Breaking News
recent

முதுகுளத்தூரில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்


முதுகுளத்தூர், ஜன. 25: முதுகுளத்தூரில் அரசு கேஸ் சிலிண்டர் விற்பனை ஏஜன்சி முறைகேட்டைக் கண்டித்து தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முதுகுளத்தூரில் அரசு கேஸ் சிலிண்டர்கள் விற்பனை உரிமம் பெற்ற ஏஜன்சியினர் சிலிண்டர் வாங்குவோரை அடுப்பு வாங்க கட்டாயப்படுத்துதல், தாமதமாக சிலிண்டர் வழங்குதல்.

தட்டுப்பாடு சூழ்நிலையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்றல் உள்ளிட்ட புகார்களைக் கூறி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாபாட்டம் நடத்தினர்.

பஸ் நிலையம முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சகுபர் சாதிக் தலைமையும், ஒன்றியச் செயலர் வாவா ராவுத்தர், நகரத் தலைவர் அமீர்கான், செயலர் அமீர் ஹக், பொருளாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.