பிற மதங்களை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை': பிரதமர் மன்மோகன் சிங்
புது தில்லி, மார்ச் 10: பிற மதங்களை விமர்சிக்க எவருக்கும் உரிமை கிடையாது என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
மீலாது நபியை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை உருது மீடியம் பள்ளி ஒன்றில் மன்மோகன் சிங் ஆற்றிய உரை:
நமது அரசியலமைப்புச் சட்டம் யார் வேண்டுமானாலும் எந்த ஒரு மதத்தையும் தங்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு பின்பற்றலாம் என்ற சுதந்திரத்தை அளித்துள்ளது. அதேசமயம் பிற மதங்களை விமர்சிக்கும் உரிமையை எவருக்கும் வழங்கவில்லை.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் பெண்களின் வளர்ச்சியைப் பொறுத்து அமைகிறது. எனவே, ஒரு நாட்டில் பெண்கள் முன்னேறவில்லை என்றால் அந்நாட்டின் முன்னேற்றமும் தடைபடும். பெண்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்பை அளிப்பது அவசியம்.
உருது மொழியானது நமது நாட்டின் கலாசார அடையாளமாகத் திகிழ்கிறது. இதைக் கருத்தில் கொண்டு உருது மொழியின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார். முன்னதாக, அந்த உருது பள்ளி மாணவிகளுடன் மீலாது நபி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார் பிரதமர்.
பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பது இதுவே முதல் தடவை.
AdiraiPost
பிரதமர்
மன்மோகன் சிங்
பிற மதங்களை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை': பிரதமர் மன்மோகன் சிங்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்