாமிக் சேன‌ல் சார்பில் டாக்ட‌ர் கேவிஎஸ் ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் வ‌ழ‌ங்கும் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி ப‌யோனிய‌ர் முத்து ம‌ஹாலில் 28 டிச‌ம்ப‌ர் 2008 ஞாயிறு காலை ந‌டைபெற்ற‌து.

துவ‌க்க‌மாக‌ அனீஸ்ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். திருவை அப்துர் ர‌ஹ்மான் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஐ.ஆர்.ஜி.டி. த‌லைவ‌ர் செய்ய‌து முஹ‌ம்ம‌து க‌னி, நாக‌ர்கோவில் ஐ.சி.ஏ.த‌லைவ‌ர் வழ‌க்க‌றிஞர் எம். அஹம‌துகான், ம‌வ்ல‌வி காஜா ஷேக் மிஸ்பாஹி, கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், டாக்ட‌ர் அப்துல் ஹ‌மீது, முஸ்லிம் க‌லைக்க‌ல்லூரி த‌லைவ‌ர் செய்ய‌து முஹ‌ம்ம‌து, மெட் க‌ல்வியிய‌ல் க‌ல்லூரி த‌லைவ‌ர் முஹம்ம‌து எக்கீம், ஆசாரிப்ப‌ள்ள‌ம் ம‌ருத்துவ‌க்க‌ல்லூரி டாக்ட‌ர் முஹைதீன், இமாம் இப்னு அப்பாஸ், எம்.சி. முஹ‌ம்ம‌து உள்ளிட்டோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

வ‌ழ‌க்க‌றிஞர் எம். அசீம் அறிமுக‌வுரை நிக‌ழ்த்தினார்.ஷாஜ‌ஹான்ஸ் ஜூவ‌ல்ல‌ர்ஸ் ஹெச்.ஷாஜ‌ஹான் வாழ்த்துரை வ‌ழ‌ங்கினார்.

ச‌கோத‌ர‌ ச‌முதாய‌ ச‌கோத‌ர‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ப‌தில் அளித்தார்.

சென்னை ஸாஜிதா புக் சென்ட‌ர் ஜ‌க்க‌ரியா நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌ ச‌கோத‌ர‌ ச‌முதாய‌ப் பிர‌முக‌ர்க‌ளுக்கு திருக்குர்ஆனை வழ‌ங்கினார்.

ஹைதுரூஸ் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்யப்ப‌ட்டிருந்தது.

க‌த்தார் நாட்டு விமான‌ நிலைய‌த்தில் ப‌ரித‌விக்கும் ஆசிய‌த் தொழிலாள‌ர்க‌ள்

க‌த்தார் நாட்டு விமான‌ நிலைய‌த்தில் ப‌ரித‌விக்கும் ஆசிய‌த் தொழிலாள‌ர்க‌ள்

க‌த்தார் நாட்டின் த‌லைந‌க‌ர் தோஹாவிற்கு வேலைக்காக‌ சென்ற‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ தொழிலாள‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ப‌ணி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ந்து த‌ங்க‌ளை அழைத்துச் செல்லாத‌ கார‌ண‌த்தால் விமான‌ நிலைய‌ வ‌ளாக‌த்திலேயே முறையான‌ உண‌வின்றி உற‌ங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

இதில் இந்தியா, ப‌ங்க‌ளாதேஷ்,இல‌ங்கை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாட்டு தொழிலாள‌ர்க‌ளும் அட‌ங்குவ‌ர். இத‌ற்குக் கார‌ண‌ம் தொழிலாள‌ர்க‌ளை க‌த்தார் நாட்டுக்கு அனுப்பும் நிறுவ‌ன‌ங்க‌ள் வேலைவாய்ப்ப‌ளிக்கும் நிறுவ‌ன‌த்திற்கு முறையான‌ த‌க‌வ‌ல் த‌ரப்ப‌டாத‌தே கார‌ண‌ம் என‌ தெரிவிக்க‌ப்ப‌டுகிற‌து.

இதுகுறித்து க‌த்தார் நாட்டு தொழிலாள‌ர் ந‌ல‌த்துறை தெரிவிக்கும் போது இது குறித்து அவ‌ர்க‌ள‌து நிறுவ‌ன‌த்திற்கு த‌க‌வ‌ல் ப‌ல‌முறை தெரிவிக்க‌ப்ப‌ட்டும் அவ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ வ‌ந்து அவ‌ர்க‌ளை அழைத்துச் செல்லாம‌ல் தாம‌தப்ப‌டுத்துவ‌து தொழிலாள‌ர்க‌ள் விமான‌நிலைய‌த்திலேயே த‌ங்கும் சூழ்நிலை நில‌வுகிற‌து என‌ த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்
155 பேர் பலி; 200 படுகாயம்


பாலஸ்தீன நாட்டின் காசா கடற்கரையோர பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று பகல் 111/2 மணி அளவில் திடீரென சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இதில் 155 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். போலீஸ் தலைமையகம் உள்பட 40-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் மீது இந்த தாக்குதல் நடந்தது.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியான நெசவ் மீது பாலஸ்தீனம் தாக்குதல் நடத்தியது. ``ஒரு வாரமாக நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப் பட்டது. இது தொடரும், விரிவான முறையில் தாக்குதல் நடத்தப்படும், தேவைப்பட்டால் தீவிரமாக தாக்குதல் நடத்துவோம்'' என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும்

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும்
த.மு.மு.க. மாநில தலைவர் பேட்டி


ராமநாதபுரம்,டிச.28-

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தீவிர விசா ரணை நடத்த வேண்டும் என்று த.மு.மு.க. மாநில தலைவர் கூறினார்.

த.மு.மு.க. மாநில தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா ராமநாத புரத்தில் நிருபர்களுக்குபேட்டி யளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது- ராமநாத புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் தொடர்ந்து சிறு பான்மை யினருக்கு எதிராக செயல் பட்டு வருகிறார். எனவே அவரை வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்ய வேண் டும்.

இந்த கோரிக்கையைமுன் வைத்து தமிழக அரசை வலியுறுத்தி அடுத்தமாதம் (ஜனவரி) 10-ந்தேதி ராமநாத புரத்தில் மாநில த.மு.மு.க. பொது செயலாளரும், தமிழக வக்பு வாரிய தலைவருமான ஹைதர் அலி தலைமையில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும்.

