வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு கொண்டாடலாமா?

  • நாளை ஆங்கில வருட கணக்கு படி 2011 ஆம் ஆண்டு துவங்க உள்ளது. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 
  • இது கிருத்துவர்களின் வருடபிறப்பாகும். இதை முஸ்லிம்களில் சிலர் கொண்டாடுகின்றனர்.  
  • இது முற்றிலும் தவறாகும். 
  • வாழ்த்து செய்தியும் புத்தாடை அணிவதும் கூடாது. 
  • சென்னை வாழ்முஸ்லிம்களே புத்தாண்டு கொண்டாட்டம்என்ற பெயரில் அனாசாரத்தை அரேங்கேற்றாதீர்கள். 
  • புத்தாண்டு வாழ்த்துஎன்ற பெயரில் வாழ்த்துசெய்தி அனுப்பாதீர்கள்.
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 யார் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல.

 நூல்:அபு தாவூத்

 எண்:3512,4203 

புதன், 29 டிசம்பர், 2010

அதிரையில் ஜனவரி 14,15 கல்வி விழிப்புணர்வு மாநாடு!

அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர்  வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும்
கல்வி விழிப்புணர்வு மாநாடு

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15  தேதிகளில் நம் எதிர்காலச்  சந்ததிகளான மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின முன்னேற்றத்தையும் வளவாழ்வையும் கருத்தில் கொண்டு, கல்வி விழிப்புணர்வு மாநாடு நமதூரில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், நம் சமுதாயத்தின் கல்விச் சிந்தனையாளர்களும் பயிலரங்கு விற்பன்னர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்புச்சொற்பொழிவுகளும் பயிற்சிகளும் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

கல்வி நிலையங்களின் நிர்வாகிகளே! பெற்றோர்களே! பெரியோர்களே! உங்கள் பராமரிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்களை இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் வந்து கலந்து பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்களும் வந்து கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பயன் பெறலாம்.

இவண்,

இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை,
அதிரைநிருபர்,
அதிரை இஸ்லாமிக் மிஷன்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி விரிவான அறிவிப்பும் நிகழ்ச்சி விவரங்களும் பின்னர் வெளியிடப்பெறும், இன்ஷா அல்லாஹ்.

நாளைய நம் சமுதாயத்தை தலைநிமிர்ந்த சமுதாயமாக உருவாக்குவோம். நமக்குரிய உரிமைகளை  நம் பக்கம் மீட்டெடுப்போம்.   ஆட்சி  அதிகாரத்திலும், சட்டத்துறையிலும், நீதித்துறையிலும் நம் இஸ்லாமிய ஆளுமையை நிலைநிறுத்துவோம்.  உலக மக்களுக்கு ஓர் உதாரணமாக நம் வருங்கால சந்ததியினரை உருவாக்க அனைவரும் வாருங்கள்,  மார்க்க கல்வியுடன் உலகக்  கல்வியை  வழியுறுத்தி வலுமைமிக்க  சமுதாயமாக  நம்  முஸ்லீம் சமுதாயம் உருவாக  ஒற்றுமை கரம் நீட்டுகிறோம். வாருங்கள் ஒன்றுபடுவோம்.  வெற்றி  பெற்ற  சமுதாயமாக  உருவெடுப்போம்.  இன்ஷா அல்லாஹ். 

கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற படைத்தவனிடம் துஆ செய்கிறோம். நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.

கல்வி விழிப்புணர்ச்சி சபதத்துடன்....

-- அதிரைநிருபர் குழு
 
எமது நன்றியும் கோரிக்கையும்!

திரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை, அதிரைநிருபர்  வலைக்குழுமம் மற்றும் அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும் இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்க்கு அதிரைநிருபர் வலைக்குழுமம் முழு முதற்காரணம் என்பதை நாம் அறிவோம்.

கிடைக்கும் செய்திகளையும் தகவல்களையும் பதிந்து 'நோட்டீஸ் போர்ட்'டாக இல்லாமல் சமுதாயத்தின் தேவையறிந்து, கட்டுரைகள் வெளியிட்டு கருத்துரைகளை உன்னிப்பாக அவதானித்து, நமது மக்களின் ஆர்வத்தையறிந்து, இன்று செயல் வடிவம் கொடுத்து வெற்றிக் களத்தில் நிற்கிறார்கள்! அல்ஹம்துலில்லாஹ்.

