Breaking News
recent

ஊடகங்கள் பற்றிய கருத்தரங்கம்

ஊடகங்கள் பற்றிய கருத்தரங்கம்

விழுப்புரம், மார்ச் 24: சமூக மாற்றத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பேசியவர்கள் தற்போது பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக இதழியல் பயிற்சி அளிக்க வேண்டும்.

பத்திரிகையாளர் தினத்தன்று இந்திய அளவிலான பத்திரிகையாளர்கள் கலந்துரையாடுவதற்கு வசதியாக விடியோ கான்பரன்சிங் முறையில் கருத்தரங்கம் நடத்த வேண்டும்.

அரசுப் பணிகளில் பணியிடங்களை நிரப்பும்போது பத்திரிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் மு.குகசரவணன் வரவேற்றார்.

மாவட்டத் தலைவர் க.கதிர்வேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி கலந்து கொண்டு நினைவுப் பரிசை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மு.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்டச் செயலர் நா.விஜயன், சமூகநல கூட்டமைப்புச் செயலர் எம்.பாபு செல்வதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.