Breaking News
recent

viswaroopam எடுக்கும் viswaroopam

 கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள விஸ்வரூபம் படத்திற்கு எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது. விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர் ரிலீஸானதும், இந்த படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்திருப்பதாக சந்தேகித்து தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ’உங்களைக் காயப்படுத்தும் எந்த தவறான காட்சிகளும் என் படத்தில் இல்லை’ என கமல் கூறினாலும், இஸ்லாமிய கூட்டமைப்புகளின் தலைவர்களுக்கு படத்தை போட்டுக் காண்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுருத்தினர்.

அதன்பிறகு கமலின் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்சில் ரிலீஸ் செய்யும் முயற்சிக்கு தியேட்டர் உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டி.டி.எச் ரிலீஸ் பிரச்சனையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துகொண்டிருக்கும் நிலையில், மறுபடியும் இஸ்லாமிய அமைப்புகள் விஸ்வரூபம் படம் மீதான தங்களது எதிர்ப்பை கண்டனத்துடன் கூறியுள்ளனர்.

இன்று(03.01.13) தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது “ திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுவருகிறது.

சமீபத்தில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தினால் ஏற்பட்ட காயத்தின் வலி தீருவதற்குள் விஸ்வரூபம் படம் அதே போன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமலின் முந்தைய சில படங்களிலும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதால் எங்கள் சந்தேகம் வலுப்பெறுகிறது. இஸ்லாமியர்கள் குறித்து படமே எடுக்கக்கூடாது என்பதல்ல எங்கள் நிலைப்பாடு. தொடர்ந்து எங்களை தேச துரோகிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பது வேதனைக்குறியது.

திரைத்துரையில் இருப்பவர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வுகள் இருக்கின்றன என்பதை நினைவுபடுத்துகின்றோம். எங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காத பட்சத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் தங்கள் எதிர்ப்பு மற்றும் உணர்வுகளை ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலம் தெரிவிக்க வேண்டியது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்” என்று கூறினர்.
நன்றி:நக்கீரன்
Unknown

Unknown

1 கருத்து:

  1. இஸ்லாமியர்கள் குறித்து படமே எடுக்கக்கூடாது என்பதல்ல எங்கள் நிலைப்பாடு
    நடுநிலை கருத்து

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.