Breaking News
recent

ஹைதர் அலி ஆலிம் விவகாரம்: ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம்!

அஸ்ஸலாமுஅலைக்கும்.

நமதூர் அதிராம்பட்டினம், மார்க்க ரீதியிலும் இந்தியச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட  ஊராக இருந்து வருகிறது. நமதூரில் நடக்கும் நிகழ்வுகளில் தேவையானபோது தலையிட்டு, மார்க்க ரீதியிலும்  நம் நாட்டுச் சட்ட ரீதியிலும் தீர்வுகளை வழங்க நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்சுல் இஸ்லாம்  சங்கம் கடந்த 92 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
உள்ளூர் முஸ்லிம் குடும்பங்களிடையே ஏற்படும்  சிவில் விவகாரங்களில், குறிப்பாக திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றில் மார்க்க அறிஞர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்றுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நமதூருக்கு மார்க்கச் சொற்பொழிவுக்காக சித்தார்கோட்டையிலிருந்து  அழைத்துவரப்பட்ட கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் நமது உள்ளூர் நடவடிக்கைகளுக்கு  ஊறு விளைக்கும்படியாக இயக்க சார்பு இளைஞர்களைத் தூண்டிவிட்டதால் எழுந்துள்ள அமைதியின்மைக்குத்  தீர்வு காண வேண்டியும், அவர் வசிக்கும் பகுதி சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவின் எல்லைக்குள் இருக்கும்  காரணத்தாலும், கடந்த தேதி: 28 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு நேரில் வந்து விளக்கம் தரும்படிக் கோரப்பட்டது.

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் தக்வா பள்ளி செயலாளருக்கும் இடையே வழக்கு நடந்து வருவதாலும், பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்பதாலும், தன்னால் கலந்து கொள்ள முடியாதென்றும்  தெரிவித்த நிலையில், 29அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு சம்சுல் இஸ்லாம் சங்க  நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களது வீட்டிலேயே சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடு தேடி வந்தவர்களை முகமன்கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி, சுமார் 10-20  நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வைத்துவிட்டு, "சித்தீக் பள்ளியில் போய் இருங்கள், பேசலாம்" என்று  தெரிவித்தார்.

அவ்வாறே, சங்க நிர்வாகிகளும் சித்தீக் பள்ளிக்குச் சென்றபோது, இயக்க சார்பு இளைஞர்களையும் உடன் வைத்துக்கொண்டு "இப்போது பேசலாம்" என்று சொன்னார். அதற்கு சங்க நிர்வாகிகள், இயக்க சார்பு இளைஞர்களை வரவழைத்துக்கொண்டு  சங்க நிர்வாகிகளுடன் பேச விரும்புவது சரியல்ல. வெளியூரிலிருந்து எத்தனையோ ஆலிம்கள்  கற்கவும்,  கற்றுகொடுக்கவும் வந்துள்ளனர். ஆனால், உங்களைப் போன்று இயக்க சார்பு இளைஞர்களுடன் இணைந்து  முஹல்லா சங்கத்தையும் அதன் நிர்வாகிகளான உள்ளூர் பிரமுகர்களையும் அவமதித்ததில்லைஎன்று  சொல்லி, அவருடன் பேசாமல் திரும்பி விட்டனர்.

அதிரையில் பல்வேறு அரசியல் கட்சி சார்பு இயக்கங்களும்,சமுதாய இயக்கங்களும் இயங்கி வந்தாலும், உள்ளூர்  அமைதிக்கு ஊறு விளைக்கும் அசாதாரண நடவடிக்கைகளின்போதும் சட்ட ரீதியான வழிமுறைகளில் தலையிட்டுத்  தீர்வு காணும் அதிரை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற முஹல்லா சங்கங்களில் சம்சுல் இஸ்லாம்  சங்கமும் ஒன்று. அவ்வகையில், ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மற்றும் தக்வா பள்ளி கமிட்டியிடையே ஏற்பட்டுள்ள  வழக்கு காரணமாக சம்சுல் இஸ்லாம் முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைதியின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இப்பகுதிக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மன்றத்தில் நடந்துவந்த  ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

