Breaking News
recent

அதிரை துலுக்காபள்ளி மார்கெட் தீ விபத்து: சில திடுக் காரணங்கள்???


அதிரை தக்வாப்பள்ளிக்கு சொந்தமான மார்கெட்டில் நேற்று இரவு சுமார் 10:10க்கு தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பல கடைகள் எரிந்து நாசமாகியது.சம்பவத்தை கேள்விப்பட்ட 600க்கும் மேற்பட்ட அதிரை இளைஞர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுவரை கிடைத்துள்ள தகவல் படி பல இலட்சம் சேதம் இருக்கும் என்று தெரிகிறது. தீணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 10:50க்கு வந்தனர்.
சம்பவ இடத்தை வட்டாச்சியர் பார்வையிட்டார்,அதிரை காவல்துறையினரும் பட்டுகோட்டை டிஎஸ்பி உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணியுடன் தீயை அணைக்க உதவினர். அவர்களுக்கு நமது நன்றியும் பாரட்டும்.

இந்த மார்கெட் 90 சதவிகிதம் தென்னங் கீற்று கூறையால் கடைகள் போடப்பட்டுள்ளது. இந்த கோரத் தீ இரவில் பற்றியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. என்ற நிம்மதி இருந்தாலும், இதே தீ... பலாயிரம் மக்கள் கூடும் பகல் நேரத்தில் ஏற்பட்டிருந்தால்...??? பல உயிர்கள் கருகி கறிகட்டையாக‌ போய் இருக்கும்...அல்லாஹ் காப்பாற்றினான். அல்ஹம்துலில்லாஹ்!

எனவே, இந்த மார்கெட்டின் உரிமையளர்களான துலுக்காப் பள்ளி நிர்வாகம் இந்த தென்னங்கீற்று கொட்டகைகளை மாற்றி, தீ பற்றாத சீட்டுகளை போடவேண்டும். அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்களுக்கு மட்டுமே கடை கொடுக்கவேண்டும். ஆனால் உயிருடன் விளையாடதீர்கள் என்பதுதான் அதிரை மக்களின் வேண்டுகோள். நிர்வாகம் முன்வருமா?

இவற்றையும் கவனத்தில் கொள்க...

அதுப்போல் கட்டிடமாக கட்டப்பட்டுள்ள கடைகளில் அரசு சட்டப்படி தீணைக்கும் கருவி ஏதும் இல்லை.
அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் தப்புவதற்கு கூட வழியில்லை. ஆக்கிரமிப்பும் குப்பை மேடாகவுமே உள்ளது.
இவ்வளவு பெரிய மார்கெட்டாக இருந்தும், தீயை அணைக்க தண்ணீர் இல்லை:அதற்கான எந்த வசதியும் இல்லை.
இப்படி பல... அதன் குறைகளை சொல்ல...
இந்த தீ இந்த மார்கெட்டிற்கு முதல் முறையல்ல;பல முறை தீ விபத்து ஏற்பட்டு இருந்தும் இந்த மார்கெட் யாருக்கோ சொந்தம் என்பது போலவும் அவர்கள் "சும்மா" வாடகை தருகிறார்கள் என்பது போலவும் துலுக்காபள்ளி நிர்வாகம் இருப்பது போல் தெரிகிறது. இது அழகல்ல! நடவடிக்கையில் இறங்கவேண்டும்.
படம்:கூகுல் இமேஜ்
Unknown

Unknown

1 கருத்து:

  1. தீயின் படமே மிகவும் பயங்கரமாக உள்ளது . இம்மாதிரியான படம் நான் பார்த்ததில்லை

    விளக்கமான செய்தியை தந்து ஆக்கப் பூர்வமாக செய்ய வேண்டியதையும் ஆலோசனையாக அருமையாக தந்துள்ளீர்கள் .
    இனி ஒரு நிகழ்வு இவ்விதம் நடக்காமல் இருக்க இறைவனை வேண்டி நிற்பதுடன் ஆக வேண்டிய பாதுகாப்பான முறையில் செயல்படுவோம்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.