Breaking News
recent

அதிரையில் பரபரப்பு: ஹைதர் அலி ஆலீம் கைது?

அதிராம்பட்டினம் தக்வா(துலுக்கா)ப்பள்ளியில் கடந்த 8 வருடங்களாக மார்க்க பயான் செய்து வருபவர் ஹைதர் அலீ ஆலீம் அவர்கள்.
இவர் மது,மாது,சூது,வரதட்சினை மற்றும் சமூக கொடுமைகளைகளுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார்.
ஹைதர் அலீ ஆலிம் அவர்கள் வழக்கம் போல் இன்று மஃரிப் தொழுகைக்கு பின் தக்வா(துலுக்கா)ப் பள்ளியில் பயான் செய்தார்.
பயான் முடிந்து வீடு சென்ற அவரை அதிராம்பட்டினம் காவல் துறை கைது செய்ய முனைந்தாக கூறப்படுகிறது. காரணம் கேட்டபோது, தக்வா(துலுக்கா)ப் பள்ளியின் நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்ய தடை செய்துள்ளார்கள் என்றும் இன்று அவர் தடையை மீறி பயான் செய்துள்ளார் என்றும் இது குறித்து தக்வா(துலுக்கா)ப் பள்ளி நிர்வாகிகள் புகார் செய்துள்ளார்கள் என்றும் விளக்கம் தெரிவித்தார்கள்.

நாங்களே காவல் நிலையம் வருகிறோம் என்று சொல்லி ஹைதர் அலீ ஆலிம் தரப்பினர் காவல் நிலையம் சென்றனர்.
 பின்னர் தக்வா(துலுக்கா)ப்பள்ளியின் டிரஸ்ட் உறுப்பினர்களும் தமுமுக,எஸ் டி பி ஐ நிர்வாகிகளும் காவல் துறையினர்களுக்கு உண்மை விளக்கங்களை கொடுத்தனர் உண்மை நிலவரத்தை அறிந்த அதிரை காவல் துறை சுமுகமாக பேசி தீர்க்க முயன்று வருகிறது.

முழுமையான செய்தி நாளை தெரியவரும்....
Unknown

Unknown

13 கருத்துகள்:

  1. அதிரை தக்வாபள்ளி நிர்வாகம் ஹைதர் அலி ஆலிமின் அவர்களின் பயானை வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்கள் நிர்வாகம் எடுத்த முடிவிக்குமாற்றமாக மீறி இளஞர் கூட்டத்தை அழைத்துக்கொண்டு பள்ளியில் போய் பயான் செய்ததினால் நிர்வாகம் போலீசில் கம்ப்ளைன்ட் செய்துள்ளது ஒரு ஆலிம் நிர்வாகத்திற்கு மாற்றமாக ஊரில் மீண்டும் குழப்பதை செய்வது நமக்கு ஒரு தலைகுனிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழப்பத்தை ஏற்படுத்துவது தக்வா பள்ளி கேடு கெட்ட நிர்வாகிகளும் அவர்களின் அடிவருடிகளும்

      கண்ணியமிக்க ஹைதர் அலி ஆலிம்

      ஒரு நடமாடும் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

      சத்தியத்திற்காக போராடும் ஒரு ஆலிமை அவர் ஒரு வெளியூரை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்க்காக பலவகையான அபாண்டமான சம்பந்த மில்லாத குற்றச்சட்டுகளைக்கூறி , காவல் நிலையம் வரை செல்லக்கூடிய அளவுக்கு
      தன் சமுதாய கௌரவத்தின் மீது தானே மண்ணை அள்ளி வாரி இறைப்பதுபோல் இவர்களின் செய்கைகள் இருக்கின்றன.

      இவர்கள் செய்த குற்றம்தான் என்ன ?