வழக்கு

சில மாதங்களுக்கு முன்பு பரமக்குடியில் ராஜா மஸ்தான் என்ற பள்ளி மாணவனின் மர்ம சாவு குறித்து த.மு.மு.க. உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சந்தேகம் எழுப் பிய போதும் போலீசார் தரப்பில் கொலையாளிகளை காப்பாற்ற முயற்சித்ததால் நாங்கள் கோர்ட்டைஅணு கினோம். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப் பட்டது.

இந்த சம்பவத்தில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசார், கடந்த டிசம்பர் 6-ந்தேதி ராமநாதபுரத்தில் மட்டும் த.மு.மு.க.மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இடமாற்ற கோரிக்கை

இதேபோல கடந்த வாரம் வேதாளை கிராமத்தில்ஒரு பள்ளி மாணவிகிண்டல் செய்யப்பட்ட விவகாரத்தில் ரியாத் என்ற சிறு வன்ஒரு கும்பலால் கடத்தப்பட்டு சித்ரவதைசெய்யப்பட்டான். அந்தகும்பலை சேர்ந்தவர் களை தட்டிக்கேட்டத.மு. மு.க. வினரையும்தாக்கி உள்ள னர். இதுபோன்று தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவே செயல்பட்டுவரு கிறார்கள். இது சமூக அமைதியை கெடுத்துமோத லுக்கு வழிவகுத்துவிடும். எனவே போலீஸ் சூப்பி ரண்டை தமிழகஅரசு மாறு தல் செய்ய வேண்டும்.

மாநாடு

வருகிற பிப்ரவரி மாதம் 7-ந்தேதி த.மு.மு.க. ஆதர வுடன் மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாடு சென்னை பல்லாவரத்தில் நடக்க உள்ளது. இந்தகட்சி யின் சார்பில் வரும்பாரா ளுமன்ற தேர்தலில் போட்டி யிடுவோம். யாருடன் கூட் டணி? எத்தனை இடத்தில் போட்டி என்பதை மாநாட் டில் தெரிவிப்போம்.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை 6 சதவீத மாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசைகேட்டுக் கொள்கிறோம். காங்கிரஸ் அரசுசிறுபான்மை யினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்குஉள் ஒதுக்கீடாக10சதவீதமும் வழங்க வேண்டும். தேர்த லுக்குள் இந்த கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் நாங் கள் அந்த கூட்டணியில் இருந்து விலக தயங்க மாட் டோம்.

குண்டு வெடிப்பு

இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா- ஈரானி டையே சீரான உறவு மேம் பட்டு வந்த நிலையில் மும் பை தாக்குதல் நடத்தப் பட்டு உள்ளது. இதை நடத் தியவர்கள் பாகிஸ்தான் தீவிர வாதிகளாக இருந்தாலும் அதை ஏவி விட்டவர்கள் யார் என்பதை முழுமையான விசாரணை நடத்திகண்டு பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது த.மு.மு.க. மாவட்ட செய லாளர் தஸ்பீக் அலி, ஒன்றிய செயலாளர் ருகைபு, நகர் தலைவர் சுல்தான், கீழக்கரை நகர் தலைவர் சிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

நகைச்சுவை;அறிமுகம்;ஆவனப்படம்!



என் ஊரில் ஒரு நண்பர் சம்சுதீன். வயதில் மூத்தவர் அதனால் சம்சண்ணண். ஊரில் வாடகைக்கு மகிழுந்து ஓட்டிக் கொண்டிருந்தார். துபையிலிருந்து வருபவர்களை சென்னை விமான நிலையம் சென்று அழைத்து வருவதுதான் அதிகமான நேரத்தில் கிடைக்கும் முக்கிய பணி. அப்போதெல்லாம் அமீரகத்திலிருந்து திருச்சிக்கு விமான சேவை அவ்வளவு பிரபலமாகவில்லை. கைப்பேசி இல்லாத காலம்.
>
>
சினிமா தியேட்டரில் இரண்டு குழுக்களுக்கிடையில் சண்டை. சம்சண்ணண் நடுவில் போய் விலக்கப்போக இரண்டு கூட்டத்தினரிடமிருந்தும் சரியாக வாங்கிக் கொண்டார்.
ஊரில் பஞ்சாயத்து.
தலைவர்: பாவம். விலக்கப் போனதற்கு நம்ம சம்சுக்குதான் சரியான அடி.
சம்சண்ணண்: என்னை அடிக்க முடியுமா? என்ன எவங்க அடிச்சான்?
தலைவர்: அப்ப பரவாயில்ல சம்சு.
சம்சண்ணண்: தொவச்சு பிழிஞ்சில்ல காயப்போட்டானுங்க
தலைவர்: அடி வாங்கினாலும் குசும்ப பார்.
>
>
ஒரு முறை பக்கத்து ஊரிலிருந்த தன் நிலத்துக்கு போயிருந்த எங்களுர் முக்கியஸ்தர் ஒருவர் அங்கேயே மரணமடைந்ததாக செய்தி வரவும், சம்சண்ணண் மகிழுந்து எடுத்துச் செல்ல, துணைக்கு தலைவர் போய் இருக்கிறார். மகிழுந்தில் பிணம் கொண்டு வர தடை இருப்பதால், பிணத்தை பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போல் இருக்கச் செய்து, வண்டியை எடுத்து வந்திருக்கிறார்கள். கூட இருந்த தலைவர் பிணத்தின் கூட வரும்போதே பயந்த மாதிரி பேசி இருக்கிறார். ஒரு திருப்பத்தில் பக்கவாட்டிலிருந்து ஒரு வண்டி வர, சம்சண்ணண் காருக்கு சடன்பிரேக் போட வேண்டியதாகி விட்டது. அப்போது பின்னாலிருந்த பிணத்தின் இரு கைகளும் முன்னால் இருந்த தலைவரின் இரு தோள்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக விழ, அலறியடித்து வண்டியை நிறுத்தி இறங்கிய தலைவரை சமாதானப்படுத்தி ஆசுவாசப்படுத்தி மீண்டும் காரிலேற்ற சம்சண்ணண் மிகுந்த பாடுபட வேண்டியதாகி விட்டதாம்.
>
>

மற்றொரு முறை சென்னை விமான நிலையத்தில் அன்று வர வேண்டியவர்கள் வரவில்லையாதலால், சம்சண்ணண் ஆளில்லாத வெற்று வண்டியை இரவில் எடுத்து வந்திருக்கிறார். சென்னையைத் தாண்டி வரும் வழியில் வெளிச்சம் குறைவான இடத்தில் நான்கைந்து பேர் வண்டியை மடக்கவும், வெலவெலத்துப் போய் வண்டியை நிறுத்தி இருக்கிறார். "தம்பி எங்கள் ஊர் வேன் விபத்துக்குள்ளாகி விட்டது. இப்போதுதான் நாங்கள் இருவர் ஊரிலிருந்து வந்தோம். ஐந்தாறு பேர் இறந்து விட்டார்கள். அடிபட்ட இவ்விருவரையும் மருத்துவமனைக் கொண்டு செல்ல வேண்டும். நீ ஒரு இரண்டு பிணத்தை உன் வண்டியில் கொண்டு போய் எங்களுர் சேர்த்து விடு" என்று கெஞ்சி இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள அனுபவத்தாலும், கூட துணைக்கு வேறு ஆளில்லாததாலும் மறுத்திருக்கிறார்.

