இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு
ஸ்ரீபெரும்புதூரில் முதலாவது இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு வரும் ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது.
வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இது குறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடையவும், உலக அரங்கில் முதன்மை பெறவும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
நமது இளம் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெறும் வகையில் திறன்களை மேம்படுத்துவது எப்படி என்பதை விளக்கும் வகையில் இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், எம்.எஸ். சுவாமிநாதன் ஃபவுண்டேஷன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றன.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் இம் மாநாடு வரும் ஜூன் 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பல்துறை மாணவர்கள் தங்களது பெயர் விவரங்களை முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய இணைய தள முகவரி:
www.mss.org
www.srmuniv.ac.in
www.rgniyd.gov.in
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்