இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு டிசம்பர் 11 - 2010 சனிக்கிழமை காலை 9மணி முதல் இரவு 9 மணிவரை அனைத்து நிகழ்ச்சிகளையும் அதிரை போஸ்ட் http://adiraipost.blogspot.com/ இணையதளத்தில் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்புச் செய்கிறது.
மாநாடு சம்மந்தமான கருத்துக்களை இங்கு பின்னூட்டம் மூலம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
AdiraiPost
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
நேரடி ஒளிபரப்பு
iuml
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு அதிரை போஸ்டில் நேரடி ஒளிபரப்பு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

12 மணி நேர மாநாட்டில் தலைவர்களே,செயலாலர்களே என்று டயத்தை வீணடிக்காமல் திட்டமிட்டு நல்ல நவீன யுத்திகளை பேச்சில் பயன் படுத்துவது பேச்சாளருக்கும்,கட்சிக்கும் நல்லது.வெற்றி, சாதனை நிச்சயம்.-எம்.ஹெச்.ஜஹபர் சாதிக்.
பதிலளிநீக்குஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.
பதிலளிநீக்குபோலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.
சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?