அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி அலைக்கழிப்பு: இலவச ஆம்புலன்ஸிலேயே பிறந்தது குழந்தை

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி அலைக்கழிப்பு: இலவச ஆம்புலன்ஸிலேயே பிறந்தது குழந்தை


சிதம்பரம், ஜன. 4: சிதம்பரம் அருகே குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் பிரசவத்திற்கு வந்த பெண் அலைக்கழிக்கப்பட்டார்.

பின்னர் 108 எண்ணில் தொடர்பு கொண்டு இலவச ஆம்புலன்ஸில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அப்பெண்ணிற்கு பிரசவமாகி குழந்தை பிறந்தது.

சிதம்பரத்தை அடுத்த கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் புலவேந்திரன். இவரது மனைவி கண்ணகி (27). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை அருகே உள்ள குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் குழந்தை தலைகீழாக மாறி கிடக்கிறது. அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். இங்கு அறுவை சிகிச்சை வசதி இல்லை எனக் கூறி அலைக்கழித்துள்ளனர்.

புலவேந்திரன் உடனடியாக இலவச ஆம்புலன்ஸ் எண்: 108-க்கு போன் செய்தார்.

தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவிலில் இருந்த தொழில்நுட்ப அலுவலர் ரவிகுமார் தலைமையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து கண்ணகியை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கண்ணகியை சோதனை செய்த டாக்டர் இது மிகவும் சிக்கலான கேஸ்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். உடனடியாக கண்ணகியை மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ரயில்வே கேட்டை தாண்டியபோது கண்ணகிக்கு பிரசவவலி அதிகரித்து குழந்தை பாதி வெளியே வந்துள்ளது.

ஆம்புலன்ஸில் பெண் ஊழியர் யாரும் இல்லாததால் மருத்துவ தொழில்நுட்ப அலுவலர் ரவிகுமார் மற்றும் அவரது கணவர் புலவேந்திரன் ஆகிய இருவரும் ஆம்புலன்ûஸ சாலையோரம் நிறுத்தி பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நலமாக உள்ளனர். ஆரம்ப சுகாதா நிலையத்திலும், அரசு மருத்துவமனையிலும் டாக்டர்களால் அலைகழிக்கப்பட்டு தொழில்நுட்ப அலுவலரால் ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவமானது குறித்து அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.

இதுகுறித்து ரவிகுமார் தெரிவிக்கையில், "108 ஆம்புலன்ஸில் அனைத்து வசதிகளும் உள்ளன. சென்னை அரசு மருத்துவமனை, கீழப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவம் குறித்து தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் பிரசவம் பார்த்தாக தெரிவித்தார். அந்த இளைஞரின் மனிதாபிமானத்தை அனைவரும் பாராட்டினர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.