
இந்தியச் சமூகத்தின் பின்தங்கிய நிலைக்கு இந்தியத் தலைவர்களே காரணம்
11/03/2009
ஈப்போ
மலேசிய இந்தியச் சமூகத்தினர் பொருளியல் ரீதியில் பின்தங்கி இருப்பதற்கு, மலேசிய இந்தியத் தலைவர்களே காரணம் என பிரதமர் இலாகாவின் துணை அமைச்சர் செனட்டர் டி.முருகையா நேற்று கூறினார்.
மலேசிய இந்தியத் தலைவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியச் சமூகத்தின் பின்தங்கிய நிலைக்கு அரசாங்கத்தையோ அல்லது பிரதமர் டத்தோ { அப்துல்லா அகமது படாவியையோ குறை சொல்லமுடியாது என்றார் அவர். ஏனெனில், இந்தியச் சமூகத்திற்கு உதவிட இந்தியச் சமூகத் தலைவர்களைப் பிரதமர் நியமித்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் இலாகாவின் இந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் திரு முருகையா, இந்தியத் தலைவர்கள் தங்கள் சமூகத்தினருக்குச் சரியான தகவல்களைத் தெரிவிக்கத் தவறிவிட்டதாகவும், இதனால் இந்தியச் சமூகத்தினர் பொருளியல் ரீதியில் பின்தங்கிவிட்டதாகவும் சொன்னார்.
பொருளியல் துறையில் அரசாங்கம் உருவாக்கித் தரும் வாய்ப்புகளையும் இந்தியச் சமூகத்தினரிடம் தெரியப்படுத்தத் தவறியதால்தான் இந்தியச் சமூகத்தினர் சினமடைந்து, கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டனர் என்றார் அவர்.
“சொல்லப்போனால், இந்தியச் சமூகத்தினருக்காக அரசாங்கம் பல தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. ஆனால் இவற்றைப் பற்றிய விவரம் அறியாமல் இந்தியச் சமூகத்தினர் பின்தங்கிவிட்டனர்” என்றார் அவர். சிறு தொழில்கள் மற்றும் வேளாண்மை விவசாயம் பற்றிய ஆய்வரங்கைத் தொடங்கி வைத்தபிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
- தி ஸ்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்