உள்ளூர் நடவடிக்கைகளில் பொறுப்புள்ள முஹல்லா சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையே இது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் போன்ற தகுதியுடைய உள்ளூர் மார்க்க அறிஞர்களை ஆலோசகர்களாகக் கொண்டுள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி நபர்கள்  தலையிடுவது, முஹல்லாவாசிகளை அவமதிக்கும் செயலாகும். முஹல்லாவுடைய கட்டுப்பாடு மற்றும்  அமைதிக்கு ஊறு விளைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் சம்சுல் இஸ்லாம் சங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தேவையெனில், மார்க்கம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்  என்பதையும் முஹல்லாவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
***********

கீழ்கண்ட விளக்கங்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கும், விளக்கம் வேண்டுபவர்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்:

1)
ஹைதர் அலி ஆலிம் சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில் தலையிட்டதற்காகவா அவர்மீது நடவடிக்கை?

இல்லை. மேலுள்ள விளக்கத்தில் 2,3 & 4 ஆம் பத்திகளில் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், முஹல்லா  சங்க நிர்வாகிகளை அவமதித்து, உள்ளூர் இளைஞர்களைத் தூண்டியதற்காகவுமே ஆயிஷா மகளிர் மன்றத்தில்  அவரது பயான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்கொண்டு தவறான பிரச்சாரங்களைப் பரப்பாமலிருக்க பெரிய  ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

2)
ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு வெளியேறும்படி சங்கம் நிர்ப்பந்தித்ததா?

இல்லை. பிரச்சினை பெரிதாகாமலிருக்க பொதுவில்  பயான் செய்வதற்கு மட்டுமே தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இது பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும், பிரச்சினை  மேலும் வலுக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட நடவடிக்கையே அன்றி, தனி நபர்  மீதான வெளியேற்றும் நடவடிக்கை அல்ல.

3)
சம்சுல் இஸ்லாம் சங்கம் ஹைதர் அலி ஆலிமை அவமதித்ததா?

இல்லை. மேலே 2 & 3 ஆம் பத்திகளில் சொன்னபடி, அவரது விளக்கம் பெறும் நோக்கத்தில் கண்ணியமாக அழைக்கப்பட்டதை அவர்  ஒவ்வாத காரணங்களைச் சொல்லி மறுத்ததால், பொதுவில் அவருக்கு சங்கடம் ஏற்படாமலிருக்க, அவரது இல்லத்திற்குச்  சென்ற உள்ளூர் முக்கியஸ்தர்களான சங்க நிர்வாகிகளைச் சந்திக்காமல் அவர்தான் அவமதித்தார்.மேலும்,  ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்து, அதன் முஹல்லாவுக்குட்பட்ட சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி  மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிகளில் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து கண்ணியப்படுத்தியதும் சம்சுல் இஸ்லாம்  சங்கத்திற்கு உட்பட்டவர்களே.

4)
மார்க்க அறிஞரின் பயானைத் தடுப்பது சரியா?

சில அசாதாரசந்தர்ப்பங்களில் மஷ்வரா அடிப்படையில் எடுக்கப்படும் அவசர நடவடிக்கையின்படி இது சரியே.

5)
ஹைதர் அலி ஆலிமின் பயான்களால் நமதூர் மக்களிடம் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே?