      இன்றுவரை கண்ணியத்திற்குரிய அப்துல் லத்தீப் ஆலிம் அவர்களின் ஆக்ரோஷமான, நெஞ்சுருதிமிக்க , அல்லாஹ்வின் பயத்தினை ஒவ்வரு பயானிலும் ஏற்ப்படுத்தக்கூடிய அளவுக்கு, அவர்களுக்குப்பிறகு
      பயான் செய்கிறார்களே அது குற்றமா ?

      ஊரில் மண்டிக்கிடக்கும் மார்க்கம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்களையும் , பித் அத்துகளையும் பகிரங்கம் செய்கிறார்களே அது குற்றமா ?

      இவர்கள் பயாணினால் அதிரை பெண்களிடம், மாபெரும் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுரிக்கின்றதே அது குற்றமா ?

      அதிரையில் புனித ரமலான் மாதம் இளைஞ்கர்கள் மத்தியில் இரவில்
      நேரம் வீணடிக்கப்படாமல் நேரத்தின் அமல்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவர்களை ரமளானின் கண்ணியத்தை பேணும் நல்ல இளைஞர்களாக மாற்றி இருக்கின்றார்களே அது குற்றமா ?

      இறைவனின் இல்லத்தின் சொத்துக்களை மீட்டு அதை பள்ளியின் நிர்வாகத்திடமே ஒப்படைக்க போராடுகிறார்களே அது குற்றமா ?

      தன்மீது அபாண்டமான வீண் பழிகளை போட்டும் பொறுமையோடு சகித்துக்கொண்டு தன் நிலையில் மாறாமல் அல்லாஹ்வுக்காக தன் விளக்கங்களை கொடுத்தார்களே அது குற்றமா ?

      ஹைதர் அலி ஆலிம் பயான் செய்தாலே நாளை மஹ்ஷரை நினைத்து ஒரு நடுக்கமும் அல்லாஹ்வின் அச்சமும் கடுமையாக ஏற்படுகின்றது என்று பயானைக்கேட்டுவிட்டு வெளியில் வருபவர்கள் ஒரு அச்சத்துடன் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்களே அது குற்றமா ?

      தமிழை ஒழுங்காக உச்சரிக்கத்தெரியாதவர்கலெல்லாம் பயான் சொல்லக்கேட்டு ஒரு அச்சமோ நடுக்கமோ ஏற்படாமல் இருந்த அதிராம்பட்டினம் சூழ்நிலையை மாற்றி , அழகிய தமிழிலில் பயானில் ஒரு உயிரோட்டத்தை தந்து கொண்டு இரிக்கின்றார்கலே அது குற்றமா?

      இதில் எது குற்றம் ?
      இவை அனைத்துமே குற்றமென்றால்
      இக்குற்றம் அனைத்தையும் ஆதரிக்க அல்லாஹ் அதிரையின் அனைத்து முஹள்ளவாசிகளுக்கும் துணை நிர்ப்பானாக !

      அனைத்து பழி சொல்லிளிரிந்தும் அல்லாஹ் அவர்களை மீட்டெடுத்து
      தொடர்ந்து அவர்களின் கம்பீர பயானை நாம் அனைவரும் கேட்டு அதன்படி
      வீரிய ஈமானுடன் இவ்வுலகை விட்டும் பிரிய அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக !

      ஆமீன்
      யாரப்பல் ஆலமீன்.

      நீக்கு
    2. வட்டி,வரதட்சனை,மெளலிது,கந்துரி போன்ற அனாச்சாரங்களுக்கு எதிரான பிரசாரத்தை ஆதிக்க வர்க்கத்திற்கு அஞ்சாமல் உரக்க சொல்ல உள்ளூர் ஆலீம்கள் யாராவது தயாராக இருந்தால் தைரியமாக வாருங்கள் எந்த கயவர்களுக்கும் அஞ்சவேண்டாம்.உங்களுக்கு பக்க பலமாக இருக்க நம் இளைய சமுதாயம் தயாராகவே இருக்கிறது.மரணிப்பது ஒரு தடவைதான் அது அல்லாஹ்வின் பாதையில் மரணிக்க தயாராகுங்கள்.