தொடர வேண்டும்:

இந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு முதலாவது மாநாடாக அமையட்டும் இனிவரும் வருடங்களும் தொடர்ந்து நடத்தவேண்டும்.

தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!

‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி
 

செவ்வாய், 28 டிசம்பர், 2010

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்(அமீரகக் கிளை) கட்டுரைப் போட்டி

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்-
அமீரகக் கிளையின் சார்பில்
கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.
அதற்கான குறிப்பிதழ் இத்துடன்
இணைக்கப்பட்டுள்ளது.
அமீரகம்வாழ் அன்பர்கள்
கலந்து கொண்டு இலக்கியப் பணியாற்றிட
விழைகிறோம்.
நன்றி,
வஸ்ஸலாம்,
அன்பு,
சேமுமு.
(பேராசிரியர்-டாக்டர்
சேமுமு. முகமதலி, பொதுச் செயலாளர்,
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்)

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 20 பேர் பலி




ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
கீழக்கரை  அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று 26/12/2010 காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலிகாப்டரும்,அதிநவீனஹோவர்கிராப்ட்படகும் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது.      
 
மீட்பில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
 
அவர்களுடன் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தொண்டர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்று களத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 20பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரியபட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

படுகேவலமான பாப்ரிம‌சூதி தீர்ப்பு. ‍ பேரா.அருணன். VIDEO.

அயோத்தி பாப்ரிம‌சூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது. அயோத்தியில் ராமர் கோயிலே இடிக்கப்படவில்லை. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் என்று ஒன்று இருந்ததே இல்லை. இல்லாத கோயிலை சொல்லி இருந்த மசூதியை இடித்தார்கள். ராமர் பெயரை சொல்லி நாட்டிலே கலவரத்தை தூண்டுவதே குறிக்கோள்.

பாபர் மஸ்ஜித் நீதியை தேடும் பயணங்கள்
உரை: பேரா. அருணன்
தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் டிசம்பர்-06 அன்று நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பேரா. அருணன் ஆற்றிய உரை.

Prof.Arunan Speech Part-01 உரை பகுதி -01


Prof.Arunan Speech Part-02 உரை பகுதி -02


Prof.Arunan Speech Part-03 உரை பகுதி -03

வியாழன், 23 டிசம்பர், 2010

பாஜக ஆட்சியில் ரூ. 1.43 லட்சம் கோடி இழப்பு: கபில் சிபல்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 1999-ம் ஆண்டில் உரிமம் வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட தவறான நடைமுறையால் அரசுக்கு ரூ. 1.43 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
 உரிமம் வழங்குவதற்கு கட்டண நிர்ணய முறையை மாற்றி, வருவாய் பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தியது பாஜக கூட்டணி ஆட்சிதான். மேலும் உரிமக் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டதும் பாஜக கூட்டணி ஆட்சியில்தான். ஏல முறையும் பாஜக கூட்டணி ஆட்சியில் கைவிடப்பட்டது.தொலைத் தொடர்புத் கொள்கையில் பாஜக கூட்டணி அரசு செய்த தவறான மாற்றங்களால் அரசுக்கு ரூ. 1.43 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர். 
அலைக்கற்றை கையிருப்பு மற்றும் ஒதுக்கீட்டு கொள்கை தொடர்பாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கபில் சிபில் இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமை கூறினார்.அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படாது. இப்போது கைவசம் உள்ள அலைக்கற்றையை தேவையான அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நுழைவு கட்டணமாக ரூ. 1,658 கோடி மட்டுமே செலுத்தி உள்ளன. குறைந்த நுழைவுக் கட்டணமே கடந்த சில ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறை இந்த அளவு வளர்ச்சி கண்டதற்கு காரணம் என்றார் அவர்.
2001-ம் தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம். ஆனால் 2007-ல் இது 18.22 சதவீதமாக அதிகரித்தது. 2009-ல் இது 61 சதவீதத்தைத் தொட்டது என்றார் அவர். இதன்படி 72 கோடி பேர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதற்கு குறைந்த அளவிலான நுழைவுக் கட்டணம்தான் காரணம் என்றார் அவர்.
தொலைத் தொடர்பு கொள்கையை அமல்படுத்துவதில் தவறு நடந்துள்ளதா என்று கேட்டபோது, பல நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறு நடந்துள்ளதாகத்தான் தெரிகிறது. தொலைத் தொடர்பு கொள்கையை உருவாக்குவது, கொள்கையை அமல்படுத்துவது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற மூன்று வகைகளில் இந்தப் பிரச்னை கவனிக்கப்பட்டு வருகிறது என்றார் கபில் சிபல்.
 http://dinamani.com

