செவ்வாய், 3 ஜனவரி, 2012

அண்ணா ஹசாரே உத்தமரா?

சென்னையில் புத்தக கண்காட்சி 5- ஆம் தேதி தொடங்குகிறது!

 சென்னை புத்தக கண்காட்சி 5-ஆம் தேதி தொடங்குகிறது. கண்காட்சியை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டு தனது 35- ஆவது ஆண்டில் அடிஎடுத்துவைக்கிறது. இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி வழக்கம்போல சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி ஒன்றரை லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 682 அரங்குகள் இடம் பெற உள்ளன. அதில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளின் புத்தகங்கள் விற்கப்பட உள்ளன. ஆண்டுதோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அவர்கள் வசதிக்கு ஏற்ப விசாலமான நடைபாதைகள், சிவப்பு கம்பள விரிப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் புத்தக கண்காட்சியில் சுற்றி வந்து புத்தகங்கள் வாங்க வசதியாக சக்கர நாற்காலிகள் இரண்டு, புத்தக கண்காட்சி அலுவலகம் அருகே பிரதான ழைவு வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் வசதியாக நேருக்குநேர் நிகழ்ச்சி தினமும் நடைபெறும். 18 எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

5- ஆம் தேதி மாலை 5 மணிக்கு கண்காட்சியை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைக்கிறார்.

8- ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

பள்ளிப்பாடப்புத்தகங்கள் தவிர பொதுவான நூல்களை வாசிக்கும் வழக்கத்தையும் சமூகம் சார்ந்த சிந்தனையை வளர்க்கும் பேச்சுப்போட்டிகள் 9-ந்தேதி காலை 10 மணிக்கு செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 12- ஆம் தேதி அன்று காலை 10-30 மணிக்கு ராணிமேரி கல்லூரியில் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2- ஆவது பரிசாக ரூ.3 ஆயிரம், 3- ஆவது பரிசாக 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசாக வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2- ஆவது பரிசாக ரூ.2 ஆயிரம், 3- ஆவது பரிசாக ரூ.ஆயிரம் மதிப்புள்ள நூல்களும் கொடுக்கப்படும்.

இதுதவிர ஓவியப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. ஓவியப்போட்டி 10- ஆம்தேதி காலை 8 முதல் 10 மணிவரை புத்தக கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் நடக்க உள்ளது. 6 முதல் 16 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வயதை பொறுத்து போட்டி பிரித்து நடத்தப்பட உள்ளது.

பரிசுகள் ரூ.2 ஆயிரம், 1,500, 1,000 மதிப்புள்ள நூல்கள் கொடுக்கப்படும்.

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ஒரு அரங்கு அமைத்து பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய நோட்டுக்களை தர உள்ளது. மேலும் கள்ள ரூபாய்நோட்டை தெரிந்துகொள்வது குறித்த விளக்கமும் அங்கு அளிக்கப்பட இருக்கிறது.

புத்தக கண்காட்சியின் ழைவுக்கட்டணம் ரூ.5. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு இலவசம்.

பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 5 லட்சம் இலவச கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் 8 லட்சம் புத்தகங்கள் விற்பனையாயின. இந்த வருடம் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காணிப்பு கேமராக்களும் கண்காட்சி அரங்கில் பொருத்தப்பட உள்ளன.

17- ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. அன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் விருதுகள் வழங்க உள்ளது. புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து நூல்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.
புத்தக கண்காட்சி தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

சனி, ஞாயிறு நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும்.
இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.

திங்கள், 2 ஜனவரி, 2012

அதிரையில் மின்தடை நேரங்கள் மாற்றம்!

அதிராம்பட்டினம் , பேராவூரணி நகர், கரந்தை, தஞ்சாவூர் வ.ஊ.சி., நகர், தஞ்சாவூர் ஸ்டேடியம், மதுக்கூர், தஞ்சாவூர் கீழவாசல், தஞ்சை கிரிட் மின் நிலையம் இண்டஸ்டிரியல், கரந்தை பூக்குளம் ஆகிய மின்பாதைகளில் மதியம் 12 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின்தடை செய்யப்படும். என்று, தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் சொன்னார்.

தஞ்சை மாவட்ட ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள கலெக்டர் பாஸ்கரன்அழைப்பு!


தஞ்சை மாவட்டம்
கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விபரம்: 
தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை 2012 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும்போது புழக்கத்திலுள்ள ரேஷன் கார்டுகளில் ஆண்டு குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேற்பகுதியில் ""2012'' என முத்திரையிட அரசு உத்தரவிட்டுள்ளது. 

குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை ரேஷன் கார்டுகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். எனவே, ரேஷன் கார்டுகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நீக்கம் காஸ் உருளை விபரம் ஆகிய விபரங்களை வாய்மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் ரேஷன் கார்டு தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து இந்த விபரங்களை பின்னர் தல விசாரணை செய்து ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கும் பணி ஜன.,மற்றும் பிப்., மாதங்களில் நடக்கிறது. எனவே, குடும்ப தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க, புதுப்பிக்க செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான விபரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதும். 

அந்த விவரங்கள் ரேஷன்கார்டு மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியில் வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியில் 2012ம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையெழுத்து, இடது கை பெருவிரல் ரேகை பதிக்க வேண்டும். 

இவ்வாறு கையெழுத்து இட்டால் அல்லது கைரேகை பதிந்தால் தான் ரேஷன் கார்டு புதுப்பிடீக்கும் பணி முடிவுற்றதாக கருதப்படும். ரேஷன் கார்டுகாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விபரங்களை ரேஷன் கடையில் பொருட்கள் பெற செல்லும் போது ரேஷன் கார்டுகாரர்கள் தாங்களே முன்வந்து கேட்கும் தகவலை தெரிவித்து, ரேஷன் கார்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Blog Archive