Breaking News
recent

புளியாங்கா பறிக்க போவோமா மாப்ளே!

(ஒரு அதிரைவாசியின் அந்த நாள் நினைவுகள்)
அது ஆச்சி கிட்டத்தட்ட 20 வருசம்,அப்ப எனக்கு 14- 15 வயசு.புளியங்காஅடிக்கிறது,மாங்கா அடிக்கிறது ரொம்ப அலாதியான விருப்பம்,சந்தோசம்னும் சொல்லலாம்.ஆளுக்கு ஒரு சைக்கிள் வச்சிருப்போம்.காலைல சரியா 6 மணிகெல்லாம் நாலஞ்சு பேரா சைக்கிளை எடுத்துக்கிட்டு வெள்ளக்குளம் போவோம்.போகும் போது பந்தயம் வப்போம் யாரு வேகமா வண்டி(சைக்கிள்)ஓட்ரதுன்னு.வெள்ளக்குளம் அடஞ்சதும் கொண்டுப்போன மாத்து துணிகள ஒரு மேடுவாகு பாத்து வச்சிட்டு,கோவளமாதிரி வேட்டிய மடிச்சுக்கட்டி தொபுக்குனு தண்னீள பாய்வோம்.ஏற்கனவே குளிச்சிக்கிட்டு இருக்குற பிரண்ட்ஸ் செல்லாம்,ஓ,ஓன்னு சத்தம் போடுவாங்க!பெரிசுங்களெல்லாம் வாய்க்கு வந்த படி யேசுங்க!தொபுக்குனு பாயம் போது குடலுக்குள்ளெ குளுவும்(குளிரும்)பாருங்க!ஆஹா!அப்ப தண்ணியெல்லர்மேலயும் தெரிக்கும், நமக்கும்தான் அத இப்ப நினச்சாலும் குளுவுது. தொட்டு விளையாட்டு,கன்னுவிளையாட்டு,சாபுத்திரிப்போட்டு யார் தோக்குறாங்களொ அவங்க கண்ண கட்டிடுவோம்.ரெடி 1,2,3ன்னு சொன்னதும் தண்ணில முக்கிக்குவோம்,யார கரட்ட தொடுரவங்க அவுட் அவங்க கண்ண கட்டனும்.சில பேருக்கு குளு தண்ணின்னா ஆரம்பத்துல உடனே நனய மாட்டாங்க,மெதுவா,ஒவ்வொரு படியா எறங்குவானுவ!அவன மாறி ஆளபின்னடிலேந்து ஒருத்தன் புடுச்சி தள்ளுவான்,கெட்ட வார்த்த பேசிகிட்டே குளிக்க ஆரம்பிச்சிடுவான் நம ஆளு.அவனும் விளையாட்டுக்கு வரேன்பான்,கடசியா வந்தவன்னு (தண்டனை?)அவன் கண்ண கட்டுவோம். நேரம்போறதே தெரியாது.திடீர்ன்னு ஒருத்தன் நினவூட்டுவான்.என்னாங்கடா ஸ்கூலுக்கு லேட்டாச்சி நான் போறம்பா!வர்ரவன் வா சண்முக சார்ட்ட அப்பரமா அடிவாங்க முடியாது.முட்டி போடச்சொல்வார்,பெற்றொரை கூட்டிட்டு வரச்சொல்வார்ன்னு லச்சிய வீரன்போல் அவசர அவசரமா கிளம்புவான்,அவனெ சில பேரு தொடருவாங்க!சிலபேரு அவங்க கடக்குரானுவ பயந்தாகோளிங்க!சொல்லிட்டு சத்தமாசிரிப்பாங்க!அவங்க விளையாட்டுத்தொடரும்.லேட்டா ஸ்கூலுக்கு வந்து ஏதாவது பொய் சொல்லி தப்ப பாப்பாங்க!இல்ல மாட்டிக்கிட்டு அடிவாங்குவானுவ!ஸ்கூல் விட்டதும் சாயங்காலம் அவசரமா வீட்லேந்து கிளம்பி புளியாங்கா(புளி-காய்)அடிக்க போவோம்.கைல கிட்டு பில்லு,மொலகா பொடி உப்பு வச்சிருப்போம்.ரோட்டோரமா சைக்கிளை நிறுத்திட்டு மல,மலன்னு நலஞ்சு பேரா ஏறிபரிபானுங்க,கீழே 2 பேரு சைக்கிள் திருட்டுப்போகாம இருக்க காவல் காப்பனுங்க!யாரும் வரங்கலான்னு பாக்க-காரணம் குத்தகைகாரன் வந்தா புடிச்சி எல்லாத்தையும் புடுங்கிக்குவான்,அடிப்பான்.3 பேரு கீழ விழுரத பொறக்கனும்.பக்கா பிளேன் போங்க!மேல ஏறி பறிக்கிறவனுவ பெரும்பாலும் வேட்டில கட்டிக்குவானுவ!இப்படிபறிச்சத எடுத்துக்கிட்டு,யார் வீட்டு மாடியிலெயாவது கொண்டு போய் பங்கு போடுவோம்.மிளகாபொடி வச்சி,உப்பு வச்சி தின்டா...இப்ப நினச்சாலும் பல்லு கூசுது.இது மாரிதான் மாங்கா பரிக்கிறதும்.இப்படி சைக்கிள்கிராப் நீளும் கை வலிக்கிதுஅது நால இதொட நிறுத்துறேன் மன்னிச்சுடுக்க!
--தபால் காரன்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.