Breaking News
recent

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு

காஞ்சிபுரம், ஜன. 5: மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் மீஞ்சூர், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது.

அதன்படி மீஞ்சூரில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெம்மேலியில் ரூ.1000 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஏராளமானோர் திங்கள்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தோஷ் மிஸ்ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சூளேரிகாட்டுக்குப்பம், மாமல்லபுரம் மீனவர் பகுதி, தேவநேரி, சாலுவான்குப்பம், பட்டிபுலம், காட்டுக்குப்பம், புதுநெமிலி, கல்பாக்கம், செம்மஞ் சேரிகுப்பம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையாக பாதிப்படைவர்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி னால் அதில் இருந்து வெளியாகும் ரசாயனப் பொருள்களால் கடல் நீர் பாதிக்கப்பட்டு மீன்கள் உள்ளிட்டவை அழிந்து விடும்.

இதனால் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என கோரியுள்ளனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.