"பணம் பிரச்னையில்லை தம்பி. ஒரு பிணம் கொண்டு போக ஐயாயிரம் (அப்போதைய சென்னை சவாரிக்கு கிடைப்பது போல இரு மடங்கு) முன் பணமாகத் தந்து விடுகிறோம்" என்று சொல்லவும், வேறு வழியின்றி கார் டிக்கியில் ஒரு பிணத்தை வைத்து விட்டு, முன்பு போலவே பின் இருக்கையில் இரண்டு பிணங்களை அமர்ந்த நிலையில் வைத்து, விழாதிருக்க துணிகளால் கட்டி விட்டு, பதினைந்தாயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பி இருக்கிறார். இருந்தாலும் போலீஸ் பயத்தோடு பிணங்களோடு பயணம் செய்கிற பதைபதைப்பு மனதில். ஆசுவாசத்துக்காக அடுத்ததாக வழியிலுள்ள தேநீர் கடையில் தேநீர் பருகிக் கொண்டிருந்த போது
ஒரு ஆள்: அண்ணே! உளுந்தூர் பேட்டை வரை வரலாமா?
சம்சண்ணண்:உளுந்தூர் பேட்டை தாண்டி பக்கத்தூர்தான் போறேன். முதலாளி வண்டியிலே இருக்காங்க. இருங்க கேட்டுட்டு வரேன்.
(வண்டியின் உள் விளக்கை போட்டு, கட்டு அவிழ்ந்திடாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு வந்து)
சம்சண்ணண்: முதலாளி சரின்னுட்டார். எவ்ள காசு தருவீங்க.
ஆள்: பஸ்க்கு 15 ரூவாதான். நிறுத்த மாட்டேங்கிறான். 30 ரூவா தாரேன்.
சம்சண்ணண்: பரவாயில்ல. முதலாளிட்ட சொல்ல கூடாது. இப்பவே கொடுத்திடனும். முன் சீட் தான். தூங்கக் கூடாது.
[அபிஅப்பா, குசும்பன் பதிவு மாதிரி, சம்சண்ணண் வாயத் தொறந்தா நாம் சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகிடும். பயங்கர அரட்டை. பேசிக் கொண்டே போய் இருக்கிறார்கள்.]
ஆள்: நாம இவ்வளவு பேசி சிரிக்கிறோம். பின்னால இருக்குறவங்க பேச மாட்டேங்கறாங்களே.
சம்சண்ணண்: அவுங்க செத்துட்டாங்கய்யா
ஆள்: (குசுகுசுப்பாக) முதலாளி முளிச்சிரப் போறாங்க. காதில விழுந்தா என்னாறது.
சம்சண்ணண்: அட போய்யா. அவுங்க செத்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா?
ஆள்: என்னய்யா சொல்ற?
சம்சண்ணண்: இவ்ள நேரம் பேசி பிரண்ட் ஆயிட்டோம். ஒண்ட்ட சொல்றதுக்கு என்னா. மெட்ராஸ்ல வர்ற வழில விபத்துல செத்தவங்க பொணம்யா. வேப்பூர் பக்கத்துல சேக்கனும்.
ஆள்: லைட்ட போடுய்யா
சம்சண்ணண்: கொஞ்சம் கூட வாயேன். திரும்ப உளுந்தூர் பேட்டை வந்து விட்டுடறேன்.
ஆள்: யோவ் லைட்ட போடுறியா என்னா?
சம்சண்ணண்: சந்தேகமா இருந்தா நீயே போட்டுப் பாரு
(வந்த ஆள் விளக்கைப் போட்டுப் பார்த்து விட்டு அலறுகிறார்.)
ஆள்: வண்டியை நிறுத்துய்யா. வண்டியை நிறுத்துய்யா.
சம்சண்ணண்: உளுந்தூர் பேட்டை இன்னும் பத்து கிலோ மீட்டர் இருக்கு
ஆள்: வண்டியை நிறுத்துய்யா. நிறுத்தறியா என்னா?
சம்சண்ணண் வண்டியை நிறுத்துகிறார்.
வந்த ஆள் வண்டியை விட்டுக் குதித்து சென்னையை நோக்கி "ஐயையோ" என்று கத்திக் கொண்டே திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.
சம்சண்ணண்: யோவ். இந்தப் பக்கம் ஓடினாலும் உளுந்தூர் பேட்டை வரும்.
வந்த ஆள் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

நன்றி: www.sultangulam.blogspot.com


*************** ******************* *********************

படித்து விட்டீர்களா....?

மணிச்சுடர் நாளிதழ்,

உணர்வு,

மக்கள் உரிமை வார இதழ்கள்,

சமரசம் மாதம் இருமுறை,

விடியல் வெள்ளி மாத இதழ்

************************** ******************** ********************

தலைப்பை கிளிக் செய்து பார்க்கவும்:

பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்


மனமுடைந்த தாய், மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை

மனமுடைந்த தாய், மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை
மதுரை,டிச,27_


வெளிநாடு சென்ற கணவன் வீடு திரும்பாததால் மனமுடைந்த தாய் தனது மகனுக்கு....

விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள உட்கடை கிராமம் பெரியகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் எலிசபெத் ராணி(30). இவருக்கும் மதுரையை சேர்ந்த வெங்கடேசனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 9 வயதில் கௌதம் என்ற மகனும் உள்ளார். வெங்கடேசன் வேலைக்காக வெளிநாடு சென்றார். எலிசபெத் ராணி மகனுடன் தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார். பல ஆண்டுகளாகியும் கணவன் வராததால் மனமுடைந்த எலிசபெத் ராணி சம்பவத்தன்று இரவு வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு தனது மகன் கௌதமுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்தார். இதில் இருவரும் மயங்கி கிடந்தனர். இவர்களின் முனகல் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த கிருஷ்ணன் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். ஆனால் வழியிலேயே இருவரும் இறந்தனர். இது குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சனி, 27 டிசம்பர், 2008

ஆப்கனில் தமிழர் கடத்தல்: சோகத்தில் மூழ்கிய பிரம்மகுண்டம் கிராமம்

ஆப்கனில் தமிழர் கடத்தல்: சோகத்தில் மூழ்கிய பிரம்மகுண்டம் கிராமம்

விழுப்புரம், டிச. 25: ஆப்கானிஸ்தானில், தமிழக வாலிபர் சைமன் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இதனால் இவரது சொந்த ஊரான பிரம்மகுண்டம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டத்தைச் சேர்ந்தவர் சைமன் (எ) வாசு (31). இவர் கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு சமையல் வேலைக்குச் சென்றார். இவரை இவரது அண்ணன் சுப்பிரமணியன் அங்கு அழைத்துச் சென்றார்.