ஓரளவு உண்மையே. எனினும், அல்லாஹ் - ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்துச் சொல்லும் பல அறிஞர்களும் பேச்சாளர்களும் அதிரையில் உளர். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இருந்தாலும் அத்தகைய  விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்ஷா அல்லாஹ் சம்சுல் இஸ்லாம்  சங்கம் இவ்விசயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
6) சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்திற்காக ஹைதர் அலி ஆலிமை பலி கடாவாக்குவது நியாயமா?
ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் எத்தகைய விரோதமும் இல்லை. சித்திக் பள்ளி சொத்து விவகாரத்தை சம்சுல் இஸ்லாம் சங்கத்திடம் ஒப்படைத்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி, உலமாக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோம்.
7) ஹைதர் அலி ஆலிம் அவர்கள்மீது வழக்குத் தொடுத்தவர் மீது சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையிலிருக்கும்போது முஹல்லா சங்கம் சமாதான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட முடியும். அவ்வகையில்தான் இரு தரப்பையும் சுமூகமாகப் பேச வைத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முதலில் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டதும், வர மறுத்தபோது நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதும் நடந்தது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் நிர்வாகிகளை அவமதிக்காமல் ஒத்துழைத்திருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி நியாயமான தீர்வு எடுக்கப்பட்டிருக்கும்.
மேலும், சம்பத்தப்பட்ட நபரிடமும் பேசியுள்ளோம், கேசைத் திரும்பப் பெறும்படி யும் கூறியுள்ளோம், ஆனால் இது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
      ******************
அன்பிற்குரியவர்களே! நமதூர் அதிராம்பட்டினம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பிழைப்பு தேடிவந்த பலரை  ஆதரித்தும், கண்ணியப்படுத்தியுமே வந்துள்ளது. கண்ணியத்துக்குரிய ஆலிம்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும்  வணிகர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஆதரித்து வருகிறோம். எனினும், அவர்கள் எல்லோரும்  முஹல்லா ஜமாத்துகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சில வருடங்களாக நமதூர் உலமாக்களின் எத்தகைய ஆலோசனையையும்  ஏற்காமல், தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தில் இன்னொரு முஹல்லா  இளைஞர்களை அழைத்துவந்து அமைதியின்மையை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். அப்பகுதியில் சம்சுல்  இஸ்லாம் சங்கம் செயல்பட்டுவரும் நிலையில் உள்ளூர் நடவடிக்கையில் ஹைதர் அலி ஆலிம் செயல்பட்டது  வரம்புமீறிய நடவடிக்கை என்பதோடு முஹல்லாவாசிகளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத தன்னிச்சையான  போக்கு என்பதையும் கவனத்தில் கொண்டு, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் நன்மை நாடிய நடவடிக்கைகளுக்கு  ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ வழங்குவதே நன்மை பயக்கும்.

அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில்  சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும்  சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம். இவ்விசயம் தொடர்பாக மேலதிக விளக்கம் வேண்டுவோர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு,
சம்சுல் இஸ்லாம் சங்கம்
நிர்வாகம் – அதிரை
Unknown

Unknown

17 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை.

    ஹைதர் அலி அவர்களின் பயான் மீதும் அவரின் கருத்துக்ள் மீதும் ஏரிச்சலுற்று இருந்த சங்கம், குரிப்பிட்ட 29 ஆம் தேதி அன்று நடந்த நிகழ்வை காரனமாக கூறுவது தெளிவான முரண்பாடே.

    மேலும் ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் விளக்கம் கேட்டது சங்கத்தின் அதிகாரபூர்வ முடிவல்ல என்பதை அறிய முடிகிறது.

    ஏனினில் சங்கத்தின் செயலாளரும் பொருளாலரும் இது விசயத்தில் புறக்கனிக்கப்பட்டு இருப்பதும்,சங்கத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி குறிப்பேட்டில் இதையெல்லாம் பதிவு செய்யாமல் இருப்பதும் இதற்கான சான்றுகள்.

    சங்கம் தரப்பில் கூறப்படும் காரணங்களான
    1)அவர் சங்க நிர்வாகிகளை 10-20 நிமிடம் காத்திருக்க வைத்தார்
    2)அவர் நிர்வாகிகளை தன்னுடைய வீட்டிற்குள் அனுமதிக்கவிலை. சித்தீக் பள்ளியில் சென்று அமருமாறு கேட்டுக்கொண்டார்
    3) அவர் இயக்கவாதிகளுடன் சேர்ந்து வந்து சந்தித்தார்
    என்ற இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் வேடிகையானவையே.

    இவை மட்டுமே ஒருவர் மீது தடை விதிப்பதற்கு போதுமான காரணங்களல்ல. மேலும் அவ்வாறு சந்திக்க வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் சங்க நிர்வாகிகள், முகமன் கூட கூறாமல் “வெளியூர்காரர்” என்று பேச்சை ஆரம்பித்தது இங்கு இருடடிப்பு செய்யப்பட்டுள்ளது.

    சத்தியதை எடுத்துரைத்து வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மீது ஏற்கனவே ஊரில் உள்ள கணிசமான பேருக்கு இருந்த நீண்ட கால வெறுப்புணர்வையும், காழ்ப்புணர்வையும் அனைவரும் அறிவர். அந்த வெறுப்புணர்வுக்கு சங்க நிர்வாகிகளில் சிலர் பலியாகியிருப்பது துரதிருஷ்டமே.