திங்கள், 20 டிசம்பர், 2010

முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்

பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.

ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும்.

முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.

முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.

ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்கின்ற பெண்களை காண்கின்றோம். கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து வருகின்றது.

மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே நிலைதான்.

இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைள வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.

இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.

முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவருகின்றனர். இது பாரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர்.

எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.

எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’

என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.
இதை அளித்தவர்:

Adirai Hafil.J.M.Naina Mohamed @ ரியாத்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஷம்சுல் இஸ்லாம் சங்க பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் மரணம்.

மர்ஹூம் அஹமது தம்பி அவர்களின் மகனும், 'மாப்பிள்ளை' எஸ். ஏ. எம் ஷம்சுதீன் ,எஸ். ஏ. எம்  பாரூக் ஆகியோரது சகோதரரும், J.ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பனாரும், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் அவர்கள் நேற்றிரவு (18-12-2010) சனிக்கிழமை  வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:அதிரை அஹ்மது

தமிழீழம் அமைவதை ஏன் பார்பனர்கள் எதிர்கிறார்கள்?

தமிழீழம் அமைவதை ஏன் பார்பனர்கள் எதிர்கிறார்கள்?

தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை!
தமிழீழம் அமைப்பதற்காக ஆயுத வழியில் போராடினார்கள்.அந்த போராட்டம் சென்ற வருடம் முடிவுக்கு வந்தது. இதனை அனைவரும் அறிவோம்.

இலங்கையில் தனி நாடு கேட்பதால் இலங்கையரசு எதிர்கிறது. இதில் ஒரு நியாயம் உள்ளது என்று சொல்ல முடியும். ஆனால், தமிழீழம் அமைவதை பார்பனர்கள் ஏன் எதிர்கிறார்கள்?(உதாரணம்:சோ,ராம்,சு சுவாமி,ராம‌ கோபாலன்) இது நாள் வரை பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

தமிழீழ நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, தமிழர்கள் திராவிடர்கள் அவர்களை எதிர்ப்பது, அழிப்பது பார்பனர்களின் 'மத கடமை' என்றார். இது சரியான பதிலா?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் பேசிய வகையில் பல தமிழர்களுக்கு தெரியவில்லை.உங்கள் பதில் தமிழீழ போராட்டத்தை அறிய விரும்புவோருக்கு உதவியாக அமையும்!

வியாழன், 16 டிசம்பர், 2010

வாசகர்களுக்கு அறிய வாய்ப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏற்கனவே அதிரை xpress போன்ற இணையதளங்களில் செய்திகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து வரும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
முஸ்லிம் மலர் இணையத்தளத்தில் உங்களது செய்திகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பினால். உங்களது பெயர்,முகவரி,போன் நம்பர் மற்றும் மின் அஞ்சல்  ஆகியவற்றை muslimmalar@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் .
      

புதன், 15 டிசம்பர், 2010

மரண அறிவிப்பு


கடற்கரைத்தெரு மர்ஹூம் சிவத்த மரைக்காயர் அவர்களின் பேத்தியும்,துலுக்கா பள்ளி தெரு (நடுத்தெரு)மர்ஹூம் நெ.கா.மி.நெய்னா முஹம்மது சாஹிப் அவர்களின் மகளும்,மர்ஹூம் முஹம்மது மீரான் மரைக்காயர் அவர்களின் மனைவியும்,அப்துல் ரஜாக்,நெய்னா முஹம்மத்,தையுப்,முஹம்மது இப்ராஹீம் ஆகியோர்களின் தாயுமான ஹவ்வா அம்மாஅவர்கள் அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் உள்ள அவர்களின் வீட்டில் (செக்கடிக்குளம் வடக்கு)இன்று காலை மரணித்துவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா,இன்ஷா அல்லாஹ் இன்று மாலை தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மக்பிரத்துக்காகவும்,ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்கவும் துவா செய்யும் படி வேண்டுகிறோம்.

