Breaking News
recent

ஆர்க்காடு இளவரசர், டாக்டர் சையத் சத்தார் உள்பட ஐவருக்கு "மௌலானா அபுல்கலாம் ஆசாத்' விருது

ஆர்க்காடு இளவரசர், டாக்டர் சையத் சத்தார் உள்பட ஐவருக்கு "மௌலானா அபுல்கலாம் ஆசாத்' விருது

சென்னை, மார்ச் 11: ஆர்க்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி, டாக்டர் சையத் சத்தார் உள்ளிட்ட 5 பேருக்கு "மௌலானா அபுல்கலாம் ஆசாத்' விருதுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள அரபு, பார்சி மற்றும் உருது மொழி துறை சார்பில் "உருது இலக்கியத்தில் மனித ஒழுக்கம்' என்பது தொடர்பான 2 நாள் தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

இதில் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி, எஸ்.கே.கத்ரி, ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார், அப்துல் ஹக்கீம் கல்லூரி நிர்வாகி ஜனாப் ஜியாவுதின் அகமது, மியாசி உருது அகாதெமி நிர்வாகி ஜனாப் ஏ.முகம்மது அஸ்ரப் ஆகியோருக்கு இந்த விருதுகளை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்கினார்.

பின்னர் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பேசியது:

பார்சி, அரபு மற்றும் இந்திய மொழிகளின் கலப்பு உருது மொழி ஆகும். உருது மொழி பஞ்சாபி மொழிக்கு சகோதரி போன்றது. இந்த மொழி இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள மற்ற நாடுகளில் பேசப்படும் மொழியாகும்.

உருது மொழி என்பது இஸ்லாமியர்களின் மொழி என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். அது சரியல்ல. இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாகச் செயல்படுகிறது.

உருது மொழி கவிதைகளும் மதச்சார்பின்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி செய்யும் பிரசாரங்களை ஒரு போதும் உருது மொழி அங்கீகரிக்காது.

உருது மொழி பேசும் மக்கள் எப்போதும் மிகுந்த தேசப்பற்று கொண்டவர்கள். பதற்றமான சூழல் நேரும்போது அங்கு மனிதநேயத்தைப் பரப்புவதில் உருது மொழி கவிஞர்களும், அறிஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன், உருது, அரபு மற்றும் பார்சி மொழி துறைத் தலைவர் நிஷார் அகமது, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் தலைமைச் செயலர் மூசா ரஸô உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் இருந்து சுமார் 75 பிரதிநிதிகளும், லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து 2 பேரும் பங்கேற்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.