    பதிலளிநீக்கு
  2. சித்திக் பள்ளி விஷயம் உண்மையா பொய்யா ? என்பதை சங்கம் தெளிவு படுத்தவும் ஹைதர் அலி ஆலிம் சொன்னது உண்மை என்றல் சங்கம் தெளிவு படுத்தவும்

    பதிலளிநீக்கு
  3. //சங்கம் தரப்பில் கூறப்படும் காரணங்களான
    1)அவர் சங்க நிர்வாகிகளை 10-20 நிமிடம் காத்திருக்க வைத்தார்
    2)அவர் நிர்வாகிகளை தன்னுடைய வீட்டிற்குள் அனுமதிக்கவிலை. சித்தீக் பள்ளியில் சென்று அமருமாறு கேட்டுக்கொண்டார்
    3) அவர் இயக்கவாதிகளுடன் சேர்ந்து வந்து சந்தித்தார்
    என்ற இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் வேடிகையானவையே. //

    இவை வேடிக்கையல்ல! வேதனைக்குரியது. பணம் கொடுத்து பயான் செய்ய அன்று நியமிக்கப் பட்ட ஹைதர் அலி ஆலிம் இயக்க வாதிகளுடன் சேர்ந்து இன்று அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார். இப்படியே விட்டால் எதிர்காலத்தில் பயான் என்ற பெயரில் அரசியல் பிரச்சாரம் செய்து அதிக ஆதாயம் தேட ஆரம்பித்து விடுவார். இவர் பயானுக்கு தடை விதித்தது சரியான முடிவாகும்.

    பதிலளிநீக்கு
  4. இருதரப்பு விபரம் தெரியாமல் இதற்கு முன் பதிந்தது சரியன்று..
    அதுமட்டுமின்றி இன்று சம்சுல் இசுலாம் வெளியிட்டிருபதுபோல் அன்று ஹைதர் அலி ஹஜரத் வெளியிடவில்லை..யாரோ ஒருவர் வெளியிட்டதை ஆராயாமல் வெளியிட்டது ஊடகத்துக்கும், ஊருக்கும் நல்லதில்லை என்பது என் நிலை.

    இது வெளிநாட்டுவாழ் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதுதான் மிச்சம்.. சங்கத்தை அவமதித்ததாக அவர்கள் கூறுவது உண்மையெனின் இவர்கள் எடுத்த முடிவு சரியானதுதான், சித்திக் பள்ளிக்காக மட்டுமே இந்த முடிவெனில் யோசிக்கவேண்டிய விஷயம்..

    மொத்தத்தில் ஆலிம் அவர்கள் சித்திக் பள்ளியிலிருந்து பொறுப்பை விட்டு விலகி "இறைவனின் சொத்தை அபகரித்திருந்தால் அல்லாஹ் தண்டனை கொடுத்துக்கொல்வான்" என்று இசுலாமிய முறையில் விட்டுவிடுவது சிறந்தது.. அதை விடுத்து இயக்கவாதிகளை வைத்து பஞ்சாயத்து பண்ணுவது ஒரு மார்க்கம் போதிக்கும் ஆலிமிற்கு சிறந்ததாக படவில்லை என்றே நினைகின்றேன்..வறட்டு பிடிவாதம்தான் இயக்கவாதிகளின் அச்சாணி..அதையே நம் அருமை ஹைதர் அலி ஹஜரத் செயல்படுத்தாமல் இருந்தால் சரி. சொத்து அபகரிப்பை உண்மையாக, பகிரங்கமாக சொல்லியிருப்பின் அல்லாஹ் அவர்களுக்கு அதற்கான கூலியை மறுமையில் அழகிய முறையில் கொடுப்பான். இன்ஷா அல்லாஹ்..அதன் அடிப்படையில் தற்சமயம் ஒதுங்கி இருப்பதே சிறந்தது..