4:78.“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!.

6:61.அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

மரண சிந்தனை 

சனி, 11 டிசம்பர், 2010

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.

சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பா.ஜனதா ஆட்சியில் அதிகமான முறைகேடு!

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தான் அதிக முறைகேடுகள் நடந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

பாராளுமன்ற மேல் சபை எம்.பி. ராஜீவ்சந்திரசேகர், கடந்த வாரம் ஒரு தகவல் வெளியிட்டார். அதில் அவர், “தொலை தொடர்புத் துறையின் புதிய கொள்கையால் டாடா நிறுவனம் அதிக பலன் பெற்றுள்ளது. டாடா நிறுவனத்துக்கு சாதகமாக ஆ.ராசா நடந்து கொண்டார்” என்று கூறி இருந்தார்.
ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் அளித்து தொழில் அதிபர் ரத்தன் டாடா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரையும், ஆளும் கட்சியையும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் கடிதத்தில் தெரிகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

டாடா தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ஆ.ராசாவோ அல்லது முந்தைய அந்த துறை அமைச்சர்களோ எந்த வகையிலும் எந்த சலுகையையும் காட்டவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான 2008-ம் ஆண்டு கொள்கை, விலையை ஒழுங்குப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்துள்ளது.

தொலைத் தொடர்பு கொள்கை கள் அமல்படுத்தப்படுவது தாமதமாகி வந்தது. அதையும் 2008-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் கொள்கை உடைத்துள்ளது.

உண்மையைச் சொல்லப் போனால், தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கொள்கை களில் பா.ஜ.க. ஆட்சித் தான் அதிக முறைகேடுகள் நடந்துள்ளது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு விவகாரம் குறித்து தற்போது நடந்து வரும் விசாரணையை நான் ஆதரிக்கிறேன். அதே சமயத்தில் சி.பி.ஐ. நடத்தி வரும் வழக்கு விசாரணை வரம்பு 2001-ம் ஆண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று நம்புகிறேன்.

தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு விரைவில் அடங்கி விடும். அதன் பிறகே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

அப்போது உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை இந்திய மக்கள் தீர்மானிக்க முடியும்.

அரசியல் லாபத்துக்காகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் யார்-யார் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பது அப்போது தெரிய வரும்.

இவ்வாறு தொழில் அதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
http://www.maalaimalar.com/2010/12/09135830/spectrum-affair-rathan-tata-c.html

புதன், 8 டிசம்பர், 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு அதிரை போஸ்டில் நேரடி ஒளிபரப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு டிசம்பர் 11 - 2010 சனிக்கிழமை காலை 9மணி முதல் இரவு 9 மணிவரை  அனைத்து நிகழ்ச்சிகளையும் அதிரை போஸ்ட் http://adiraipost.blogspot.com/ இணையதளத்தில் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்புச் செய்கிறது.

மாநாடு சம்மந்தமான கருத்துக்களை இங்கு பின்னூட்டம் மூலம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இன்று 06122010

இன்று 06122010

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு Flash Back

சென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில்[ நியு காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க...


'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந்த பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'

...இந்த போலீஸ்தான் ……..ஸ்காட்லாண்ட் யார்ட்????......




ஞாயமான கேள்வி

எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க ..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா/' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.

நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்'

ஒரு சின்ன கதை: ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால்

ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” எ ன துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர ..

' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---.அரசன்.

'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...'----துறவி

என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்

உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடுதுறவி

அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.

நாளை தெரிந்துகொள்வாய் அரசே...---துறவி

மறுநால் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும் , போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , ல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....

அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'

'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.

வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுதரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.

ZAKIR HUSSAIN


Blog Archive