தொழுகை நடைப்பெறும் இடம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட சிறிய சலசலப்பு, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அளவுக்கு போனது மிகவும் வேதனையான செய்தி. தொழும் இடம் தொடர்பாக நம்மவர்கள் அடித்துக்கொண்டு கொலை செய்துக்கொண்டார்கள் என்று ஒவ்வொரு வினாடியும் எண்ணும் போது கண்ணீர் வராமல் இல்லை.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், கமிட்டி உறுப்பினர் ஹச்முகமது ஆகிய இருவர் இறந்துள்ளார்கள்.
5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நக்கீரன் இணையத்தளத்தில் இன்று காலை வெளியான பரபரப்பு செய்தியாக இருந்தது, இந்த துப்பாக்கி சூட்டிற்கு தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ததஜ தலைவர் அவர்களின் விளக்கம் தமிழக முஸ்லீம்கள் மத்தியில் கொஞ்சம் பதட்டதை தனித்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. முஸ்லீம்களின் சம்பவங்களை வழக்கம் போல் நம் தமிழ் செய்தி ஊடகங்கள் உண்மை செய்தியை போடாமல் மேலோட்டமான செய்தியை போட்டு நம்மவர்களிடம் குழப்பத்தையும், கலவரத்தையும் தூண்ட முயன்று வருகிறார்கள். நாம் நம்முடைய கலிமாவால் முஸ்லீம்கள் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
ரமழான் மாதத்தில் நடந்த இச்சம்பவத்தில் கொலை செய்யும் அளவுக்கு அந்த சகோதரர்களிடம் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது. அடப்படுபாவிகளா இரண்டு முஃமீன்களுடைய உயிர் பிரிந்துள்ளது இவைகளுக்கு எல்லாம் யார் பொருப்பு?
ரமழான் மாதத்தில் நடந்த இச்சம்பவத்தில் கொலை செய்யும் அளவுக்கு அந்த சகோதரர்களிடம் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது. அடப்படுபாவிகளா இரண்டு முஃமீன்களுடைய உயிர் பிரிந்துள்ளது இவைகளுக்கு எல்லாம் யார் பொருப்பு?
ரமழான் மாதத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் என்பதால் உயிரழந்த அச்சகோதரர்களின் குடும்பங்கள் நிச்சயம் எல்லையற்ற கவலையில் மூழ்கி இருப்பார்கள். அல்லாஹ் அக்குடும்பங்களுக்கு மன நிம்மதியையும், பொருமையையும் தந்தருள்வானாக. ஆமீன். காயம் பட்ட சகோதரர்கள் விரைவில் குணமடைய செய்ய அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோமாக.
என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி... தவறு எங்கு நடந்திருந்தாலும் சரி. கொலை புரியும் அளவிற்கா வெறி முற்றிவிட்டது நம் சகோதரர்களிடம்?
நாளை நமது எதிரியே நம்மை கருவருக்க முற்படும்போது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியாது அழிந்து ஒழிய நல்ல தருணம் அமைத்துவிட்டது. பல இயக்கங்களினால் உண்டான பிரிவினையின் உச்சக்கட்டமா?
இந்த நிலை நீடித்தால், முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் இருந்து துடைத்து எறியப்படும் நாள் வெகுவிரைவில் இல்லை. அல்லாஹ் காப்பாத்துவானாக!
வல்ல அல்லாஹ், யாவற்றையும் நன்கறிந்தவன். தீர்க்கமான அறிவுடையவன்.... நம் அனைவருக்கும் சிந்தித்து விளங்கும் ஆற்றலை தர போதுமானவன். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாத்துவானாக.
யார் சொர்க்கவாசி யார் நரகவாசி என்பதை படைத்த அல்லாஹ் தான் முடிவு செய்வான். இவ்வுலகில் எவருக்கும் அந்த அதிகாரமில்லை. நம் சமுதாயத்தில் உள்ளவர்கள் பித் அத், ஸிர்க் போன்ற பாவங்களில் ஈடுப்பட்டால் நம்மால் முடிந்தவரை அவர்கள் ஹக்கை உணரும் வரை நிதானமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமே தவிர தனித் தனியாக பிரிந்துப் போவதால் பித் அத், ஸிர்க் போன்ற பாவங்களில் ஈடுபடும் மக்களை திருத்துவதற்கான வாய்ப்பு குறைந்துக் கொண்டேதான் போகும். நம் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் சமூக அவலங்களை தூக்கி எறிய இன்னும் நிறைய சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு மிக மிக முக்கிய தேவை சமூக ஒற்றுமையை தவிர வேறு எதுவும் இல்லை.
தமிழகத்தில் அனைத்து முஸ்லீம் ஊர்களிலும் தொழுகை நடத்துவதில் பிரச்சினைகள் இருந்து வருகிறது. கவுரவத்தையும், பிடிவாதத்தையும் விட்டுக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் சகோதரத்துவத்தை பேணி வாழ இப்புனித ரமழானின் கடைசி நாட்களின் அல்லாஹ்விடம் அழுது அழுது துஆ செய்வோமாக.
இயக்க பேதம் அறவே மறப்போம், நாம் எல்லோரும் முஸ்லீம்கள் என்ற சிந்தனையுடன் இனிய உறவு வளர்ப்போம்....
கணத்த இதயத்துடன்
- தாஜுதீன்.
ஒற்றுமை என்பது உதட்டளவில்,
பதிலளிநீக்குஉறவுகள் ஏனொ கைகலப்பில்?
சகோதரன் உயிரை குடிக்கும் குரோதம் ஏனோ கொள்கை முரன்பாட்டில் ?
நரகவாதி,சுவர்கவாதி யார் தீர்மானிப்பது அல்லாஹ் அல்லாமல்?
அடித்துக்கொண்டு சாகவா நாமும் வாழ்கிறோம்??
அமைதி மார்கத்தில் ஏனோ தர்கமும்,மூர்கமும்!!!
அனைவருக்கும் சாந்தியும் ,சமாதனமும் சொன்ன இதயம் ...
ஏனோ சகோதரர்களின் ரத்தம் குடித்தது?
அட பாவிகளா! இதைவிட கை சேதம் ஏதும் இல்லை!கருத்து வேறுபாடு என்றால் அமைதியா கலைந்து போய்விடு,பின் கோபம் தனிந்த பின் அந்த நெருப்பு ஆறிவிடும் ஆனால்..
ஏனோ இன்னும் அந்த நெருப்பின் ரணம் இதயமெல்லாம்..
இருந்து தகிக்கிறதே!
இனியேனும் சிந்திப்போமா???இல்லையேனில் இப்படியே ரத்தம் சிந்தி நம் இனத்தின் மேல் கறைபடியுமா?சிந்திப்பீர் தீர்ப்பு வரும் நாளில் ... நிச்சயம் இதற்கெல்லாம் தீர்ப்புவரும்.
கண்ணீருடன் அன்புச்சகோதரன் முஹமது தஸ்தகீர்.