Breaking News
recent

61-ம் ஆண்டில் முஸ்லிம் லீக்;தேசியத்தலைவர் முக்கிய அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துவக்கநாள் மார்ச்10-ம் தேதி வருகிறது. அதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கிளை ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 100 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமானஇ.அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீக் அமைப்புகளுக்கும் அவர் ஒரு சுற்றரிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது தேசிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்கும்
இயக்கம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

நமது கட்சியின் நிறுவனர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள், நமது சமூகம் எந்த அளவு ஒற்றுமையுடன் இணைந்திருக்கிறமோ அந்த அளவுக்குத்தான் பிற சமூகத்தினர் நம்மை மதிப்பார்கள் நாம் ஐக்கியப்பட்டால்தான் சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் சேவை செய்ய முடியும் நாம் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாம் தேர்தல் காலங்களில் ஒத்த நோக்கம் உடைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து வருகிறோம் நாம் ஒன்று சேராவிட்டால் கங்கை நதியில் வீசப்பட்ட சர்க்கரை மூட்டைபோல் காணாமல் போய்விடுவோம் என்று கூறியுள்ளார்கள்.
எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் இயக்கத்தில் அசையாத நம்பிக்கை கொண்டு சமுதாயம் ஒன்றுபட்டால் சமூக கல்வி மற்றும் அரசியல் ஆளுமைக்கு நாம் நன்றாக செயல்பட முடியும்.

திருக்குர்ஆனும் நமது நாயகம் (ஸல்) அவர்களும் போதித்திருப்பதுபோல் ஒன்றுபட்டு உழைத்தால்தான் நமது வாழ்க்கையில் எண்ணியதை அடைய முடியும்.

மதிப்புமிக்க அரசியல் விழுப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு அதிகார பகிர்வை பெற்றுத் தருவதிலும் அதன் மூலம் நமக்கு அரசியல் சட்டப்பூர்வமான உரிமைகளை நாம் அடைவதற்கும் இந்தியாவில் கவுரவமான வாழ்க்கை நாம் வாழ்வதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபட்டு வருவதை வேறு எந்த கட்சியாலும் அகற்ற முடியாது.

வருகிற மார்ச் 10ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவப்பட்ட தினமாகும். அந்த தினத்தை நாம் நமது சமுதாயத்திற்கும் இந்த தேசத்திற்கும் அர்ப்பணிக்கும் நாளாக கொண்டாடுவோம். அதை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரைமரி கிளைகளில் குறைந்த பட்சம் 100 உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தேசிய தலைவர் இ.அஹமது கூறியுள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.