ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் மொழிப்பாடமாக தமிழ் மொழி சேர்ப்பு
ரியாத் இந்திய பன்னாட்டு பொது பள்ளியில் (Indian International Public School, Riyadh ) வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்ப் பாடமும் மொழிப்பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளுக்கும், பின்னர் மற்ற வகுப்பினருக்கும் தமிழ்ப்பாடம் சேர்க்கப்படவுள்ளது.
தமிழ்ப்பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தமைக்காக ரியாத் தமிழ்ச் சங்கம் பள்ளியின் தாளாளருக்கும், மேலாண்மை குழுவினருக்கும், பள்ளியின் முதல்வருக்கும் பெருநன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள்.
பாடத்திட்டத்தில் தமிழைச் சேர்க்க அரும்பாடுபட்ட தமிழார்வம் கொண்ட அனைத்து பெற்றோருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ரியாத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் சவுதி தமிழ்ச் சங்கத்திற்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தகவல் :
ராஜா,செயலாளர், ரியாத் தமிழ்ச் சங்கம்.
AdiraiPost
தமிழ்
பள்ளி
மொழி
ரியாத்
ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் மொழிப்பாடமாக தமிழ் மொழி சேர்ப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்த வாய்ப்பை ரியாத்துத் தமிழ் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குஅய்யா, தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
பதிலளிநீக்குதொடர்ந்து வாருங்கள்; கருத்து பதியுங்கள்!!
தாங்களுடைய தளம் அருமை; கருத்துகள் நிறம்பிய பெட்டகம்!