இவர் அக். 13-ம் தேதி ஹேரத் மாவட்டத்தில் பக்ராம் விமானதளத்தில் தங்கியிருந்த சர்வதேச பாதுகாப்பு படையினருக்கு உணவு கொடுக்கச் சென்றார்.

அப்போது சைமனை தலிபான்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். அவருடன் சென்ற மேலும் இருவர் கடத்தப்பட்டனர்.

சைமனுக்கு கடந்த 98-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு வசந்தி என்ற மனைவியும், நிர்மலா, அஜீத் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். சைமன் கடத்தப்பட்ட தகவல் அறிந்த பிரம்மகுண்டம் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

சைமனின் மனைவி வசந்தி மனமுடைந்து காணப்பட்டார். சைமனை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சைமன் கடந்த 2000-ம் ஆண்டு மஸ்கட் சென்று அங்கு 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். கடந்த ஜனவரி மாதம்தான் அவர் ஆப்கானிஸ்தான் சென்றார். சைமன் கடத்தப்பட்டதால் வெளியூர் வேலைக்குச் சென்றுள்ள இளைஞர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து கட்டுரைப் போட்டி

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து கட்டுரைப் போட்டி

சென்னை, டிச. 26: "பயங்கரவாதத்துக்கு எதிரான பதில் நடவடிக்கையில் போலீஸ், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள், மக்கள் பங்களிப்பு' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீஸ் நண்பர்கள் திட்ட இயக்குநரும் ஐ.ஜி. யுமான பிரதீப் வி. பிலிப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர், தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை

fop@airtelmail.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி தங்களது பங்கேற்பைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் இல்லை.

பங்கேற்பாளர்கள் தங்களது சுய விவரங்களை atccontest@gmail.com
என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

கட்டுரைகள் 1500 முதல் 2 ஆயிரம் வார்த்தைகள் வரையில் இருக்கலாம். இதற்கான விண்ணப்ப மனுக்களை 2009 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு

தலைமை ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு


திருப்பத்தூர், டிச.27-

பாரதீய தலித் சாகித்திய அகடமியின் சார்பில் புதுடெல்லியில் அகில இந்திய தலித் எழுத்தாளர்களுக்கான மாநாடு நடைபெற்றது. தேசிய தலித்தலைவர் டாக்டர்.சுமனாஷ்க்கர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், இந்திய முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களும், சமுதாய சீர்திருத்தவாதிகளும், கவிஞர்களும் பலர் கலந்துகொண்டனர்.

இதில் திருப்பத்தூர் அடுத்த சவுடேகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், கவிஞருமான சி.மாணிக்கம் கலந்து கொண்டார். அவருக்கு பாரதிய தலித் சாகித்திய அகடமியின் "டாக்டர் அம்பேத்கார் பெல்லோசிப் விருது'' வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணிக்கத்திற்கு திருப்பத்தூர் ரெயில்வே நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூர் ஓய்வூதிய சங்கத் தலைவர் செ.ராஜகோபால், பாரதியதலித்சாகித்திய அகடமியின் மாநில தலைவர் பெ.சொக்கேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கூ.குப்புசாமி, மாவட்டபொருளாளர் கு.கருணாநிதி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.சின்னராஜ் மற்றும் பலர் வரவேற்றனர்.

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 18 வது பட்டமளிப்பு விழா

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 18 வது பட்டமளிப்பு விழா

மேடையில் முக்கியஸ்த்தர்கள்

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா இன்று (27.12.2008) மாலை 2 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநிலை பயின்ற மாணவியர் 302 பேர் இவ்விழாவில் பட்டம் பெற்றனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் நீதியரசர் எம்.ஜே.ஏ. சித்திக் அவர்கள் புது தில்லியில் இருந்து வருகை தந்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தங்கம் பதக்கம் பெற்ற B.Sc. Home Science மாணவி முனிரா அவர்கள்


கல்வி என்பது மனிதனுக்கு வாழ்வாங்கு வாழ்வதற்குறிய அறக்கருத்துக்களையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அவனுக்குள் விதைப்பதாக இருத்தல் வேண்டும் என்றும், நல்லொழுக்க பண்புகளையும், மனித நேயத்தையும் விதைப்பதுதான் உண்மையான கல்வி என்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி அறிவியல் கருத்துக்களை எடுத்துக் கூறாத சமயம் குற்றமுடையது என்றும், அறிவியல் கருத்தக்களை எடுத்துக்கூறாத சமயம்குருட்டுத்தனமானது என்றும் ஆல்பர்ட்ட ஐன்ஸ்டின் என்ற தத்துவ ஞானி கூறிய கருத்துக்களையும் எடுத்துக்கூறினார். கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் புதிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்கும் ஒப்பற்ற நிறுவனங்களாகும் இந்த அறிவியல் யுகத்தில் அறிவுலகப் பிரம்மாக்களாகவும் திகழ்கின்றன என்று குறிப்பிட்டு பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

கல்லூரித் தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன்னிசா அப்துர்ரஹ்மான் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். செயளாலர் திரு. காலித் ஏ.கே புகாரி அவர்கள் விழாவை துவக்கி வைத்தார்கள். டாக்டர் ரஹ்மத்துன்னிசா அப்துர்ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். பட்டம் பெறும் மாணவழயருக்கான உறுதி மொழியை கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.சுமையா அவர்கள் வாசித்தார்கள்.மாணவியர் அதனை வழிமொழிந்தார்கள். விழாவை முனைவர் திருமதி நாதிரா கமால் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் மாணவியர்களும் அவர்களின் உரவினர்களும், முக்கியஸ்த்தர்களும் பங்கு பெற்றனர். இறுதியில் மாணவியரின் நாட்டுப்பண்ணுடன் விழா முடிவுற்றது.