      நீக்கு
    3. கண்ணிய மிக்க ஹைதர் அலி ஆலிம் அவர்கள் ஒரு நடமாடும் இஸ்லாமிய நூலகம்
      அந்த நூலகத்தின் வாயிலாக பயனடைந்த மக்கள் ஏராளம். குறிப்பாக சொல்லப்போனால் பயனடைந்த பெண்கள் அதிகம். அந்த நூலகத்தை மூட நினைக்கும் அறிவிலிகளுக்கு ஓர் பகிரங்க எச்சரிக்கை இஸ்லாமிய நூலகத்தின்மீது போர்தொடுக்க நினைத்து உங்களையே அழித்துக்கொள்ளாதீர்கள். அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் என்பதெல்லாம் மலை ஏறிவிட்டது.இப்பொழுதெல்லாம் தெய்வம் அன்றே கொள்ளும்.எத்துனையோ காட்சிகள் அரங்கேறுவதை கண்ணால் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிக்க பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளே பள்ளியை நிர்வகிக்குமுன் உங்கள் அகங்காரம்,ஆனவங்களை அடக்கி ஆளக்கற்றுக்கொள்ளுங்கள்.ஆட்சி தம்மிடமுள்ளது என்று ஆடாதீர்கள்.உங்கள் இந்த ஈனச்செயள்களினால் அல்லாஹ்வின் கோவப்பார்வையை எங்களுக்கும் பெற்றுத்தராதீர்கள்
      இறைவனின் அதாபு வந்தால் நீங்கள் செய்யும் அக்கிரமங்களை தட்டி கேட்க தவறும் பாமர மக்களயும்தான் வந்து சேறும்.

      அதிரைமன்சூர்

      நீக்கு
    4. skarfs24 ஏப்ரல், 2013 5:58 PM
      //அதிரை தக்வாபள்ளி நிர்வாகம் ஹைதர் அலி ஆலிமின் அவர்களின் பயானை வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்கள் நிர்வாகம் எடுத்த முடிவிக்குமாற்றமாக மீறி இளஞர் கூட்டத்தை அழைத்துக்கொண்டு பள்ளியில் போய் பயான் செய்ததினால் நிர்வாகம் போலீசில் கம்ப்ளைன்ட் செய்துள்ளது ஒரு ஆலிம் நிர்வாகத்திற்கு மாற்றமாக ஊரில் மீண்டும் குழப்பதை செய்வது நமக்கு ஒரு தலைகுனிவு//



      ஒரு ஆலிமை பற்றி பயான் செய்ய கூடாது என்று ஒரு முஸ்லிமே கம்ப்ளைன்ட் செய்வதுதான் ஒட்டு மொத்த முஸ்லிமுக்கும் தலை குனிவு

      நீக்கு
  2. தக்வா பள்ளியில் ஹைதரலி[மவ்லானா]மட்டுமே பயான் செய்யவேண்டும் என்ற ஏக போக உரிமை உள்ளதா? தடை விதித்தாலும் அத்துமீற என்ன காரணம் ஆல்லிமே விளக்கம் வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. அத்துமீற அவர் என்ன காபிஃறா அவர் ஒரு ஆலீம் உங்களுக்கெல்லாம் மௌலூது ஒதுன நல்லவர் இல்லேன கெட்டவர்

    பதிலளிநீக்கு
  4. மார்க பற்றுல்ல ஒரு ஆலிமை ஒருதலை பத்சமாக அவரைதிடீரென்ரு பனிசெய்ய வேன்டாம் என தடை விதிக்க காரனம் என்ன பிதத்கள் ஒழின்து விடுமோ என்ர அச்சமா? அல்லாஹ் போதுமானவன்.

