பரமக்குடியில் கழிவு நீரால் பாதசாரிகள் அவதி
பரமக்குடி, மார்ச் 9: பரமக்குடி பஸ் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பேக்கரி மற்றும் டீக் கடைகளின் கழிவு நீரால் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பரமக்குடி பஸ் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட டீக் கடை, பேக்கரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் கழிவுநீர் செல்ல முறையான வசதிகள் இல்லை. பஸ் நிலையத்தில் உள்ள தனியார், நகராட்சி கடைகளின் கழிவுநீர் பஸ் நிலையம் முன்பாக ஊற்றப்படுகின்றன. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேக்கரி மற்றும் டீக் கடைகளின் கழிவு நீர் பொதுமக்கள் நடந்து செல்லும்போது ஊற்றப்படுகிறது.
இக் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதன் மீது வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் பொதுமக்கள் மீது தெறிக்கிறது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் சாலைகளில் கழிவுநீரை ஊற்றும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்