Breaking News
recent

பெரம்பலூரில் அரிமா சங்கம் மூலம் 100 பேருக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்

பெரம்பலூரில் அரிமா சங்கம் மூலம் 100 பேருக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்
2 நாட்கள் நடக்கிறது

பெரம்பலூர், பிப். 19-
பெரம்பலூரில்அரிமா சங்கம் மூலம் 100 பேருக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ளும் திட்டத்திற்கான இருதய நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் 28-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளதாக அதன் தலை வர் தெரிவித்தார்.
இலவச இருதய நோய் கண்டறியும் முகாம்

பெரம்பலூரில் அரிமா சங்கம், ஆண்டிமுத்து சின்னப் பிள்ளை அறக்கட்டளை, முத்து மெடிக்கல் சென்டர் மற்றும் மெட்ராஸ் மிஷன் மருத்துவமனை சார்பில் இலவச இருதய நோய் கண்டறி யும் முகாம் தனலட்சுமி சீனி வாசன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இம்மாதம் 28-ஆம் தேதி மற்றும் மார்ச் 1-ஆம் தேதி (சனி, ஞாயிறு) நடக்கிறது.

இந்த முகாம் குறித்து அரிமா தலைவர் இமயவரம்பன், சாசனத்தலைவர் ராஜாராம், நிர்வாகச்செயலாளர் ஜவகர், பொருளாளர் பனங்கூர் ராஜு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிதி உதவி செய்யப்படும்

9 வருவாய் மாவட்டங்கள் அடங்கிய 324- ஏ2 அரிமா மாவட்டத்தின் முன்னாள் ஆளுனர் எஸ்.டி.எஸ். வாசன் பதவி காலத்தில் இளம் சிறார் இதயம் காப்போம் என்ற திட்டத்தின் மூலம் 53 சிறுவர்-சிறுமியருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.

அதனை முன்மாதிரியாகக் கொண்டு 5 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்களுக்கு நடைபெறும் இந்த முகாமில் இருதய நோய் உள்ளவர்களுக்கு டாக்டரின் ஆலோசனை கடிதத்தின் அடிப்படையில் முன்பதிவு செய்யப்பட்டு 2 நாட்கள் நடைபெறும் முகா மில் இருதய பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை தேவைப் பட்டால் அதற்குரிய மருத்துவ செலவிற்கு பிரதமர், முதல்- அமைச்சர் நிதிஉதவி பெறுவதற்கும், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக் கட்டளை மூலம் நிதிஉதவி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

வெள்ளி விழா ஆண்டில்

கடந்த ஆண்டுகளில் அரிமா சங்கம் செய்திராத வகையில் வெள்ளிவிழா ஆண்டில் இந்த மாபெரும் இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமை மத்திய மந்திரி ராஜா தொடங்கிவைக்கிறார். இருதய சிகிச்சை முகாமில் தங்களை காண்பிக்க விரும்பு வோர் டாக்டரின் பரிந்துரை கடிதத்துடன் நேரில் வந்து பெரம்பலூர் அரிமா சங்க நிர் வாகிககளை தொடர்பு கொள் ளலாம். அல்லது 98424- 28007, 98424-60678 மற்றும் 94434-45787, ஆகிய செல்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மத்தியமந்திரிக்கு நன்றி

இருதய சிகிச்சை முகாமிற்கு சிறப்பான நிதிஉதவி அளித்த ஏ.சி. அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கலியபெருமாள் மற்றும் மந்திரி ராஜா ஆகியோ ருக்கு அரிமா, அரிவையர் மற்றும் லியோ சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அப் போது ஹவுசிஸ் புரொ மோட் டர் பச்சமுத்து, எல்.ஐ.சி. ராதாகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.