செய்தி தொகுப்பு : முகவைத்தமிழன்
the thassim beevi abdul kader college for women, kilakarai

அயல்நாட்டு வேலை நிறுவன பதிவைப் புதுப்பிக்க புதிய திட்டம்

அயல்நாட்டு வேலை நிறுவன பதிவைப் புதுப்பிக்க புதிய திட்டம்

சென்னை, டிச. 26: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தங்களது பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, பதிவை புதுப்பிக்காதவர்கள் 1.1.2009-ம் தேதி முதல் 31.3.2009 வரை புதுப்பிக்கலாம். தங்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், அனைத்துச் சான்றுகளின் இரண்டு நகல்கள் ஆகியவற்றுடன் ரூ. 112-க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும்.

வரைவோலையை OVERSEAS MANPOWER CORPORATION LTD என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சதாம் உசேன் மாளிகை ஈராக்கியர்களிடம் ஒப்படைக்கப்படும்

சதாம் உசேன் மாளிகை ஈராக்கியர்களிடம் ஒப்படைக்கப்படும்
அமெரிக்கா அறிவிப்பு


பாக்தாத், டிச.27-

ஈராக் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் வசித்த அரண்மனையை தன் வசம் வைத்து இருக்கும் அமெரிக்கா அதை வருகிற 31-ந் தேதி ஈராக் அரசிடம் ஒப்படைக்க இருக்கிறது.

2003-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியபோது, சதாம் உசேன் ஆட்சியை விட்டும், அரண்மனையை விட்டும் ஓடி தலைமறைவானார். அப்போது அவர் வசித்த அரண்மனையை அமெரிக்கா கைப்பற்றியது. அப்போது அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமாக அது இருந்தது. 2004-ம் ஆண்டு அமெரிக்க தூதரகம் அந்த அரண்மனையில் இருந்து செயல்படத் தொடங்கியது. இப்போது தனியாக அமெரிக்க தூதரகம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த அரண்மனையை காலி செய்ய இருக்கிறது. வருகிற 31-ந் தேதி அந்த அரண்மனை ஈராக்கிய அரசிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு ஈராக் ஜனாதிபதி ஜலால் தலாபாணி இந்த அரண்மனையில் குடியேறுகிறார்.

மனைவி விவாகரத்து செய்ததால் ஆத்திரம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று துப்பாக்கியால் சுட்டார் 6 பேர் பலி

மனைவி விவாகரத்து செய்ததால் ஆத்திரம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று துப்பாக்கியால் சுட்டார் 6 பேர் பலி


லாஸ் ஏஞ்சல்ஸ், டிச.27-

திருமணமான ஒரு ஆண்டில் மனைவி விவாகரத்து செய்ததால் ஆத்திரம் அடைந்த ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் மனைவி வீட்டுக்கு சென்று துப்பாக்கியால் சுட்டார். இதில் மனைவி உள்பட 6 பேர் பலியானார்கள்.

பழிவாங்க திட்டம்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்தவர் புரூஸ் ஜெப்ரி பர்டோ, வயது 45. இவர் திருமணம் கடந்த ஆண்டு தான் நடந்தது. இவர் மனைவி, ஒரு ஆண்டுக்குள்ளேயே அவரை விவாகரத்து செய்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன் மனைவியை பழிவாங்க திட்டம் தீட்டினார்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, அவர் தன் வீட்டில் விருந்து கொடுத்தார். இதில் 30 பேர் கலந்துகொண்டனர். இந்த விருந்து நிகழ்ச்சியின்போது, நள்ளிரவு நேரத்தில் பர்டோ, கிறிஸ்துமஸ் வேடத்தில் மனைவி வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்.

கதவை திறந்த சிறுமி ஒருத்தி, கிறிஸ்துமஸ் வேடத்தில் வந்தவரை பார்த்ததும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டவராக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அனுமதித்தார்.

சரமாரியாக சுட்டார்

வீட்டுக்குள் நுழைந்ததும், அவர் தன் உடைக்குள் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். இதில் அவர் மனைவி உள்பட 6 பேர் பலியானார்கள். இதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கு இருந்து ஓடிவிட்டனர்.

பிறகு பர்டோ அந்த வீட்டுக்கு தீவைத்தார். வீடு மளமள என்று பற்றி எரிய தொடங்கியதும், அவர் அங்கு இருந்து வெளியேறினார். அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தில் 8, 13 மற்றும் 16 வயது உள்ள 3 சிறுமிகள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் பேட்டி

கோவை, டிச.25: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

27-ம் தேதி காயல்பட்டினத்தில் கட்சிப் பொதுக்குழு கூடுகிறது. இதில், கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்.

தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலும், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் அடங்கிய கூட்டணியிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இக் கூட்டணியிலேயே இடம் பெறுவோம். எங்களின் தனித்தன்மையை நிலைநிறுத்த இம்முறை கூடுதல் தொகுதி ஒதுக்குமாறு திமுக-வை வலியுறுத்துவதுடன் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம்.

திருமங்கலம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். மும்பை சம்பவத்துக்குப் பின்பு பாகிஸ்தான், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எங்களது கட்சியைச் சேர்ந்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமது, ஐநா சபை கூட்டத்தில் பேசிய கருத்து உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பாகிஸ்தானை நிர்பந்திக்க வேண்டும். இல்லையெனில் போர்தான் இறுதி முடிவாக இருக்கும் என்றார் அவர்.

சென்னையில் பிப்.7-ல் மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு

சென்னையில் பிப்.7-ல் மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு


கோவை, டிச.25: சென்னையில் பிப். 7-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

கழகத்தின் கூட்டம், மாவட்டத் தலைவர் ஏ.அப்துல் பஷீர் தலைமையில் நடைபெற்றது. செயலர் எம்.சாகுல்அமீது, பொருளாளர் இ.அகமதுகபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

11 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை குடியரசு தினத்தன்று விடுதலை செய்யக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

லஞ்ச புகார் எதிரொலி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 19 சர்வேயர்கள் அதிரடி இடமாற்றம்

லஞ்ச புகார் எதிரொலி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 19 சர்வேயர்கள் அதிரடி இடமாற்றம்


காஞ்சீபுரம், டிச.27-

லஞ்ச புகார் எதிரொலியாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 19 சர்வேயர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

காஞ்சீபுரத்தில் உள்ள தாலுகா அலுவலகம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப்பணம் பிடிபட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ராவுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

