Breaking News
recent

+2 மாணவர்களின் கவனத்திற்கு !


பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களே ! உங்களின் போதுத்தேர்விற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இடைவெளி உள்ளது என்பதை அறிவீர்கள். பெரும்பாலான மாணவர்கள் கணித (Mathematics) பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை!.



நன்கு படிக்கும் மாணவர்கள் அனைத்து பாடங்களையும்(Lesson) படிப்பது நலம் . இது சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கான என்னுடைய ஆலோசனைகள்.

கணித பாடத்தை பொருத்தவரை மொத்தம் 10 பாடங்கள்(lessons)உள்ளன . இதிலிருந்து நாம் எப்படி 10 பத்து மதிப்பெண்கள் கேள்விகளையும் , பத்து 6 மதிப்பெண்கள் கேள்விகளையும் அட்டெண்ட் செய்வது என்பதை பார்ப்போம்

பத்து பத்து மதிப்பெண் கேள்விகளையும் அட்டெண்ட் செய்வது எப்படி

இப்பிரிவில் மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும் அதாவது கேள்வி எண் 56 லிருந்து 70 வரை .

இதில் கேள்வி எண் 70 கட்டாயமாக அட்டெண்ட் செய்யவேண்டும் இதில் மட்டும் இரண்டு கேள்விகள் கேட்கப்படும் ஒன்றை மட்டும் கட்டாயமாக அட்டெண்ட் செய்ய வேண்டும். மீதம் உள்ள 14 கேள்விகளில் இருந்து 9 வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்

1. அணிகள் (matrices and determinants) இதிலிருந்து ஒரு 10 மார்க் வினா

2. Vector algebra:

இந்த பாடத்திலிருந்து இரண்டு பத்து மதிப்பெண் வினா கேட்கப்படும் .

அதில் ஒன்று பின்வரும் வினாக்களில் இருந்து தான் கேட்கப்படும் .

Exercise no: Qustion no:
2.2 4

2.4 7

2.5 5,12
மற்றும் எகா (Examples)
2.16, 2.17, 2.29

மேலே கண்ட 7 கேள்விகளிலிருந்து ஒன்று கண்டிப்பாக வரும்

அப்புறம் இன்னொன்று

Exercise no: Qustion no:

2.7 3

2.8 7,8,9,10,11,12,13,14


மற்றும் எகா (Examples)

2.44, 2.51, 2.52 மொத்தம் பனிரெண்டு கேள்விகள் . பயந்துவிடாதீர்கள் 2.8 உள்ள கேள்விகள் மொத்தமே மூற்று வகைகள்தான் . எளிதாக புரிந்துகொண்டுவிடலாம்.

அடுத்து

3. Comples Nubers(சிக்கல் எண்கள்)

இதில் ஒரு பத்து மார்க் கேள்வி கேட்கப்படும் . இதனை முழுவதுமாக படித்தே ஆகவேண்டும்.

அப்புறம்

4.Analytical geometry: ( பகுமுறை வடிவ கணிதம்) (சரியா?)

இதில் மூன்று பத்து மார்க் கேள்விகள் கேட்கப்படுகின்றன . மொத்தம் 23 அதி முக்கிய வினாக்கள் உள்ளன. இதிலிருந்து மட்டுமே மூன்று கேளிவ்களும் கேட்கப்படுகின்றன .

அப்புறம் 5ஆவது பாடத்தை தவிர்த்துக்கொள்ளலாம் ( இது சராசரி மார்க் எடுக்கும் மாணவர்களுக்காக என்பதை நினைவில் கொள்க)

6. Differential Calculus Application II. (வகைகெழு நுண்கணிதம்)

இதிலிருந்து ஒரு பத்து மார்க் கேள்வி கேட்கப்படும்


Exercise no: Qustion no:

6.1 3) (iii)

6.2 1

6.3 1) (ii), (iii), (iv), 5) (i)

மற்றும் எகா (Examples)

6.9, 6.10, 6.18, 6.20, 6.22

அப்புறம்

7. Integral Calculus (தொகை கெழு கணிதம்)

இதில் Exercise no 7.4 இருந்து ஒன்றும் Exercise no 7.5 இருந்து ஒன்றும் ஆக இரண்டு கேள்விகள் கேட்கப்படும் .


Exercise no Qustion no: Examples

7.4 4, 7, 8, 9, 15 7.25, 7.26, 7.28, 7.29, 7.30 , 7.31, 7.32,
7.33, 7.34
மேலே கண்ட வினாக்களிலிருந்து ஒன்றும் , கீழே காணும் வினாக்களிலிருந்து ஒன்றும் கேட்கப்படும்

7.5 full(மொத்தம் நான்கு கேள்விகள்தான்)

மேலும் எகா(Examples)

7.37, 7.38 7.39,

இறுதியாக Exercise No: 8.6 இலிருந்து முழுவதையும் படித்தால் அதிலிருந்து கட்டாயமாக ஒரு கேள்வியை அட்டெண்ட் செய்துவிடலாம்.

ஆக மொத்தம் குறைந்த பாடங்களைப்படித்து உங்களால் பதினோரு கேள்விகளைஅட்டேண்ட் செய்ய இயலும்.

வாழ்த்துக்கள் !

அடுத்து 6 மார்க் வினாக்களை பற்றி அடுத்த பதிவில்.... இன்ஷா அல்லாஹ் !
நன்றி: சமுதாய அரங்கம்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.