    பதிலளிநீக்கு

  5. நான் ஒரு சாமான்யன் ஆலிமல்ல சர்ச்சையை விரும்பாதவன், இருந்தாலும் ஹைதர் அலி ஆலிம்பற்றிய எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இந்த நேரத்தில் தெரிவிப்பது சிறந்தது என கருதுகிறேன். நடுநிலையாளர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக பதிவு செய்கிறேன். ஹைதர் அலி ஆலிம் சத்யம் செய்து மறுத்தால் நான் நிச்சயம் என்னுடைய பெயர் முகவரியுடன் வாபஸ் பெற்றுகொள்வேன். அவருடைய ஆதரவாளர்களின் கண்மூடித்தனமான நடவடிக்கைக்கு முன்னெச்சரிக்கையாக என் பெயரை பதிவு செய்யவில்லை.

    ஹைதர் அலி ஆலிம் ஒரு நல்ல நாவன்மைமிக்கவர், ஆனால் மாறுபட்ட கருத்துகளை கூறுபவராக இருக்கிறார். 3 ஆதாரங்களை இதற்கு சாட்சியாக்குகிறேன். 1. அல் அமீன் பள்ளியில் தொழுவது கூடாது என்று ஒரு கட்டத்தில் சொல்லிவிட்டு அந்த பள்ளியில் ஒருமுறை தொழுகை நடத்தி உள்ளார். (அல் அமீன் பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான அன்சாரி என்னிடம் ஒரு முறை நேரில் சொன்னார், போனிலும் உறுதி செய்து கொண்டேன்) 2. சித்திக் பள்ளி விவகாரத்தை LMS கமால் பாட்சா அவர்களிடம் சென்று பேசியபொழுது, "இது முன்னோர்கள் சம்பந்தப்பட்டது , ஊர் முக்கியஸ்தர்கள் வக்கீல் ரஜாக் காக்கா, MS தாஜுதீன் காக்கா, போன்றவர்கள் கோடை விடுமுறையில் அதிரைக்கு இந்த வாரம் வருவார்கள், அவர்களை கலந்துகொண்டு முடிவு செய்யலாம் கொஞ்சம் பொறுங்கள், எது ஹக் என்று அறிவிக்கப்படுமோ அதன்படி செய்யலாம்" என்று சொன்னதற்கு "சரி " என்று சொல்லிவிட்டு , இரகசியமாக வேறு முஹல்லா சகோதரர்களை வைத்து சுவர் எழுப்பியது. (LMS கமால் பாட்சா அவர்கள் என்னிடம் நேரில் நிகழ்வு நடந்த அன்றே சொன்னது) 3. ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்யும் விஷயத்தில் ஹராம் என்று ஒரு கட்டத்திலும் கூடும் என்று ஒரு சில நாட்கள் இடைவெளியில் சொன்னதும் ஆகும். மேற்சொன்ன 3 கருத்துக்கும் அவர் சத்யம் செய்து மறுத்தால் நான் என் கருத்தை திரும்பபெற தயார்.

    ஹைதர் அலி ஆலிம் அவர்களை விட - அவர்களிடம் படித்த மாணவர்களே - (குருவை மிஞ்சிய சீடர் என்பதுபோல்) முப்திகளாக ( பத்வா வழங்க சான்றிதழ் பெற்ற தகுதிபெற்றவர்கள்) நமதூரில் இருக்கும்பொழுது இன்னும் பல முப்திகளும், உலமாக்களும் நமதூரில் எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் அல்லாஹ்வின் பொருத்தம் ஒன்றையே நாடி மார்க்க சேவை செய்து கொண்டிருக்கும்பொழுது, இப்படி மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதும் கூட்டணி சேர்ப்பதும் நல்லதல்ல . இப்பொழுது போர்க்கொடி தூக்கி இருப்பவர்கள் பிரச்சினையை முதலில் நமதூர் முப்திகளிடம் கொண்டு சென்றிக்க வேண்டும்.

