Breaking News
recent

நவாஸ் ஷெரீப் மீது ராஜதுரோக வழக்கு சர்தாரி மிரட்டல்

நவாஸ் ஷெரீப் மீது ராஜதுரோக வழக்கு சர்தாரி மிரட்டல்


இஸ்லாமாபாத், மார்ச்.11-

பாகிஸ்தான் அதிபராக முஷரப் இருந்தபோது, நெருக்கடி நிலை காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரி வக்கீல்கள் பாராளுமன்றத்தை நோக்கி நீண்ட பேரணி என்னும் போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் தங்கள் கட்சியும் கலந்து கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்து இருக்கிறார். அவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கலவரத்தை தூண்டினால், அவர் மீது ராஜத்துரோக வழக்கு பாயும் என்று அதிபர் சர்தாரியின் அரசாங்கம் மிரட்டி உள்ளது. கலவரம் செய்யும் தூண்டும் வகையில் நவாஸ் ஷெரீப் பேசினாலோ, அறிக்கை வெளியிட்டாலோ அவர் மீது ராஜத்துரோக வழக்கு தொடரப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ரெகிமான் மாலிக் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த பேரணியின் போது, மரண சம்பவம் நடந்தால், சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பு கட்சித்தலைவர்களையே சேரும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் தண்டனைச் சட்டத்தின் சாராம்சங்களை படித்து கலவரத்தை தூண்டுபவர்களுக்கு ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை அரசாங்கம் நிலைநாட்டவேண்டும் என்று ராணுவத்தளபதி கியானி அதிபர் சர்தாரிக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து தான் நவாஸ் ஷெரீப்புக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.