Breaking News
recent

தேசிய லீக் செயற்குழு கூட்டம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேறின

தேசிய லீக் செயற்குழு கூட்டம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேறின
சென்னை, மார்ச்.12_


தேசிய லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தலைவர் சமுதாய புரட்சியாளர் எம்.பசீர் அகமது தலைமையில் நடைபெற்றது




கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளை பெற்று போட்டியிட்டதை போல வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளை அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிடம் கேட்டுப்பெற்று போட்டியிடுவதென இச்செயற்குழு முடிவெடுக்கப்பட்டுள்ளது.




கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஐந்து வருடங்கள் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டாததால் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு முஸ்லிம்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டுமென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.




தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் தேசிய லீக்கின் 'ந>ண்டநாள் கோரிக்கை முஸ்லிம்களின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.




முஸ்லிம் ந>ண்டநாள் கோரிக்கையான முஸ்லிம்கள் நலவாரியம் அமைக்கப்பட வேண்டுமென்பது அதையும் இந்த அரசு செய்யவில்லை அதேபோல் தமிழகத்தில் உருது பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற எங்களது கோரிக்கை மத்திய மாநில அரசு அலட்சியப்படுத்துவதை இச்செயற்குழு கண்டிக்கிறது.




கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்கை செலுத்தி மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கிற்கு சரியான பாடம் புகட்ட் வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.




இலங்கைக்கு மத்திய அரசு இராணுவ தளவாடங்கள் மற்றும் ராடார் கருவிகளை அளித்ததின் காரணமாகத்தான் இன்று நம் சகோதரர்களை இலங்கை இராணுவம் கண் மூடித்தனமாக கொன்று குவித்து வருகிறது. போரை நிறுத்த வற்புறுத்தாத மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.




சென்னை ஐகோர்டில் வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டிக்கிறோம். இத்தாக்குதலை நடத்த உத்தரவிட்டது யார் என்று உச்சந>திமன்றம் கேட்டும் சரியான பதிலை தமிழக அரசு அளிக்காதது ஏன்? காவல் துறைக்கும் ந>தித்துறைக்கும் ஏற்பட்ட இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து கட்சி தலைவர்களை கொண்ட சமாதானக்குழுவை அமைத்து இருசாரரிடம் பேசி இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.




40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்ற பொதுச்செயலாளர் அப்துல்காதர் பொருளாளர் ஜவஹர்அலி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.




கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கொள்கை பரப்பு செயலாளர் பைரோஸ் அகமது வேலூர் யூசுப் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு 10 நாடாளுமன்ற தொகுதிகலும் ஐ.நூறுதீன், வி.எஸ்.கமுருதீன் தலைமையில் 20 பேர் கொண்ட குழு 10 தொகுதிகளிலும் மதுரை அபுதாஹிர், சிவகாசி ஜஹாங்கிர் தலைமையில் 20 பேர் கொண்ட மற்றொரு குழு 10 தொகுதிகளிலும் நாகை சாதிக், திருச்செம்பள்ளி ஷாஜகான் தலைமையில் 20 பேர் கொண்ட குழு 10 நாடாளுமன்ற தொகுதிகளும் மற்றும் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரக்குழுவை அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

1 கருத்து:

  1. அதிகாரப்பூர்வமான தேசிய லீக்கின் மாநிலத் தலைவர் சையத் இனாயத்துல்லாஹ். மாநிலச்செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன். பஷீர் அஹமது, அப்துல் காதர் குழுவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் தனிக்கட்சிப் பெயரில் இயங்காமல் அதே பெயரில் கட்சி நடத்துவது திருட்டுக்கு சமம். இவர்களை முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. ‌ ‌

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.