அதிராம்பட்டினத்தில் வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு!

அதிராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பட்டுக்கோட்டை தாசில்தார் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ளும் பணி நடந்து வருகிறது. 
அதிராம்பட்டினத்தில் உள்ள 21 வாக்குச்சாவடிகளில் தாசில்தார் பாஸ்கரன், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், ஆர்ஐ பழனிவேல், சரக நில அலுவலர் அசோகன், விஏஓ முத்துக்கருப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். வாக்குச்சாவடிகளில் சாய்தளம், மின்சாரம், குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்