Khadir Mohideen Hr.sec.School, புளிய மரம்
இந்த புளிய மரம் மட்டும் இன்னும் நவீன காலத்து தாக்கத்தில் இந்நாள் வரை அழியவே இல்லை எனும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது.
போனவருடம் ஊருக்கு போனபோது என் கேமராவை கையில் எடுக்கும்போது என் பள்ளிக்கூட நினைவுகளும் என்னுடன் ஒட்டிக்கொண்டது .80'களின் தொடக்கத்தில் Hr.Sec முடித்த என்னைபோன்ற நிறைய பேருக்கும் இந்த மரத்துக்கும் தொடர்பு இருக்கும். [சமயங்களில் பரீட்சைக்கு படிக்கும்பொது கூட இந்த மரத்தில் ஏறி படித்ததுண்டு, இப்போது மரம் ஏறச்சொன்னால் அப்போதுதான் யாரோ காலை பிடித்து இழுப்பதுபோல் ஒரு paranoid. இதுவரை சுரக்காத "அட்ரலின்" சுரப்பிகள் தனது கடமையை செய்து நிறைய பயத்தை தரும்
இந்த புளிய மரத்துக்காற்றை உல்லிழுக்கும் போது மனதுக்குள் இத்தனை நாள் ஒழிந்திருந்த நினைவுகளும் வெளிப்பட்டது [ Nuerolinguistic].
விளையாட்டுபோட்டிகள், ..மார்ச்/ஏப்ரல் மாதத்து காற்றில் போராடும் அந்த கலர் பேப்பர் கற்றிய கொடி மரம், சுத்தமான வாய்க்காளில் நீந்தும் மீன், பார்க்கும் அளவுக்கு நீரின் தெளிவு [ இப்போது சாக்கடை வாய்க்காலையே மறைத்து விட்டது..உபயம்...... காலேஜ் கேன்டீன்]
பந்து விளையாட்டின்போது வீசிய காற்றில் அடித்த ஜெர்சியின் வேர்வை நாற்றம். ஒட்டப்பந்தயங்களில் உமலில் வாங்கி வந்து தந்த தக்காளிப்பழம், குலுகோஸ்.....ஆடி மாதக்காற்றில் அழகாக பெண்டுலம் எபெக்ட் சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவை மரத்தின் சின்னக்கோலம்.
வாழ்க்கை ஒட்டத்தில் எத்தனையோ பிரபலங்களை சந்தித்து விட்டாலும் இன்னும் மனதை விட்டு அகலாத சாமாண்யர்கள் , நேனா பாய்[ நெய்னா காக்கா], செல்லாக்காசுகளை சேமிக்கும் இடத்தில்[கப்ரு] தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அந்த உடல் ஊனமுற்ற அந்த ஸ்கூல் வாட்ச்மேன்.இன்னும் எத்தனையோ...?
பரீட்சை நெருங்கும்போது சீரியஸாக படிக்கும்போது மட்டும் மறவாமல் ஒலிபரப்பாகும் செம்படவர்தெரு வீட்டுக்கல்யாணத்தின் [திரைப்பட்த்தின்] ஒலிச்சித்திரம்..என் காலங்களில் "16-வயதினிலே' "திரிசூலம்" .......இன்னும் மனதை விட்டு அகலாத எத்தனையோ நிகழ்வுகள்.
HSC முடிந்ததும் [பரீட்சைக்கு முன்னால்] நடந்த Social Break Up ...ஆசிரியர்களை பற்றி இன்னொரு முறை எழுதலாம் என்று சொல்லும் அளவுக்கு விசயங்கள் இருக்கிறது.
என்னுடன் எப்போதும் நடந்து வந்த friends[வகுப்பு மட்டும்] அருகாமையில் ஒரு ராணுவ பலம் இருந்ததாக உணர்ந்தேன்
இக்பால், அஸ்ரப்[சிஙகம் family ] அப்துல் பத்தாஹ், A.H. அமானுல்லாஹ், மீராசாஹிப்[X2], அபுல்கலாம், ரபீக்...எங்கே என்னை விட்டு இவ்வளவு தூரம் போனீர்கள்...?
நாம் எல்லோரும் பூமியில் பணம் தேடி வானத்தில் உள்ள மேகங்களை பார்க்க மறந்து விட்டோம்
Zakir Hussain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்