திருச்சியில் மீலாது நபி விழா பேரணி
திருச்சி, மார்ச் 10: திருச்சியில் மீலாது நபி விழாவையொட்டி, முஸ்லிம்கள் பங்கேற்ற பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட மீலாது கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்கா முன், தொடங்கியது.
முன்னாள் ராணுவ வீரர் இ. ஜாபர்கான் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை முகமது சபிக்ஹூதீன் தொடக்கி வைத்தார்.
பாலக்கரை, காந்தி மார்க்கெட், பெரிய கடை வீதி வழியாகச் சென்ற இந்தப் பேரணி செüக் அருகே முடிவடைந்தது.
பின்னர், எப். அப்துல் கரீம் ஹக்கியுல் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.வி. அப்துல் நாசர், எஸ். சையது அமீர்ஜான், டி.பி.எஸ்.எஸ். ராஜ்முகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, காலையில் மதரசா பள்ளி சார்பில் நடைபெற்ற மீலாது நபி பேரணியில் சிறுவர், சிறுமியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்