டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.  இதில் தஞ்சாவூர் தொகுதியில் டி.ஆர்.பாலு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.  கடந்த முறை தஞ்சாவூர்  தொகுதியில் போட்டியிட்டு வென்ற பழனிமாணிக்கத்திற்கு சீட் வழங்கவில்லை.
பழனிமாணிக்கத்திற்கு சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த அவரது ஆதரவாளர்கள் தஞ்சாவூரில் இருக்கும் பழனிமாணிக்கம் வீட்டின் முன்பு குவிந்தனர்.

எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தை தந்ததால்,  ஆவேசம் அடைந்தனர்.  தஞ்சாவூரில் ரயிலடி மற்றும் அண்ணா  சாலையில் டி.ஆர்.பாலுவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடியே அவரது உருவ பொம்மை யை எரித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்