    பதிலளிநீக்கு
  5. மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)24 ஏப்ரல், 2013 9:26 PM
    //தக்வா பள்ளியில் ஹைதரலி[மவ்லானா]மட்டுமே பயான் செய்யவேண்டும் என்ற ஏக போக உரிமை உள்ளதா? தடை விதித்தாலும் அத்துமீற என்ன காரணம் ஆல்லிமே விளக்கம் வேண்டும்//



    பள்ளிவாசல் உனக்கோ எனக்கோ தனிப்பட்ட முறையில் சொந்தமல்ல உலக முஸ்லிம் அனைவருக்கும் சொந்தமானது எட்டு வருசமா பயான் செய்தவரை பயான் செய்யாதே என்று போலீசில் புகார் கொடுக்க யாருக்கும் அருகதை கிடையாது

    பதிலளிநீக்கு
  6. jahir28

    \\பள்ளிவாசல் உனக்கோ எனக்கோ தனிப்பட்ட முறையில் சொந்தமல்ல உலக முஸ்லிம் அனைவருக்கும் சொந்தமானது எட்டு வருசமா பயான் செய்தவரை பயான் செய்யாதே என்று போலீசில் புகார் கொடுக்க யாருக்கும் அருகதை கிடையாது\\

    Please mind your words before publishing...orumayil solli iruppathu kandikka thakkathu...

    பதிலளிநீக்கு
  7. ஹைதர் அலி ஆலிம் - தக்வா பள்ளி - சித்திக் பள்ளி

    ஹைதர் அலி ஆலிம் அவர்கள் உண்மையான தக்வாதாரியாக இருந்தால் இப்படி எதற்கெடுத்தாலும் கூட்டத்தை கூட்டி ஊருக்குள் குழப்பத்தை விளைவிக்க முற்படமாட்டார். என்னைபொருத்தவரை அவர் ஒரு வேஷதாரி. நமதூரில்அவருக்கு பணம் மிதமிஞ்சி கிடைக்கிறது இதனால் அதிரையை விட்டு வெளியேற மனமில்லாமல் பல்வேறு அரசியல் கட்சி ஆட்களை கைவசப்படுத்தி இயங்குகிறார். அவர் தப்லீக் சார்ந்த அப்துல் காதர் ஆலிம் அவர்கள் ஊரிலிருக்கும்பொழுதும் வேறு சில சந்தர்பங்களிலும் தப்லீக் மர்கசுக்கு வருவார், ஆனால் ஒரு நாள்கூட கஷ்திலோ, மற்ற தப்லீக் நடவடிக்கைகளிலோ கலந்து கொள்வது கிடையாது. அவரின் இந்த நடவடிக்கையை என்ன சொல்வது? சொந்த ஊரான சித்தார்கோட்டை மற்றும் கீழக்கரையிலிருந்து வெளியேற்றப்பட்டு அவர் வந்து அடைக்கலம் பெற்றது அப்துல் காதர் ஆலிம் அவர்களிடம். சித்திக் பள்ளி நமதூருக்கு இரண்டாவது மர்கஸ். இன்று அங்கே என்ன நடக்கிறது.(சித்திக் பள்ளி விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளதால் அதைப்பற்றி எதுவும் கூறுவதற்கில்லை. இன்றைய கமிட்டி நீதமன்றத்தை நாடி உள்ளது).

    ஒரு தலைசிறந்த தக்வா தாரியாக இருந்திருந்தால் தக்வா பள்ளி கமிட்டியின் தடையை மீறாமல் அல்லாஹ்வின் உதவியை நாடியிருக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி கிடைத்திருக்கும். இதுவரை எந்த ஆலிமும் அலையாத அளவுக்கு காவல் நிலையத்திற்கு அலைகிறார். கட்சி சார்ந்த இளைகர்களின் உதவி (அல்லாஹ்வின் உதவியை விட) பெரிதாக இவருக்கு தெரிகிறது. ஏனென்றால்அவரின் செயல்பாடுகளும் இளைஞர் பட்டாளங்களில் விமர்சனங்களும் இதைத்தான் எடுத்து காட்டுகிறது.


    எனவே ஹைதர் ஆலிம் ஒரு சிறந்த நாவன்மைமிக்கவர் தக்வாதாரியல்ல.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.