Breaking News
recent

இன்று முதல் அம்மா மினரல் வாட்டர்!

அரசுப் போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இதை செயல்படுத்தும் வகையில், முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தினமும் 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 1 லிட்டர் பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பாட்டில்கள் அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம்  அண்ணா பிறந்த தினமான இன்று  துவங்கப்பட்டு இன்றைய தினமே மினரல் வாட்டர் விற்பனையும் நடை முறைக்கு வரும் 

 கும்மிடிப்பூண்டியில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மினரல் வாட்டர் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இன்று முதல் இருந்து பஸ் நிலையங்கள், மோட்டல்கள், அரசு விரைவு பஸ்கள், நீண்ட தூர பஸ்களில் அம்மா மினரல் வாட்டர் 1 லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும்.

அடுத்த கட்டமாக மேலும் 9 இடங்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்களை அமைக்கவும் சாலைப் போக்குவரத்து நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.