Breaking News
recent

அதிரையில் ஜனவரி 14,15 கல்வி விழிப்புணர்வு மாநாடு!

அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர்  வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும்
கல்வி விழிப்புணர்வு மாநாடு

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15  தேதிகளில் நம் எதிர்காலச்  சந்ததிகளான மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின முன்னேற்றத்தையும் வளவாழ்வையும் கருத்தில் கொண்டு, கல்வி விழிப்புணர்வு மாநாடு நமதூரில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், நம் சமுதாயத்தின் கல்விச் சிந்தனையாளர்களும் பயிலரங்கு விற்பன்னர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்புச்சொற்பொழிவுகளும் பயிற்சிகளும் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

கல்வி நிலையங்களின் நிர்வாகிகளே! பெற்றோர்களே! பெரியோர்களே! உங்கள் பராமரிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்களை இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் வந்து கலந்து பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்களும் வந்து கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பயன் பெறலாம்.

இவண்,

இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை,
அதிரைநிருபர்,
அதிரை இஸ்லாமிக் மிஷன்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி விரிவான அறிவிப்பும் நிகழ்ச்சி விவரங்களும் பின்னர் வெளியிடப்பெறும், இன்ஷா அல்லாஹ்.

நாளைய நம் சமுதாயத்தை தலைநிமிர்ந்த சமுதாயமாக உருவாக்குவோம். நமக்குரிய உரிமைகளை  நம் பக்கம் மீட்டெடுப்போம்.   ஆட்சி  அதிகாரத்திலும், சட்டத்துறையிலும், நீதித்துறையிலும் நம் இஸ்லாமிய ஆளுமையை நிலைநிறுத்துவோம்.  உலக மக்களுக்கு ஓர் உதாரணமாக நம் வருங்கால சந்ததியினரை உருவாக்க அனைவரும் வாருங்கள்,  மார்க்க கல்வியுடன் உலகக்  கல்வியை  வழியுறுத்தி வலுமைமிக்க  சமுதாயமாக  நம்  முஸ்லீம் சமுதாயம் உருவாக  ஒற்றுமை கரம் நீட்டுகிறோம். வாருங்கள் ஒன்றுபடுவோம்.  வெற்றி  பெற்ற  சமுதாயமாக  உருவெடுப்போம்.  இன்ஷா அல்லாஹ். 

கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற படைத்தவனிடம் துஆ செய்கிறோம். நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.

கல்வி விழிப்புணர்ச்சி சபதத்துடன்....

-- அதிரைநிருபர் குழு
 
எமது நன்றியும் கோரிக்கையும்!

திரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை, அதிரைநிருபர்  வலைக்குழுமம் மற்றும் அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும் இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்க்கு அதிரைநிருபர் வலைக்குழுமம் முழு முதற்காரணம் என்பதை நாம் அறிவோம்.

கிடைக்கும் செய்திகளையும் தகவல்களையும் பதிந்து 'நோட்டீஸ் போர்ட்'டாக இல்லாமல் சமுதாயத்தின் தேவையறிந்து, கட்டுரைகள் வெளியிட்டு கருத்துரைகளை உன்னிப்பாக அவதானித்து, நமது மக்களின் ஆர்வத்தையறிந்து, இன்று செயல் வடிவம் கொடுத்து வெற்றிக் களத்தில் நிற்கிறார்கள்! அல்ஹம்துலில்லாஹ்.

தொடர வேண்டும்:

இந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு முதலாவது மாநாடாக அமையட்டும் இனிவரும் வருடங்களும் தொடர்ந்து நடத்தவேண்டும்.

தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!

‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி
 
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகிறோம் ! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் இம் மாநாடு வெற்றிக் களம் கண்டிட அதோடு தொடர் சேவைகளை செய்திட பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    எங்கள் கோரிக்கையை ஏற்று தங்களின் வலைப்பூவில் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு அறிவிப்பு செய்தியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

    தங்களின் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.