என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா
கீழக்கரை, பிப். 27: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் சார்பில் திருப்புல்லாணி அருகே மாவிலான்தோப்பு என்ற மருதன் தோப்பு கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவிலான் தோப்பு கிராமத்தில் தொடர்ந்து 10 நாள்களாக நடந்து வந்த இம் முகாமின் நிறைவு விழாவுக்கு பாலிடெக்னிக் முதல்வர் அ. அலாவுதீன் தலைமை வகித்தார்.
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செய்யது அபுதாஹிர், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கோவிந்தன் வரவேற்றார். பாண்டியன் கிராம வங்கி மேலாளர் கோமதிநாயகம், வார்டு உறுப்பினர்கள் ராமுக்கனி, மனோகரன், மாயாண்டி, நடராஜன், நாடார் பள்ளித் தலைமை ஆசிரியர் அன்புச் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாள்களாக நடைபெற்ற இம்முகாமில் இலவச கண் சிகிச்சை முகாம், வன்முறை மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், பள்ளிகளைச் சுத்தம் செய்தல், பூங்காக்கள் அமைத்தல் ஆகியனவும் நடைபெற்றன.
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன நாட்டு நலப்பணித் திட்ட மற்றொரு திட்ட அலுவலர் இளமுருகு நன்றி கூறினார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்