    இதல்லாமல் இதுவரை நமதூருக்கு வந்த உலமாக்களும் சரி, ஆளிம்பெருமக்களும் சரி யாரும் செய்யாத அளவுக்கு கூட்டணி சேர்த்துக்கொண்டு செயல்படுவதும் ஊரின் இறையாண்மைக்கு நல்லதல்ல. தக்வாவும் அல்லாஹ்வின் மீது தவக்களும் இருக்குமேயானால் எந்த கொம்பனுக்கும் பயந்து இப்படி கூட்டத்தை சேர்த்துக்கொண்டு கண்ணியமாக பேச வந்தவர்களை அவமதிதிருக்க வேண்ட்யதில்லை, இவ்வளவு பெரிய சர்ச்சையே வந்திருக்காது . இதனால் ஒரு இளைஞர் யார் ஊரில் பரம்பரையாக உள்ளவர் என்று அறியாமல் உளற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

    ஒன்று நிச்சயம் ஹைதர் அலி ஆலிம் ஹனபி மதுஹப் சட்டத்தை படித்தவர்கள் நமதூர் உலமாக்கள் ஷாபி மதுஹப் சட்டத்தை படித்தவர்கள், நமதூரும் முழுக்க முழுக்க ஷாபி மதுஹபை பின்பற்றக்கூடிய ஊர். கருத்துக்கள் முரண்படும் குழப்பம் ஏற்படத்தான் செய்யும். ஷரீயத் சட்ட விஷயங்களில் ஹனபி ஆலிம்களில் பயானை தவிர்ந்து கொள்வது நல்லது.

    பதிலளிநீக்கு
  6. இருதரப்பு விபரம் தெரியாமல் இதற்கு முன் பதிந்தது சரியன்று..
    அதுமட்டுமின்றி இன்று சம்சுல் இசுலாம் வெளியிட்டிருபதுபோல் அன்று ஹைதர் அலி ஹஜரத் வெளியிடவில்லை..யாரோ ஒருவர் வெளியிட்டதை ஆராயாமல் வெளியிட்டது ஊடகத்துக்கும், ஊருக்கும் நல்லதில்லை என்பது என் நிலை.

    இது வெளிநாட்டுவாழ் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதுதான் மிச்சம்.. சங்கத்தை அவமதித்ததாக அவர்கள் கூறுவது உண்மையெனின் இவர்கள் எடுத்த முடிவு சரியானதுதான், சித்திக் பள்ளிக்காக மட்டுமே இந்த முடிவெனில் யோசிக்கவேண்டிய விஷயம்..

    மொத்தத்தில் ஆலிம் அவர்கள் சித்திக் பள்ளியிலிருந்து பொறுப்பை விட்டு விலகி "இறைவனின் சொத்தை அபகரித்திருந்தால் அல்லாஹ் தண்டனை கொடுத்துக்கொல்வான்" என்று இசுலாமிய முறையில் விட்டுவிடுவது சிறந்தது.. அதை விடுத்து இயக்கவாதிகளை வைத்து பஞ்சாயத்து பண்ணுவது ஒரு மார்க்கம் போதிக்கும் ஆலிமிற்கு சிறந்ததாக படவில்லை என்றே நினைகின்றேன்..வறட்டு பிடிவாதம்தான் இயக்கவாதிகளின் அச்சாணி..அதையே நம் அருமை ஹைதர் அலி ஹஜரத் செயல்படுத்தாமல் இருந்தால் சரி. சொத்து அபகரிப்பை உண்மையாக, பகிரங்கமாக சொல்லியிருப்பின் அல்லாஹ் அவர்களுக்கு அதற்கான கூலியை மறுமையில் அழகிய முறையில் கொடுப்பான். இன்ஷா அல்லாஹ்..அதன் அடிப்படையில் தற்சமயம் ஒதுங்கி இருப்பதே சிறந்தது..

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா சொன்னது

    /அவருடைய ஆதரவாளர்களின் கண்மூடித்தனமான நடவடிக்கைக்கு முன்னெச்சரிக்கையாக என் பெயரை பதிவு செய்யவில்லை/

    உங்களுக்கு மட்டும் முன் எச்சரிக்கை வேண்டும் ஹைதர் அலி ஆலிம் போன்றோர் முன் எச்சரிக்கை யாக நடந்துகொண்டால் "தக்வாவும் அல்லாஹ்வின் மீது தவக்களும் இருக்குமேயானால் எந்த கொம்பனுக்கும் பயந்து இப்படி கூட்டத்தை சேர்த்துக்கொண்டு கண்ணியமாக பேச வந்தவர்களை அவமதிதிருக்க வேண்ட்யதில்லை" அப்போ உங்களுக்கு நீங்கள் மேற்சொன்ன எதுவும் கிடையாதா ?

