Breaking News
recent

முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி



டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் உரையாற்றுகிறார்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மண்டலத்தின் சார்பில் முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சிக்கு 8.8.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமரசத்தின் துணை ஆசிரியர் சுல்தான் அவர்கள் கிராஅத் ஓத நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நான்காண்டு செயல்திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக ஊடகத்துறை செயலாளர் வரவேற்புரையாற்றினார். நீண்ட முயற்சிக்கு பிறகு இந்த நிகழ்ச்சி இறைவனின் கிருபையால் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி கொள்ள வேண்டும், மேலும் இது போன்று தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்ற இலக்கோடு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவரையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சார்பில் வரவேற்று பேசினார்.
 
 அதன் பிறகு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்மாநில தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார்.  இன்றைய காலத்தில் ஊடகங்கள் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதாக மாற்றுகின்றனர். பெரிய விஷயத்தை மூடி மறைக்கின்றனர். இதில் ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பிரச்னைகளிலிருந்து வெளிவர நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருக்க இறைவனிடம் உதவியை நாடுகின்றேன் என்று தனது தலைமையுரையில் பேசினார்.

கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் பத்திரிகையாளர்கள்
தலைமையுரைக்கு பிறகு பத்திரிகையாளர்கள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். அதன்பிறகு தங்களது கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
நோன்பு துறப்பிற்கு பிறகு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இன்றைய சூழலில் முஸ்லிம் பத்திரிகையாளர்களின் பொறுப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
 டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் தனது உரையில் முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கு நிறைய பொறுப்புக்கள் இருக்கின்றன. பொதுவான பிரச்னைகள், மக்கள் சார்ந்த பிரச்னைகளில் நமது கருத்தை பதிவு செய்ய வேண்டும்.  ஒன்று சேர்ந்து அழகான முறையில் செய்தியை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். நமக்கென்று ஒரு ஊடகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி கேரளாவில் நடைபெற்று வரும் மாத்யமம் பத்திரிகையின் வளர்ச்சியை எடுத்து வைத்தார். அது போன்று நடுநிலையான பத்திரிகையை ஆரம்பிப்பதை இலக்காக வைக்க வேண்டும் என்றார்.

பொதுச்செயலாளர் உரையாற்றுகிறார்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில பொதுச்செயலாளர் தனது நிறைவுரையில் பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் அதிகம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.  முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அன்றைய காலத்தில் செய்தி சமர்பிப்பதில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தார்கள். அது போன்று நாமும் சீராக, ஒழுக்கவிழுமங்களை பேணி ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும் அதற்கு இறைவன் துணை புரிவானாக என்று தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக மாநில ஊடகத்துறை செயலாளர் நன்றியுரையாற்றினார். அதில் தொடர்ந்து இது போன்ற அமர்வுகள் நடத்தப்படும். பங்கேற்பாளர்களிடமிருந்து முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை அதிகமாக வந்துள்ளது. இறைஉதவியோடு அதற்கான தொடர் முயற்சி செய்யப்படும் என்றார். இந்நிகழ்வினை முஹம்மத் அமீன் தொகுத்து வழங்கினார். 75 பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.