அதிரடி இடமாற்றம்

அதன்படி தாலுகா அலுவலகங்களில் உள்ள சர்வேயர்களை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நில அளவை துறை உதவி இயக்குனருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய 19 சர்வேயர்களை இட மாற்றம் செய்து நில அளவை துறை உதவி இயக்குனர் மதனகோபால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சிறுபான்மை கல்லூரிகள் எந்த பல்கலைக்கழகத்திலும் இணைப்பு அங்கீகாரம் பெறலாம்

சிறுபான்மை கல்லூரிகள் எந்த பல்கலைக்கழகத்திலும் இணைப்பு அங்கீகாரம் பெறலாம்
விரைவில் சட்ட திருத்தம்


சென்னை, டிச.27-

சிறுபான்மை கல்லூரிகள் இந்தியாவில் எந்த பல்கலைக்கழகத்திலும் இணைப்பு அங்கீகாரம் பெறும் வகையில் விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆணையத் தலைவர் நீதிபதி சித்திக் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான ஆணையத் தலைவர் நீதிபதி எம்.ஏ.சித்திக் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மை கல்வி நிலையங்களின் பிரதிநிதிகளுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். திருவல்லிக்கேணி டி.அகமது அலி பர்பியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவர் பாதிரியார் அருள்ராஜ், முஸ்லீம் கல்வி அறக்கட்டளை செயலாளர் கே.அப்துல் சத்தார், சென்னை பல்கலைக்கழக முன்னாள் சாதிக் உள்பட ஏராளமான முஸ்லீம், கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

கோரிக்கைகள்

கல்வி கட்டணம் வசூலிக்காத அனைத்து தனியார் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு அரசு உதவி வழங்க வேண்டும். சிறுபான்மை வகுப்பு மாணவர்கள் தங்கள் தாய்மொழியை முதல் வகுப்பில் இருந்து படிக்கும் வகையில் மும்மொழி கல்வி திட்டத்தை கொண்டுவர வேண்டும், பள்ளி தொடங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் தளர்த்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தலைவர் நீதிபதி சித்திக் பேசியதாவது:-

சிறுபான்மை கல்லூரிகள் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் இணைப்பு அங்கீகாரம் (அபிலியேஷன்) பெறும் வகையில் விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.

இதற்கான சட்ட மசோதா வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.

பல்வேறு சலுகைகளை பெறும் இந்த கல்வி நிறுவனங்கள் போதிய எண்ணிக்கையில் சிறுபான்மை வகுப்பினரை சேர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

கண்டிப்பாக குறைந்தபட்சம் இத்தனை சிறுபான்மை வகுப்பு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் அரசுக்கு விண்ணப்பிக்கும்போது 3 மாதம் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை என்றால் தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர்கள் கருதிவிடலாம்.

இவ்வாறு நீதிபதி சித்திக் கூறினார்.

சுனாமி நினைவு தினத்தில் கீழக்கரையில் கடல் 300 அடி உள்வாங்கியது

சுனாமி நினைவு தினத்தில் கீழக்கரையில் கடல் 300 அடி உள்வாங்கியது
பொதுமக்கள் பீதி


கீழக்கரை,டிச.27-

கீழக்கரையில் சுனாமி நினைவு தினமான நேற்று கடல் திடீரென்று 300 அடி தூரம் உள்வாங்கியதால் மீனவர்கள் பீதியடைந்தனர்.

நிறமாற்றம்

வங்க கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் தொடர்ச்சியாக மழைபெய்தது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் பகுதிகளில் கடல்கொந்தளிப்பு ஏற்பட்டது. கடந்த 18-ந்தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடல்பகுதியில் கடல் நீரின் நிறம் சிவப்பாக மாறியது. இந்த மாற்றம் காணப்பட்டது.

கடலில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தை கண்ட மீனவர்களும், பொதுமக்களும் பீதி அடைந்தனர். கடற்கரையில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கீழக்கரையில் கடல் நிறமாறிய நிலையில் அதன் அருகே உள்ள ஏர்வாடி கடலில் தண்ணீர் எந்தவிதமாற்றமும் ஏற்படவில்லை. கடல் அமைதியாக காட்சி அளித்தது.

கடல் உள்வாங்கியது

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை சுனாமி பேரலை தாக்கிய டிசம்பர் 26-ந்தேதியான நேற்று மாலை அமைதிகடலான கீழக்கரை கடல்பகுதி திடீரென உள்வாங்கியது. அங்குள்ள மீன்பிடி ஜெட்டி அருகே சுமார் 300 அடிதூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடற்கரையில் தண்ணீரில்மூழ்கி இருந்த பாறைகள்,பாசிகள் வெளியே தெரிந்தன. கரை அருகே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்த சிறிய வத்தைகள்,நாட்டுபடகுகள் தரைதட்டி நின்றன.

இதைகண்ட பொதுமக்கள், மீனவர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கண்டு பீதி அடைந்தனர். உடனே அவர்கள் கடற்கரைபகுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். சுனாமி தினத்தில் கடல் உள்வாங்கியதால் கீழக்கரை பகுதி முழுவதும் நேற்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.

தனி வாக்குச்சாவடி கோரும் மலைவாழ் மக்கள்

தனி வாக்குச்சாவடி கோரும் மலைவாழ் மக்கள்


உடுமலை,டிச. 25 வரும் மக்களவை தேர்தலில் தனி வாக்குச்சாவடி வேண்டும் என்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து வரும் மலை வாழ்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரட்டுப்பதி, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கோடந்தூர், ஆட்டுமலை, ஈசல்திட்டு, சோலையூத்து, கொட்டையாறு, பூச்சிக் கொட்டாம்பாறை, குருமலை, திருமூர்த்திமலை, மாவடப்பு, குழிப்பட்டி, புளியம்பட்டி, கருமுட்டி என அழைக்கப்படும் ஒவ்வொரு கிராமத்திற்கும் பல மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். மொத்தமுள்ள 18 மலை கிராமங்களிலும் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயம், தைலம் தயாரிப்பது, பட்டுப் பூச்சி வளர்ப்பு, தேன் எடுப்பது, மூலிகை புல்லை காய்ச்சி விற்பனை செய்வது என பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு சோலார் மின்சாரத்தின் மூலம் இயங்கும் ரேடியோ, டி.வி ஆகியவைதான் ஒரே தகவல் தொடர்பு. பல்வேறு அரசு நலத்திட்டங்களை உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் மூலமும், வட்டாட்சியர் அலுவலகம் மூலமும் பெற்று வருகின்றனர். உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களாக இருந்து வரும் இவர்கள் அரசு தங்களுக்கென ஒரு வாக்குச் சாவடியை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து உடுமலை வட்டாட்சியர் பி.செல்வராஜ் கூறியது:

