Breaking News
recent

ரிட்டன் விசா11

(டாக்டர் உள்ளே நுழைந்தவாறு...) இப்ப எப்படியிருக்குது?வலியேதும் இருக்குதா?என்றார்.கடசியில நமக்கு வேண்டிய புள்ளகளா போய்டீங்க.யாரு அன்வர் மகன்?வேலாயுதம் எல்லாம் சொன்னான். நாந்தான் சார்-கபூர்.
அப்பா நல்லா இருக்கிறாரா? பார்து பல வருசம் ஆச்சு.(அப்ப ஜமால்) சார்! எப்படியும் நாளைக்கு அனுப்பிடுங்க தலப்பொற நோன்பு ஆரம்பமாவுது.அப்படியாப்பா உனக்கு ஒன்னும் மில்ல காயத்துக்கு மருந்து தரேன்.டாக்டர் ஹாஜமொய்தீனுக்கு விபரமா லட்டர் தரேன் மீதி அவரு பாத்துக்குவார்.அன்வர் மகனே நீ யென்ன பன்றே? உங்க வாப்பா ஒருமுற ஹனிபா சார் ஊட்டு கல்யாணத்துல சந்திச்சப்பொ நீ அமெரிகாவில இருக்கிறதா சொன்னார்.ஒரே புள்ள அவருக்கு துனையா சொத்த கவனிச்சிக்கிட்டு இருக்கலாம்ல? இப்பவும் அமெரிக்காவுல தானா இருக்கே? லோக்கல்ல,சென்னை பேங்களூருன்னு சாப்ட்வேர் பரவிடுச்சி யோசிச்ச் பாருங்கப்பா! நீ நல்ல படிகிற பையன்னு வாப்பா சொல்லியிருக்கார்.ஏதோ பாத்து நடந்துக்க.வாப்பாவ கேட்டதாச் சொல்லு!என்னடா அப்பான்னு சொன்னவரு வாப்பான்னு சொல்றான்னு பார்கிறியா?எனக்கு எல்லாமே பாய் வீட்டு பசங்கதான் பிரண்டு.உங்க வாப்பிச்சா வீட்ட்லதான் அந்த பெரிய திண்னையில உக்கார்ந்து பாடம் படிக்கிறது,அரட்டை அடிக்கிறது எல்லாம்.அது ஒரு மறக்க முடியாத காலம்.உங்க அப்பா! அதான் தாத்தா பெரிய ஆள் ஊருக்குத் தீர்பெல்லாம் சொல்வார்.குட்டையா இருப்பார்!உங்க ஊரு சேர்மனெல்லாம் இவருடைய யோசனப்படிதான் நடப்பாங்க.வீடு வாங்கி கொடுக்குறது,விற்க்குறது புரோக்கர் தொழில்தான் செஞ்ச்சான்க!ரொம்ப நேர்மை,தைரியம் ,சமயோகிதப்புத்தி,பழஞ் செட்டித்தெருஜெயராம அய்யர் எல்லாம் உங்க அப்பா சொல்றபடித்தான் நடப்பாங்க.
வேண்டியவன்,வேண்டாதவன்னு பாக்காம தீர்வு சொல்லுறதுல நேர்மை கெட்டிக்காரத்தனம் அப்பப்பா!இப்பத்தான் கோர்ட்,கேசுன்னு இழுத்துக்கிட்டு வருது.அந்த காலத்தப்பத்தி சொல்லன்னுனா சொல்லிக்கிட்டெ போகலாம். சரி வாப்பாவ கேட்டதாச் சொல்லு!செல் போன் நம்பர் தரேன் பேச சொல்லு.உங்க ஊரு நோம்புக்கஞ்சியும்,வாடாவும் இப்பவும் நாக்கு ஊருது.
டாக்டர் ஒரு நாளைக்கு வீட்ல அழச்சிக்கிட்டு நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வாங்களேன் -கபூர்.
வரனும்தானு பார்க்குறேன் எங்கே இப்படியே பொழுது போகுது, நேரமில்லா தொழில் நீ தான் பாக்கிறியே,சரி இது உனக்கு யார்?மாமா மகன்,மச்சினன்கூட.அப்படியா? போலிஸ் கேசு இல்லாம பாத்துகிட்டியலா?
எல்லாம் இவர இங்க கொண்டுவந்து சேர்த்த நானா முடிச்சிடலாம்ன்னு சொன்னார்.அவருக்கு தெரிந்த ஏரியா அதனால போலிஸுக்கு தகவல் கொடுக்க யாருமில்ல.பைக்க கூட ஊருக்கு போற வழியிலே அவரும் என் கசின்னும் எடுத்துக்கிட்டுப்போய்ட்டாங்க.அப்படி பிரச்சன வந்தாலும் சமளித்துகிடலாம்ங்ற சூழ்னிலைதான். ஒகே,ஓகே ஏதாவது பிரச்சனன்னா சொல்லுன்க என் கொழுந்தியா பையன் தான் நம்ம டிஸ்ரிக்ட் எஸ்.பி. சரி பன்னிக்கலாம்.சரி கபூர் நா இன்னும் மத்தப்பேசன்ட பாத்துட்டு வீட்டுக்குப்போறேன்.ராத்திரி பிரட்,பால் கொடுத்தா போதும்,மாத்திரை தரேன் நாளைக்கு வீட்டுக்குப்போயிடலாம்.அப்புரமா நோம்புகஞ்சி வாடா வெல்லாம் நல்லா சாப்புடலாம்.( வார்டெல்லாம் ஒரே சிரிப்பலை...)
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.