பாபர் மசூதி இடிப்பு: வாஜ்பேயி, அத்வானி கைது?
>> திங்கள், 23 நவம்பர், 2009
இந்தியாவையே அவ-மானத்தால் தலைகுனிய வைத்த பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் மதவெறிக் கூட்டமான பாஜகவின் அத்வானி, வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி உள்-ளிட்ட காவிக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை லிபரான் ஆணையம் அறிக்கை உறுதி செய்-துள்ளது.
உத்தரபிரதேச மாநி-லம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த மதவெறிக் கும்-பல் அத்வானி தலைமை-யில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 இல் இடித்து தள்ளியது. இதனால் உ.பி உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் இந்தியா முழுவதும் மிகப் பெரிய கலவரங்கள் வெடித்தன. இந்த மத-வெறி வன்முறைக்கு ஆயி-ரக்கணக்கில் அப்பாவி மக்கள் பலியாயினர்.
இதில் ஏராளமான மக்-கள் கொல்லப்பட்டது-டன், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து-களும் அழிக்கப்பட்டன. இந்தியாவில் எப்-பொழுதும் காணாத அளவுக்கு இந்து மத-வெறிக் கும்பல் வெறி-யாட்டம் நடத்தியது. இதனால் இந்தியாவின் மதச் சார்பின்மை கேள்-விக்குறியாகும் விதத்தில் மிகப்பெரிய தலை குனிவை இச்சம்பவம் ஏற்படுத்தியது. இந்தியா-வில் நிகழ்ந்த இந்தக் கருப்பு சம்பவத்துக்கு உலக நாடுகள் பலவும் தமது கண்டனத்தை பதிவு செய்தன.
இந்நிலை-யில் பாஜக, சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா கும்பலால் நடத்தப்பட்ட இந்த வெறியாட்டத்தின் நிலைமை குறித்து விசா-ரிக்க இச்சம்பவம் நிகழ்ந்த 10 நாள்களில் அன்றைய இந்திய பிரதமர் பி.வி.-நரசிம்மராவ் உத்தரவின் பேரில் நீதிபதி மன்-மோகன் சிங் லிபரான்-கான் தலைமையில் 1992, டிசம்பர் 16 இல் விசா-ரணை ஆணையம் அமைக்-கப்பட்டது.
3 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்-டும் என்ற உத்தரவுடன் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் 48 முறை நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பாக லிபரான் ஆணையம் 399 முறை கூடி, கடந்த 17 ஆண்டு-களாக இந்த அறிக்-கையை தயார் செய்தது. கால நீட்டிப்பால் பல்-வேறு விமர்சனங்களுக்-கும் உள்ளாகிய லிபரான் ஆணையம் இறுதியில் இந்தாண்டு ஜூன் 30 ஆம் தேதி மத்திய அரசி-டம் அறிக்கையை சமர்ப்-பித்தது.
இதன் பின்னர் 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்படிருந்த இந்தக் கொடுமைச் சம்பவத்தின் அறிக்கை இந்திய அரசி-யலில் மிகப் பெரிய புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் லிபரான் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற தகவல் வெளியான உடனேயே இது மிகப் பெரிய பரபரப்பை ஏற்-படுத்தும் என்று எதிர்-பார்க்கப்பட்டது. அதன்-படி லிபரான் ஆணையம் அறிக்கையில் இடம்பெற்-றுள்ள தகவல் குறித்து இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் தகவல் வெளி-யானது.
அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜகவின் மூத்த தலை-வருமான அத்வானி, முன்-னாள் பிரதமர் வாஜ்-பேயி, பாஜகவின் முன்-னாள் தேசிய தலைவர் முரளி மனோகர் ஜோஷி, அப்போதைய உத்திர பிரதேச மாநில முதல-மைச்சர் கலயாண் சிங், உமாபாரதி, சங் பரிவார் அமைப்பின் அசோக் சிங்கால் உள்ளிட்ட முக்-கிய தலைவர்களால்தான் பாபர் மசூதி இடிக்கப்-பட்டதாகவும், இவ்வளவு பெரிய கொடுமைகளுக்-கும் அவர்களே காரணம் என்-றும் அறிக்கையில் கூறப்-பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் காவிக் கும்பலால் மிகக் கவனமாக திட்டமிட்டு, நடத்தப்பட்டதாகவும் மேலும், வாஜ்பேயும், அத்வானியும் இந்தச் சம்பவத்தில் போலி நடுநிலையாளர்களாக நடந்துகொண்டனர் என்றும் இந்த அறிக்கை-யில் கூறப்-பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் 3 ஆவது நாளாக இன்று நடைபெற்று வரும் வேளையில் லிபரான் ஆணையம் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்-கள் குறித்து செய்தி வெளியானவுடன் இந்திய அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சிவசேனா உள்-ளிட்ட காவிக் கும்பல் கடும் அதிர்ச்சி அடைந்-துள்ளது. மேலும் இப்-பிரச்சினை நாடாளுமன்-றத்தில் பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்-பார்க்கப்படுகிறது.
பாபர் மசூதி இடிப்-புக்கும், அதனால் உண்-டான மிகப் பெரிய கல-வரங்களுக்கும் அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்ட மதவெறிக் கும்பலின் தலைவர்களே காரணம் என்பதை அறிக்கை உறுதி செய்திருப்பதால் அவர்கள் மீது பல்வேறு சட்ட நடவடிக்கைகள் பாய உள்ளன. காலம் கடந்து இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டா-லும் மதவெறியர்கள் சட்டத்தின் முன் தண்-டிக்-கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்-பார்ப்பு.
http://viduthalai.periyar.org.in/20091123/news01.html




.jpg)
0 மனம் திறந்து:
கருத்துரையிடுக