மலைவாழ்மக்கள் பல ஆண்டுளாக இக் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மாவடப்பு செட்டில்மெண்டில் ஒரு வாக்குச் சாவடி அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேரில் ஆய்வு செய்து ஒரு வரைவு திட்டம் தயாரித்து அனுப்பினோம். ஆனால் காட்டு விலங்குகள் உள்ள பகுதியானதால் ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்பாக கொண்டு வர முடியாது என தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. பொதுவாக 1200 வாக்குகளுக்கு மேல் இருந்தால் ஒரு வாக்குச் சாவடி அமைக்க முடியும் என விதி உள்ள நிலையில் அனைத்து செட்டில்மெண்டுகளையும் இணைத்து ஒரு வாக்குச் சாவடி அமைக்கலாம். ஆகையால் மீண்டும் அரசுக்கு ஒரு திட்ட வரைவு அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனாலும் தேர்தல் ஆணையமும், மாநில அரசும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

மானுட வசந்தம்- நாகர்கோவில்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுக்கிழமை (28-12-2008) நாகர்கோவில்
பயோனியர் முத்து மஹாலில் வைத்து "மானுட வசந்தம்"
DR.K.V.S.ஹபீப் முஹம்மது அவர்களின் கேள்வி - பதில் நிகழ்ச்சியை
இஸ்லாமியத் தொலைகாட்சி பெருமையுடன் வழங்குகிறது.

குறிப்பாக முஸ்லிமல்லாத சகோதரர்களையும் உங்களுடன் அழைத்து வாருங்கள்.
இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது என்பதை மையமாகக் கொண்டு சொற்பொழிவு
நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

தவறாமல் பங்கு பெறவும்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
http://www.darulsafa.com

U.S. Muslims to Release Open Letter to Obama

Islamic groups to outline suggested policy priorities for new administration

(WASHINGTON, D.C., 12/26/2008) - On Monday, December 29, the American Muslim Taskforce on Civil Rights and Elections (AMT), a coalition of 11 major Islamic organizations, will hold a news conference at the National Press Club in Washington, D.C., to release an open letter to President-elect Obama outlining suggested domestic and foreign policy priorities for the new administration.

WHAT: U.S. Muslims to Offer Suggested Policy Priorities for Obama Administration
WHEN: Monday, December 29, 10 a.m.
WHERE: National Press Club, Murrow Room, 13th Floor, National Press Club Building, 529 14th Street N.W., Washington, D.C.
CONTACT: Muhammad Salim Akhtar, 773-507-5335, E-Mail: bestusa80@hotmail.com

The mission of the American Muslim Taskforce on Civil Rights and Elections is to ensure that American Muslims become full partners in the development and prosperity of the United States, to defend the civil and human rights of all and to build alliances with like-minded fellow citizens on a wide variety of social, political, economic, and moral issues.

AMT is an umbrella organization that includes: American Muslim Alliance (AMA), American Muslims for Palestine (AMP), Council on American-Islamic Relations (CAIR), Islamic Circle of North America (ICNA), Muslim Alliance in North America (MANA), Muslim American Society-Freedom Foundation (MAS-FF), Muslim Student Association-National (MSA-N), Muslim Ummah of North America (MUNA), and United Muslims of America (UMA). Its observer organizations include: Islamic Society of North America (ISNA), Muslim Public Affairs Council (MPAC), and Islamic Educational Center of Orange County (IEC).

மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

மரியம்குமாரன்


தீஸ்தா செட்டில்வாட். இவர் பெயரில் தீ இருக்கிறது. அண்மையில் இவரது சென்னை வருகையில் பரபரப்பு பற்றிக் கொண்டது.


மதச்சார்பற்றோர் மாமன் றம் சென்னையில் 11.12.2008 அன்று “மதச்சார்பற்ற ஜன நாயக இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்’’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கை நடத்தியது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்ற வந்திருந்தார் மனித உரிமைப் போராளியும், சங்பரிவாரத்தின் சிம்ம சொப் பனமும், கம்யூனலிசம் காம் பேட் இதழின் ஆசிரியரு மான திருமதி தீஸ்தா செட்டில்வாட்.


மதவாத பாசிசத்திற்கெதிரான மனித உரிமைப் போராளியான தீஸ்தாவை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றது குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகள்.


நரேந்திர மோடி அரசாங்கமும், குஜராத் நீதிமன்ற மும், கூட்டு முயற்சி எடுத்து படுகொலை வழக்குகளை குழிதோண்டி புதைத்தபோது, துடிதுடித்தெழுந்து வழக்குகளைத் தோண்டி எடுத்து, உச்சநீதிமன்றத் திற்குக் கொண்டு வந்தவர் இந்த வீராங்கணைதான்.


14 பேரை உயிரோடு எரித்த பெஸ்ட் பேக்கரி வழக்கில், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்தது குஜராத் நீதிமன்றம். முக்கிய சாட்சி ஜஹிரா ஷேக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்து இதை சாதித்தது மோடி கும்பல்.


இவ்வழக்கை கையிலெடுத்த தீஸ்தா, ஜஹிரா ஷேக்கினை பத்திரிக்கையாளர்களை சந்திக்க வைத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, குற்றவாளி களை மீண்டும் சிக்க வைத்தார்.


பிறகு, ஜஹிரா ஷேக் பணத்திற்காக விலைபோய், தீஸ்தாவின் முதுகில் குத்தியபோது அந்த துரோகங் களையும் எதிர்கொண்டு தனது நேர்மையை நிலைநாட்டி னார். இதனால் தேசிய ஏடுகளில் தீஸ்தா தினமும் ஒரு செய்தியானார்.


அத்தகையவரின் வருகை, மனித உரிமைப் போராளிகளுக்கு ஆனந்தத்தையும், சங்பரிவாரத்திற்கு ஆத்திரத்தையும், அலை களாய் எழ வைத்ததில் ஆச்சர்யமில்லை.


முதலில் இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில்தான் நடத்தப்பட இருந்தது.


தீஸ்தாவின் உயிரைக் குடித்துவிட காந்தியடி களைக் கொன்றவர்களின் கூட்டம் குறியோடும், வெறி யோடும் இருக்கிறது என்பதால், சமூக அக்கறைமிகுந்த பல சான்றோர்களின் அறிவுறுத்தல்படி இந்நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள “உயர்மறை மாவட்ட மறைப்பணி மையம்’’ (ஞயளவடிசயட ஊநவேசந) வளாகத்தில் உள்ள அரங்கில் நடத்தப்பட்டது.


