Breaking News
recent

அதிரையர்கள் முயற்சியில் இலண்டனில் பள்ளிவாசல்!

கிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாமில் இஸ்லாமிய(தமிழ்) தாவா சென்டரும் அங்கு நடைபெரும் ஜும்ஆ உரையும் ஏனைய உரைகளும் தமிழில்தான் நடைபெற்று வருகிறது. அதுப்போல் லண்டனின் க்கிரவுளிப்போன்ற பகுதிகளிலும் தமிழில்தான் இஸ்லாமிய உரைகள் நடைமுறையில் உள்ளது. இன்னும் லெஸ்டர் போன்ற பகுதிகளும் அப்படியே. இப்படி ஐக்கிய ராஜியம்(யூகே) முழுவதும் சுமார் 15 இடங்களில் தமிழ் மஸ்ஜித்துகள் உள்ளது. இதனை இலங்கை முஸ்லிம் சகோதர்கள் நடாத்திவருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த கிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் இஸ்லாமிய(தமிழ்)தாவா சென்டரில் முக்கிய காரியதரசியாக அதிரையின் மருமகனார் மருத்துவர் கபீர் அவர்கள் இருக்கின்றார்கள்.

இலண்டன் மாநகரில் தமிழ் முஸ்லிம்கள் வாழும் முக்கியமான பகுதி குறைடன் ஆகும் இது தென் இலண்டனில் உள்ளது. அதிரை சகோதர்கள் 90 சதம்பேர் இங்குதான் உள்ளார்கள். இங்கு வேறு நாட்டு முஸ்லிம்களும் உள்ளனர் அவரவர் தாய்மொழியில் பள்ளிவாசலை நிர்மாணம் செய்து மார்க்க செயல்பாடுகள் மட்டுமின்றி சமூக விடயங்களில் செயல்பட்டு வருகின்றனர்.

அதுப்போல் தமிழ் முஸ்லிம்களால் நிர்வாகம் செய்யப்படும் மஸ்ஜித் இந்த குறைடன் பகுதிக்கு வேண்டும் என்ற ஆவல் நீண்டகாலமாகவே உள்ளது.  2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமுமுக மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஜிருல்லாஹ் அவர்கள் இலண்டன் குறைடன் வந்த போது இந்த இந்த நன்முயற்சியை ஊக்குவித்தார்.

இப்போது அந்த நல்ல முயற்சியை அதிரை சகோதர்கள். பெனா.தானா என்ற தமீம் அவர்களும் கமு.ரஃபீக் அவர்களும் எடுத்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். அவர்களின் நல்ல முயற்சியை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக! 

அதன் முன்னோட்டமாக அவர்களின் முயற்சியில் கடந்த 4/10/2013 - வெள்ளிக்கிழமை அதிரையில் ஆலீம் பட்டம்பெற்ற சகோதரர் தமிழ்உரையுடன் ஜும்ஆ நடந்தது. இந்த ஜும்ஆ தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் துவங்கியுள்ளது.

இறையில்ல முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த சகோதர்களுக்கு ஏனைய அதிரை சகோதர்கள் ஒற்ற கருத்துடன் உதவிடவேண்டும்!




 படம்:மு.செ.மு. ஜஹபர் சாதிக் 
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.