Breaking News
recent

விடுதலைப்புலிகள் நடத்திய முஸ்லிம் இனப்படுகொலையின் வயது 22


1990  ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே மஸ்ஜிதுகளிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள்  மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள்  ஸுஹதாகள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜம்மா பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அரசும், அதன் ஆதரவுடன் இயங்கும் தமிழ் குழுக்களும் காத்தான்குடி படுகொலையில் புலிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

மீண்டும் மீண்டும் சில கசப்பான, துயரமான சம்பவங்களை நினைவு கூறுவது ஒருபுறம் பழைய ஞாபகத்தை கிளரி  பகை மையை வளர்க்கும்  என்று குறை கூறப்படலாம்.ஆனால் மறுபுறத்தில் அவ்வாறான நினைவு கூறல் கள், அதிலும் குறிப்பாக சமூகம் சார்ந்த வன்முறைகள் இழப்புக் கள் என்பன பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புக்கு  உட்படுத்தியவர்கள் என சம்பந்தப்பட்ட தரப்பி னர்களை அவ்வாறான சம்பவங் கள் எதிர்காலத்தில் இடம் பெறாமல் இருக்க வழிவகைகளை காண்பதற்கும் மீள் இணக்கத்துக்கான சமூக பெறுமதி களையும் சமூக கட்டுமானங்களையும் பலப்படுத்துவதற்கு  அவசியமான ஒரு சந்தர்ப்பமாக இந்நினைவு கூறல் கள் அமைய வேண்டும்.


1990ம் ஆண்டு முஸ்லிம்களின் மீதான திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக் கையினை முன்னெடுக்கும் வகையில் புலிகள்  கிழக்கின் சகல பிரதேசங் களிலும் தமது மனித விரோத மிலேச்சத் தனமான வெறியாட்டங்களை   கட்ட விழ்த்து விட்ட ஆண்டாக  அமைந்தாலும் 1990ம் ஆண்டு ஆகஸ்து மாதம் அவ்வாறான முஸ்லிம் இன அழிப்பு நடவடிக் கைகளின் உச்சமாக இருந்தது.
காத்தான்குடி மீரானியா, ஹுசைனியா  பள்ளிவாசல் படு கொலைகள் (03/08/1990) மேலும் ஏறாவூர் மிச் நகர், சதாம் ஹுஸைன் கிராமம், மீரா கேணீ, ஐயங்கேணீ தழுவிய எல்லைப் புற படுகொலைகள் (11/08/1990)  என்று நூற்றுக் கணக்கான முஸ் லிம் ஆண்கள்  பெண்கள் குழந் தைகள்  கொல்லப்பட்டனர்.


காத்தான்குடியில் பள்ளிவா சல்களில் பெற்றோர்களுடனும்  சகோதரர்களுட னும் இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆறு வயதுக் குழந்தை ஒன்று உட்பட 12வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12 பேரும் 13  தொடக்கம் 16 வயதி குற்பட்ட சிறார்கள்10 பேரும் அடங்குவர், அவ்வாறே  எறாவூர் படுகொலை களில் தூக்கத்திலிருந்த குழந்தைகள் மட்டு மல்ல வயிற்றிலிருந்த சிசுவும் சிதைக்கப்பட்டது. ஏறாவூரில் கொல்லப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள்  தொகை சுமார் 31 ஆகும். இக்குழந்தை கொலைகள் புலிகளுக்கு வாடிக்கையா னவை யாகும் .


ஏனைய தேசிய இனங்களை ஒடுக்குவதும், இனப்படுகொலைக்கு உட்படுத்துவதும், கோரமாகக் கொலைசெய்வதும் சித்திரவதை செய்வதும் தேசியம் என்றும் சுதந்திரம் என்றும் தலைப்பிட்டால் அது அவமானகரமாது. ஈழத்தில் மட்டுமல்ல உலகத்தின் எந்தப் பகுதியிலும் இதையெல்லாம் தேசியம் என்று மக்களை கோரமான இருளின் விழிம்பிற்குள் அழைத்துச் செல்லும் யாரும் இனிமேல் உருவாகக் கூடாது. கடந்த காலப் போராட்டங்களில் இவற்றை எல்லாம் சுயவிமர்சனம் செய்து கொள்ளாமல், எமது மனிதாபிமானமே போராட்டத்தின் அடிப்படை என்பதை முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் ஒவ்வோரு ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் கூறாமல் ஒரு அங்குலம் கூட முன் நோக்கி நகர முடியாது. 

கொல்லப்பட்ட முஸ்லீம்களின் வலியை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் போது மட்டும்தான் எமது இழப்புக்களுக்குப் பெறுமானமுண்டு, முஸ்லீம் மக்கள் இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் ஒன்று என்பதை உணர்ந்துகொள்ளாத யாரும் ஏகாதிபத்தியத்திற்கு (விதேசியத்திற்கு) எதிராக தேசியம் பேச முடியாது. 



சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தி தனது சிங்கள் பௌத்த மேலாதிக்கத்கை நிறுவிக் கொள்வதனாலேயே இலங்கை அரச பாசிசம் தனது பலத்தை நிறுவிக் கொள்கிறது.முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களது பள்ளி வாசல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரச ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்படுகின்றது.நிலங்கள் சூறையாடப்படுகின்றன.

 இந்தியப் பெரு முதலாளிகளுக்கும், அமெரிக்க பல்தேசிய நிறுவனங்களுக்கும், சீன முதலீட்டாளர்களுக்கும், பிரித்தானிய பண முதலைகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கப்படுவதற்காக திட்டமிட்ட நிலப்பறிப்பு நடைபெறுகிறது. வன்னியில் சாரிசாரியாகப் படுகொலை செய்த அதே நாடுகள் இன்று ராஜபக்சவின் பின்னால் ஆக்கிரமிப்பு வெறியோடு அலைகின்றன. சொந்த நாட்டை விற்றுப் பிழைப்பு நடத்தும் ராஜப்கச குடும்ப சர்வாதிகாரமோ ஆட்சி மாற்றமோ இலங்கையில் தேசிய இனப்பிரச்சனைக்கு குறைந்த பட்சத் தீர்வைக்கு கூட முன்வைக்கப் போவதில்லை. 

சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர இன்றைய சூழல் அவர்கள்ளுக்கு வேறு அரசியல் வழிமுறைகளைக் அறிவிக்கவில்லை. 

முஸ்லீம் மக்கள் மீதான அனைத்து வன்முறைகளைக் கண்டிப்பதும், அவர்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரிப்பதும் தமிழ்ப் பேசும் மக்களதும், ஜனநாயக முற்போக்கு சக்திகளதும் இன்றைய வரலாறுக் கடமையாகும்.


கிழக்கு முஸ்லிம் இனசுத்திகரிப்பு
2006
ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள்  படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள்  படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை
Unknown

Unknown

3 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    தமிழ் முஸ்லிகளை கொன்று தனி ஈழம் அமைக்க நினைத்தவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர் அல்லாஹ் போதுமானவன்

    பதிலளிநீக்கு
  2. இழப்புக்குள்ளான இலங்கை முஸ்லீம்கள் மேலும் விபரங்களுக்கு உருக்கமான காணொளி இங்கே : >>
    "http://adirainirubar.blogspot.com/2011/09/blog-post_1596.html"

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.