Breaking News
recent

அதிரை அருகே உள்ள ஊராட்சி தலைவர் வெற்றி செல்லாது! தேர்தல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!!

மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ள பாவாஜிக்கோட்டை ஊராட்சி மன்ற தேர்தல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 3–வது இடம் பிடித்தவரை தலைவராக நியமித்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ளது பாவாஜிக்கோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு கடந்த 2011–ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் அப்துல்ஹாசன் என்பவர் 219 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வெங்கடேசன் 206 வாக்குகளும், தர்மராஜ் 69 வாக்குகளும் பெற்றனர். 19 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் வெங்டேசன் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அப்துல்ஹாசன் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும், அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் நடந்து வந்தது. நீதிபதி சேதுமாதவன் இந்த வழக்கை விசாரித்து அப்துல்ஹாசன், வெங்கடேசன் ஆகிய 2 பேரும் முறைகேடு செய்ததாக கூறி 3–ம் இடம் பிடித்த தர்மராஜை தலைவராக நியமித்து உத்தரவிட்டார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.