    //இரகசியமாக வேறு முஹல்லா சகோதரர்களை வைத்து சுவர் எழுப்பியது.//

    சுவர் எழுப்பியது பள்ளிவாசலுக்கு சொந்தமாக இருந்த கொஞ்சம் இடத்தையும் பாதுகாக்கவே தவிர பறித்துக்கொள்ள அல்ல இந்த விசயத்தில் அல்லாஹுவிற்கு பயந்தவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமே தவிர எதிர்ப்பு காட்ட கூடாது .

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பெயரில்லா... அல்லாஹ் பர்த்து கொண்டு இருக்கிரான் இப்பாடி ஓரு இரட்டை நிலை பாடா ?????

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும்

    இயக்க சார்பு இளைஞர்களை தூண்டி விட்டு உள்ளூர் நடவடிக்கைகளுக்கு என்ன ஊறு விளைவித்தார் என்பதையும் அதனால் என்ன அமைதியின்மை ஏற்ப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டிய கடமை சங்கத்திற்க்கு உள்ளது.

    வழக்கு நடந்து வருவதால் பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்று ஹைதர் அலி ஆலிம் கூறிய நிலையில் அவரை வீட்டில் சந்திக்கச் சென்ற அவசரமென்ன? அவசியமென்ன? (அதுவும் சங்க செயலாளர் மற்றும் பொருளாலருக்குத் தெரியாமல்).

    பிரச்சனை பெரிதாகாமல் இருக்க பயான் செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் மேலும் பிரச்சனை வலுக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிறீர்கள், நமதூரில் என்ன பிரச்சனை நடந்தது, பொது அமைதி எப்பொழுது கெட்டது என்பதை நமதூர் மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியமும் கடமையும் சங்கத்திற்கு உள்ளது.

    அப்படி என்ன அசாதாரண சந்தர்ப்பம் ஏற்பட்டது?

    அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்...

    பதிலளிநீக்கு
  10. ALHAMDULILLAH.THERE ITS WHAT IAM LOOKING FOR,ALSO ABOVE ARTICLE SAYING EVERYTHING 100% REAL.GREAT ALLAH BRING TO PUPLIC WHAT THEY BEING DOING AND HIDING.ITS EVERY MUSLIM MUST HAVE TO TAKE PROMPT ACTION ON THIS ISSUE.BECOZ WE HAVE TO.WE NEED LIKE HYTHER ALI AALIM BECOZ HE TOOK RIGHT ACTION ABOUT SIDDIQ MOSQUE PROPERTIES.

    பதிலளிநீக்கு
  11. ALHAMDULILLAH.THERE ITS WHAT IAM LOOKING FOR,ALSO ABOVE ARTICLE SAYING EVERYTHING 100% REAL.GREAT ALLAH BRING TO PUPLIC WHAT THEY BEING DOING AND HIDING.ITS EVERY MUSLIM MUST HAVE TO TAKE PROMPT ACTION ON THIS ISSUE.BECOZ WE HAVE TO.WE NEED LIKE HYTHER ALI AALIM BECOZ HE TOOK RIGHT ACTION ABOUT SIDDIQ MOSQUE PROPERTIES.

    பதிலளிநீக்கு
  12. ச‌ங்க‌ தலைவ‌ர் உம‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஹைத‌ர் அலீ ஆலிம் மீது மிக‌ கெட்ட‌ வெளியூர் கார‌ண் என்ற‌ வெறி இருப்ப‌தை ஒரு வ‌ருட‌த்திற்கு முன்பே நான் அறிவேன்.

