தாய் பாலூட்டியதால் பரிதாபம் விமானத்தில் 4 மாத குழந்தை சாவு
மலப்புரம், மார்ச்.12-
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி என்ற இடத்தை சேர்ந்தவர் சீதா சிபு. வளைகுடா நாட்டில் பணிபுரியும் கணவருடன் வசித்து வருகிறார். கர்ப்பமாக இருந்த சீதா, சொந்த ஊருக்கு வந்து குழந்தை பெற்றுக் கொண்டு மீண்டும் வளைகுடாவுக்கு நேற்று புறப்பட்டார். கோழிக்கோட்டில் இருந்து விமானத்தில் தனது 4 மாத குழந்தை பிரித்வின் மற்றும் கணவருடன் இருந்தார்.
விமானம் புறப்படும் சமயத்தில் குழந்தை பிரித்வினுக்கு அவர் பாலூட்டினார். ஓடுபாதையில் விமானம் சென்றபோது, குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாமல் இருப்பதை பார்த்து சீதா கதறி அழுதார். உடனே, அந்த விமானத்திலேயே பயணியாக இருந்த டாக்டர் ஒருவர் குழந்தையை பரிசோதித்தார். குழந்தை மூச்சு விடாமல் இருப்பது தெரிய வந்தது.
உடனே, விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்து விமானம் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. குழந்தை பிரித்வினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விமானம் புறப்படும் சமயத்தில் பால் கொடுத்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து இருக்கலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
AdiraiPost
குழந்தை
சாவு
தாய்
பரிதாபம்
விமானம்
தாய் பாலூட்டியதால் பரிதாபம் விமானத்தில் 4 மாத குழந்தை சாவு
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்