என்.என்.எஸ். முகாம் நிறைவு விழா
கமுதி, ஜன. 5: கமுதி அருகே காட நகரியில் அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ். முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
காட நகரியில் தொடர்ந்து 10 நாள் நடைபெற்ற சிறப்பு சேவை முகாமில் தெருச் சுத்தம், கிராம சாலை சீரமைப்பு, கோவில் உழவாரப் பணி, எய்ட்ஸ் ஒழிப்பு, பாலிதீன் ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி உள்பட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இதை முன்னிட்டு பொது மற்றும் கால்நடை இலவச மருத்துவ முகாம், கருத்தரங்கம், பட்டிமன்றம், நகைச்சுவை நிகழ்ச்சி, பல குரல் நிகழ்ச்சி, மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றன.
நிறைவு விழாவுக்கு கிராமத் தலைவர் சி. ராமசாமி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் இ.எம். இதிரீஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எஸ். பசீர் அகம்மது வரவேற்றார்.
மாணவர்கள் சேவையை பாராட்டி பலர் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர். ஜாகிர் உசேன், உதவி ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஏ.ஆர். பஷீர், அ. கண்ணதாசன் ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி நிர்வாகக் குழுவினர், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் எஸ். அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
AdiraiPost
அபிராமம்
முஸ்லிம்
மேல்நிலைப்பள்ளி
அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்