Breaking News
recent

ஃபேஸ்புக் - உங்களின் உண்மை முகமா ?

'அதிரை' எங்கள் ஊர் ! 

நாம் பிறந்த, வளர்ந்த, வாழ்வின் வசந்தம் சூழும் நமதூர் மண் வாசனையை மறக்கத்தான் முடியுமா !?

அதிரை என்ற பெயரைக் கேட்டாலே ஆனந்தம் அப்படியே அட்டாச் ஆகிவிடுகிறது நினைவுகளை அசை போடும்போதே!.

ஃபேஸ்புக் என்ற சமூக பிணைப்பு தளங்களை முகநூல், முகப்புத்தகம், இன்னும் ஏதேதோ...! இப்படியாக கஷ்டப்பட்டு ‘தமிழ்’ வளர்க்க பாடுபடும் அனைவருக்கும் அந்தப் பின்னலின் பின்புலங்கள் தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே !

நேசிப்பவர்களோடு உறவாடத்தான் என்று நேற்று வரை நினைத்திருந்தால் அதுவும் அறியாமையே இன்றையச் சூழலில். வேடதாரிகளின் வேடந்தாங்கலாகவும் புகழிடமாகவும் இவ்வகை சமூக பிணைப்பு வலைத்தளங்கள் அமைந்து இருப்பதையும் மறுக்க இயலாது.

வளர்ந்து விட்ட அல்லது வளர்ந்துவரும் தகவல் பரிமாற்றங்கள் மனிதகுலத்தின் ‘மதி’மாற்றத்தை எவ்வாறெல்லாம் சூரையாடுகிறது என்பதற்கு ‘முதல் காட்டே’ இவ்வகை சமூக வலைத்தளங்களின் மற்றொரு முகம்.

ஆணென்றும் பெண்ணென்றும் பால் மாற்றி அன்பால் இனம் மாற்றி சமூகச் சீரழிவைத்தான் தூண்டுகிறது என்ற காலம் பின்னுக்குச் சென்று, ஆளுக்கு ஆயிரம் ஐடிகள் (குறியீடுகள்) அனைத்திலும் ஆயிரத்தில் ஒருவனாக முன்னிறுத்திக் கொள்வதில் மும்முரம்.

யாரோடு உறவாடுகிறோம் நட்பு பாராட்டுகிறோம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் இவ்வகை கண்ணாமூச்சி விளையாட்டில், உள்ளே நுழைந்திருப்பது பாஷீச தீயசக்திகள். திட்டமிட்டு குறிவைத்து ஆரம்பித்திருக்கும் இந்த குழுமங்கள் அல்லது தனிநபர் குறியீடுகள் அனைத்தும் தரம் பிரித்து அதன் நம்பகத்தன்மையை அவசியம் அறிய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

இலகுவான தொடர்புகளை ஏற்படுத்தும் இவ்வகை சமூக பிணைப்பு வலைத்தளங்களில் உலாவும்போது, அங்கே மேயச் சென்ற மான்களைப் போன்று இல்லாமல் கூட்டமாக சென்ற சிங்கங்களாக நிமிர்ந்து நிற்பவர்கள் வெகுச் சிலரே அதில் நம்மவர்கள் வீறுநடையும் போடுகிறார்கள்.

சமீபத்தில் 'அதிரை' என்ற பெயரை எங்கு கேட்டாலும் 'அட! நம்மவூரு' என்ற வாஞ்சையுடன் 'அதிரை'க்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கும் முன்னரே அங்கே 'லைக்' என்ற முத்திரை குத்துவது வாடிக்கையாகி வருகிறது.

அதிரை என்ற சொற்றொடரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதில் என்னுரிமை உன்னுரிமை என்று மல்லுக்கட்ட முடியாது. ஆனால், நம்மவர்கள் அதிகமாக பயன்டுத்தி வந்த இந்தச் சொல் சமூக விரோதிகளாலும், பாஷிச கொடூர சக்திகளாலும் பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டறிய முடிகிறது.

சமூக பிணைப்பு தளங்கள் அல்லது இணைய குழுமங்கள் அல்லது தனி மின்னாடல் குழுமங்கள் என்று எதிலிருந்து உங்களுக்கு அழைப்போ அல்லது இணையத் தேடலில் சிக்கியதில் சொடுக்கியோ வந்தால் நன்கறியப்பட்டவர்களாக அல்லது அறியப்பட்டவைகளாக இருந்தால் மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.

கோடி கோடியாக கொட்டி கொடியவர்களால் பின்னப்பட்டிருக்கும் இந்த வலையில் சிக்கி விடாதீர்கள், அவர்களால் விரிக்கப்படும் இந்த மாஸ் மீடியா என்ற சிக்கலில் சிக்கிவிடாமல் தனித்து நின்று வென்றெடுங்கள் !

பகிர்வுகளை பத்திரமாக பகிர்ந்து கொள்ள உங்களின் நட்பு வட்டத்தையும் சமூக வட்டத்தையும் வலுப்படுத்த மேற்சொன்ன புல்லுருவிகளை அடையாளம் கண்டு விளகிக் கொள்ளுங்கள்.

அதிரைச் சமூகத்திற்கென்று இருக்கும் குழுமங்கள் அல்லது சமூக பிணைப்பு வலைத்தளங்கள் என்று இருக்குமாயின் அதன் நடத்துனர்கள் / பங்களிப்பாளர்கள் யாரென்று அறிந்து கொண்ட பின்னரே இணையுங்கள், எதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மாறாக ஏதும் விபரங்கள் அறியாமல்"அதிரை" என்ற பெயர் தாங்கி யாரென்றே அடையாளம் அறியப்படாத எதுவானாலும் புறக்கணியுங்கள்.

இது ஒரு புலணாய்வின் விளைவாகக் கண்டறிந்த திடுக்கிடும் தகவல்களின் காரணமாக எச்சரிக்கையுணர்வை ஏற்படுத்தவே பதிக்கப்படுகிறது...!

அதிரைநிருபர் பதிப்பகம்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.