Breaking News
recent

அசைவ உணவுக்கு மாறும் தமிழக இட்லி-சாம்பார் பிரியர்கள்

தமிழ்நாட்டில் மல்லிகைப் பூ போன்ற இட்லியும், சூடான சாம்பாரும் மற்றும் பல்வேறு வகையான சைவ காய்கறி உணவுகளுமே கோலோச்சி வந்தன. இந்த அளவுக்கு சைவ உணவு சாப்பிடுபவர்கள் தமிழகத்தில் அதிகம் பேர் இருந்தனர். இதனால் சைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் இருந்தது.

ஆனால் காலத்தின் மாற்றத்தால் தமிழ்நாடு அசைவ உணவு பிரியர்களின் மாநிலமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இங்குள்ளவர்களின் உணவுப்பழக்க வழக்கங்களில் பெரும்மனமாற்றம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் அசைவ உணவுப் பிரியர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில், தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

அதாவது பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. இந்த சர்வே, புரோட்டின் குறித்த பகுப்பாய்வையும் செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கறி, மீன், முட்டை ஆகியவற்றின் மூலம்தான் 10 சதவிகித புரோட்டின் சத்து கிடைக்கிறது என்று கூறியுள்ளது.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநில மக்களுக்கு கறி மூலம் 1 சதவீதம் அளவுக்கு மட்டுமே புரோட்டின் சத்து கிடைக்கிறது. பயிறு, பருப்பு வகைகள் மற்றும் பால் பொருள்கள் வாயிலாகவே அதிகளவில் புரோட்டின் சத்தை பெறுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அசைவ உணவுப் பிரியர்கள் அதிகரிக்க, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெருகியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்று பவர்கள் நிறுவனம் ஒப்புக் கொண்ட பணிகளை முடித்துக்கொடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவர்கள் அங்குள்ள உணவு பழக்கத்துக்கு மாறி விடுகின்றனர். இங்கு திரும்பி வந்த பிறகும் அதில் கிடைத்த ருசியை விடமுடியாமல், அசைவ உணவை தொடர்கின்றனர்.

அதேபோல கிராமங்களில் இருந்து நகங்களுக்கு வருபவர்கள் ஆங்காங்கே முளைத்திருக்கும் அசைவ உணவு கடைகளில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிறகு அதுவே பழக்கமாகி விடுகிறது.

இப்படித்தான் நிறைய பேர் இட்லி- சாம்பாரை கைவிட்டு விட்டு, துரித உணவுகளிலும், அசைவ உணவுகளின் மீதும் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் உள்ள அசைவ ஓட்டல்களில் சிக்கன், ஆட்டுக்கறி விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

காய்கறிகளின் விலை உயர்வும் சைவ உணவு வகைகளின் விலையை உயரச் செய்துள்ளது. சைவ உணவை ஒப்பிடும்போது, அசைவ உணவின் விலை சிறிய ஓட்டல்களில் சற்று குறைவாக இருப்பதால், அசைவ உணவை நாடிச் செல்பவர்களும் உண்டு.
நன்றி:மாலைமலர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.