அதிகப் பிரபலமில்லாத இந்த இடம், இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மிகப்பிரபலமாக விசாரிக்கப்பட்டது-மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனத்தலை வரும், சன்.டிவியின் அரசியல் விமர்சகருமான திரு. வீரபாண்டியனுக்கு ஏராளமான மிரட்டல்கள். நிகழ்ச்சி யின் தொடர்பாளர் தேவநேயனுக்கு மிரட்டல், குறுஞ் செய்திகள். இத்தகவல்கள் கிடைத்ததும் தமுமுக எச்சரிக்கையடைந்தது.


மதவெறியர்கள் தகாத செயல்களில் இறங்கினால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு வியூகம் வகுக்கப் பட்டது. காவல்துறை முழு வீச்சில் பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்க தினத்தன்று தமுமுக தொண்டரணியினர் தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலத்துணைச் செயலாளர் பேரா. ஜெ. ஹாஜா கனி, மாநிலத் தொண்ட ரணிச் செயலாளர் ரஃபீக், காஞ்சி மாவட்டச் செயலாளர் யாக்கூப் மற்றும் நிர்வாகிகள், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மேற்பார் வையில் மதியம் முதலே அரங்கத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைத்தனர். அனைத்து வாகனங்களும் தீவிர சோத னைக்குப் பிறகே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. அசைவுகள் அனைத் தும் பல்வேறு வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்டன.


6.30 மணியளவில் கருத்தரங்கம் தொடங்கியது. அதற்கு முன்னரே முக்கியப் பிரமுகர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. இரண்டாவது மாடியில் அரங்கம் இருந்த தால் படிகளில் கூட மக்கள் திரள் நின்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில், மும்பை பயங்கரவாதத்திற்குப் பலியான ஹேமந்த் கர்கரே உள் ளிட்ட காவல் துறை அதிகாரி கள் மற்றும் வீரர்கள், அப் பாவி பொது மக்கள் ஆகி யோருக்கு ஒரு மணித்துளி மௌன அஞ் சலி செலுத்தப் பட்டது.


மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனத் தலைவர் திரு. வீரபாண்டியன் தலைமையுரை ஆற்றினார்.


“காந்திப் படுகொலை, தேசப்பிரி வினை ஆகியவற்றிற்குப் பின்னால் இருக் கும் மதவெறிச் சதிகளை மிகத்துல்லிய மாகப் பட்டியலிட்ட வீரபாண்டியன், இன்று வரைத் தொடர்ந்து வரும் மத வெறி பயங்கர வாதங்களையும் அதை ஒழித்துக் கட்ட தேச மக்கள் ஓரணி திரள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.


தீஸ்தா செட்டில்வாட்டிற்குத் தமிழகத் தின் சார்பில் வரவேற்பும் கௌரவமும் செய்வதற்காக பொதுவுடைமை இயக்க முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணு அழைக்கப்பட்டிருந்தார்.


“தீஸ்தா செட்டில்வாட்டை கௌரவிக் கும் பணியைத் தந்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன், தேர்தல் நேரம் வந்தால் பல பத்திரிகைகள் முளைக்கும். அதன் மூலம் மக்களை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ள முயற்சிகள் நடக்கும். ஒருசார்பு செய்திகளே அவற்றில் இடம்பெறும். ஆனால், மக்களின் மீது அக்கறை கொண்டு மதவாதத்தை வேரறுப்பதற் காக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கம்யூனலிசம் காம்பேட் பத்திரிகையைத் தொடங்கினார் தீஸ்தா.


பயங்கரவாதச் செயல்கள் நடப்பதும், அவற்றைச் செய்த பழி முஸ்லிம்கள் மீதும் தொடர்ந்து கொண்டிருந்தபோது அதற்கு முடிவு கட்டியவர் தீஸ்தா’’ என்று நல்ல கண்ணு மனந்திறந்து பாராட்டினார்.


துவக்கவுரையாற்றிய தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தீஸ்தா செட்டில் வாட்டின் களப்பணி களை ரத்தின சுருக்கமாக எடுத்துரைத்தார்.


“தீஸ்தாவின் தந்தையார் பிரபல வழக்குரைஞர், அவரது வீட்டிலிருந்த விசாலமான நூலகத்தில், காந்தி, நேரு, போன்ற புகழ்பெற்றத் தலைவர்கள் எழுதிய நூல்கள் இருந்தன. அவற்றை இளம் வயதில் ஆர்வமாகப் படித்தார் தீஸ்தா. இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கர் எழுதிய நூல் ஒன்று கூட இல்லாததைக் கண்டு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தார்.


நாட்டின் வரலாற்று நூல்கள் ஒரு சார்பாகச் சொல்லப்பட்டிருப்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த தீஸ்தா, மதச்சார்பற்ற வரலாற்றை ஊன்றிப் படித்தார். பாபரி மஸ்ஜித் இடிப்பு என்ற பயங்கரவாதம் அவரை நேரடிக் களப்போராளியாக முழுவீச்சில் இறக்கியது.


அத்தகைய மனித உரிமைப் போரா ளியை தமிழ் மக்கள் சார்பாக வரவேற் கிறேன்’’ என்று பேரா. ஜவாஹிருல்லாஹ் முடித்தபோது அரங்கத்திற்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து,


தீஸ்தா செட்டில்வாட், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையினை நிகழ்த்தினார். தனது உரையில் தமுமுகவையும், அதன் தலைமையையும் மனந்திறந்து பாராட்டினார்.


கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத் தலைவர் சேவியர் அருள்ராஜ் தீஸ்தாவின் உரையை மொழிபெயர்த்தார்.


மனித உரிமை ஆர்வலர்கள், முன்னணி பத்திரிகையாளர்கள், பல்வேறு அமைப்பு களின் நிர்வாகிகள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், என பலதரப்பட்ட பிரபலங்களும் அரங்கிற்கு மதிப்பைக் கூட்டினர்.


உரையின் முடிவில் முக்கியமான கேள்விகளுக்கு தீஸ்தா பதிலளித்தார்.
நரேந்திர மோடியும் சென்னைக்கு வந்துபோனார். சென்னை மாநகரெங்கும் “மோடியே வெளியேறு’’ என தமிழ்மக் கள் வரவேற்புரை கொடுத்தனர்.


மோடியின் முகத்திரையைக் கிழித்த தீஸ்தாவுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு அவரை நெகிழ வைத்தது.


தமிழகத்தின் தனிச்சிறப்பு இந்நிகழ்ச்சியில் பிரதிபலித்தது.


www.tmmk.info

Blog Archive