    ஒரு முக்கிய‌மான‌ பிர‌ச்ச‌னை ச‌ம்ப‌ந்த‌மாக‌ ப‌ல‌ரையும் அணுகி எந்த‌ தீர்வும் கிடைக்காத‌ நிலையில் (ப‌ல‌ ந‌ம்மூர் ஆலிம்கள் அடுத்த‌ த‌ர‌ப்பு முர‌ட‌ர்களாக‌ இருக்கிறார்க‌ள், அட‌ போப்பா போய் துவா செய் எல்லாம் ச‌ரியாகிடும் என்று கால‌ம் த‌ள்ளிக்கொண்டிருந்தார்க‌ள்) இந்நிலையில் ஹைதர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் ஒரு சரியான‌ தீர்வை த‌ந்த‌ நிலையில் நாம் இந்த‌ ச‌ங்க‌ த‌லைவ‌ரை அனுகிய‌போது அவ‌ர் நம்மிட‌ம் கூறிய‌ முத‌ல் வார்த்தை " அட‌ அவ‌ர் வெளியூர் கார‌ராயிற்றே ஏன் அவ‌ரிட‌ம் செல்கிறீர்க‌ள்? ந‌ம்மூரிலே பல‌ ஆலிம்க‌ள் இருக்கிறார்க‌ளே"

    இவ‌ர்க‌ள் சொல்வ‌து அபாண்ட‌மான‌ பொய். இவ‌ர்கள் ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ளை ச‌ந்திக்க சென்ற அன்று ந‌ட‌ந்த‌ உண்மை இதுதான்.

    சித்தீக் பள்ளி உள்ளே ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் நுழைந்த‌தும் ஸ‌லாம் சொன்னார்க‌ள் அத‌ற்கு ப‌தில் கூட‌ சொல்லாம‌ல் ஜ‌னாப் உம‌ர் சொன்ன‌ முத‌ல் வார்த்தை " நீங்க வெளியூர் கார‌வ‌ரு"

    உட‌னே ச‌கோத‌ர‌ர் யூசுப் (மெம்ப‌ரின் த‌ம்பி) "நீங்க‌ளும் வெளியூர்தானே சேக‌னா எல்லாம் முத்துப்பேட்டையிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் தானே எல்லாம் தெரியும்" என்றார்.

    இதுதான் ந‌ட‌ந்த‌ உண்மை.

    ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் ச‌ங்க‌த்தை அவ‌ம‌திக்க‌வில்லை.

    மாறாக‌ ஜ‌னாப் உம‌ர்தான் ஆலிம் அவ‌ர்க‌ளை எந்த‌ க‌ண்ணிய‌மும் இல்லாம‌ல் அவ‌ம‌தித்தார்.

    சங்கம் இஸ்லாத்தை நிலை நிருத்துவ‌த‌ற்கு ப‌திலாக‌ த‌னி ந‌ப‌ரின் அக‌ங்கார‌த்தை நிலை நிருத்த‌ உத‌வியாக‌ இருக்கிற‌து.

    நாம் செய்ய‌ வேண்டிய‌ முத‌ல் வேலை ச‌ங்க‌த்திற்கு உட்ப‌ட்ட‌ ஒவ்வொருவ‌ரும் மேற்ப‌டி அதிகார‌ துஷ்பிர‌யோக‌ம் செய்யும் ந‌ப‌ர் வில‌கும் வ‌ரை எங்க‌ளுக்கும் சங்க‌த்திற்கும் எந்த‌ தொட‌ர்பும் இல்லை என்று எழுதி கையொப்ப‌மிட்டு, ச‌ங்க‌த்திற்கு ஒரு பிர‌தியும் எல்லா ப‌ள்ளிக‌ளிலும் ஒரு பிர‌தியும் பொதும‌க்க‌ள் பார்வைக்காக‌ வைக்க‌ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. ச‌ங்க‌ தலைவ‌ர் உம‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஹைத‌ர் அலீ ஆலிம் மீது மிக‌ கெட்ட‌ வெளியூர் கார‌ண் என்ற‌ வெறி இருப்ப‌தை ஒரு வ‌ருட‌த்திற்கு முன்பே நான் அறிவேன்.

  14. ச‌ங்க‌ தலைவ‌ர் உம‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஹைத‌ர் அலீ ஆலிம் மீது மிக‌ கெட்ட‌ வெளியூர் கார‌ண் என்ற‌ வெறி இருப்ப‌தை ஒரு வ‌ருட‌த்திற்கு முன்பே நான் அறிவேன்.

  15. ச‌ங்க‌ தலைவ‌ர் உம‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஹைத‌ர் அலீ ஆலிம் மீது மிக‌ கெட்ட‌ வெளியூர் கார‌ண் என்ற‌ வெறி இருப்ப‌தை ஒரு வ‌ருட‌த்திற்கு முன்பே நான் அறிவேன்.

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.